Published:Updated:

நாடாளுமன்ற வார்த்தைகள் விவகாரம்: ``நீக்கப்பட்டவையே தவிர, எதுவும் தடை செய்யப்படவில்லை!" - ஓம் பிர்லா

ஓம் பிர்லா

``1,100 பக்கங்கள்கொண்ட இந்த அகராதியை அவர்கள் படித்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. அப்படிப் படித்திருந்தால் அவர்கள் இத்தகைய தவறான கருத்தைப் பரப்பியிருக்க மாட்டார்கள்."- ஓம் பிர்லா

நாடாளுமன்ற வார்த்தைகள் விவகாரம்: ``நீக்கப்பட்டவையே தவிர, எதுவும் தடை செய்யப்படவில்லை!" - ஓம் பிர்லா

``1,100 பக்கங்கள்கொண்ட இந்த அகராதியை அவர்கள் படித்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. அப்படிப் படித்திருந்தால் அவர்கள் இத்தகைய தவறான கருத்தைப் பரப்பியிருக்க மாட்டார்கள்."- ஓம் பிர்லா

Published:Updated:
ஓம் பிர்லா

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வருகிற 18-ம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எந்தெந்த வார்த்தைகள் பயன்படுத்தக்கூடாது என்ற புத்தகத்தை, மக்களவைச் செயலகம் இன்று வெளியிட்டிருக்கிறது.

அதில், `ஊழல், கோழை, சர்வாதிகாரி, வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், கொரோனா பரப்புபவர், வாய்ஜாலம் காட்டுபவர், நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், காலிஸ்தானி, இரட்டை வேடம், குரூரமானவர், ஏமாற்றினார், கிரிமினல், முதலைக் கண்ணீர், அவமானம், கழுதை, கண்துடைப்பு, போலித்தனம், தவறாக வழிநடத்துதல், பொய், உண்மையல்ல, முட்டாள்தனம், பாலியல் தொல்லை, குண்டர்கள்' உள்ளிட்ட வார்த்தைகள் பயன்படுத்தப்படக்கூடாதென குறிப்பிடப்பட்டிருந்தன.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

ஒருவேளை நாடாளுமன்ற அவைகளில் இந்த வார்த்தைகள் இனி பயன்படுத்தப்பட்டால், அவை அவைக்குறிப்பிலிருந்து சபைத் தலைவரால் நீக்கப்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பு வெளியானது முதலே, எதிர்க்கட்சி எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-க்கள் பலரும் தங்கள் அதிருப்தியை தெரிவித்துவருகின்றனர்.

இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் கண்டனங்களுக்கு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா விளக்கமளித்திருக்கிறார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஓம் பிர்லா, ``நீக்கப்பட்ட வார்த்தைகள் அனைத்தும் எதிர்க்கட்சிகள், ஆளுங்கட்சியால் நாடாளுமன்றத்தில் பயன்படுத்தப்படுகின்றன. இதில் எதிர்க்கட்சிகள் மட்டுமே பயன்படுத்தும் வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து நீக்குவது போன்ற திட்டமெல்லாம் எதுவும் இல்லை. அவை நீக்கப்பட்டிருக்கின்றனவே தவிர... எந்த வார்த்தைகளும் தடை செய்யப்படவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஓம் பிர்லா
ஓம் பிர்லா
Twitter/@loksabhatv

முன்பெல்லாம் இது போன்ற நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாது வார்த்தைகள் அடங்கிய புத்தகம் வெளியிடப்பட்டது. காகிதங்கள் வீணாகாமல் இருக்க அதை இணையத்தில் வெளியிட்டோம். இப்போது நீக்கப்பட்ட வார்த்தைகளின் தொகுப்பை நாங்கள் வெளியிட்டிருக்கிறோம். இதில் எந்த வார்த்தைகளும் தடை செய்யப்படவில்லை. இது 1959 முதல் தொடரும் ஒரு வழக்கமான நடைமுறைதான். மேலும், 1,100 பக்கங்கள்கொண்ட இந்த அகராதியை அவர்கள் படித்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. அப்படிப் படித்திருந்தால் அவர்கள் இத்தகைய தவறான கருத்தைப் பரப்பியிருக்க மாட்டார்கள்" கூறினார்.