Published:Updated:

``சிஏஏ மூலம் சிறுபான்மையினரை முக்கியத்துவமற்றவர்களாக மாற்றுவதே பாஜக-வின் நோக்கம்" - அமர்த்தியா சென்

அமர்த்தியா சென்

``சிஏஏ-வை அமல்படுத்துவதன் மூலம், சிறுபான்மையினரின் பங்களிப்பைக் குறைப்பதும், அவர்களை முக்கியத்துவமற்றவர்களாக மாற்றுவதும்தான் பா.ஜ.க-வின் நோக்கம்." - அமர்த்தியா சென்

``சிஏஏ மூலம் சிறுபான்மையினரை முக்கியத்துவமற்றவர்களாக மாற்றுவதே பாஜக-வின் நோக்கம்" - அமர்த்தியா சென்

``சிஏஏ-வை அமல்படுத்துவதன் மூலம், சிறுபான்மையினரின் பங்களிப்பைக் குறைப்பதும், அவர்களை முக்கியத்துவமற்றவர்களாக மாற்றுவதும்தான் பா.ஜ.க-வின் நோக்கம்." - அமர்த்தியா சென்

Published:Updated:
அமர்த்தியா சென்

2019-ல் மீண்டும் மத்தியில் ஆட்சியைப் பிடித்ததையடுத்து பா.ஜ.க கொண்டுவந்த மிக முக்கிய அரசியல் நகர்வு குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ). பல்வேறு அரசியல் எதிர்ப்புகளையும் கடந்து தன்னுடைய பெரும்பான்மையால் பா.ஜ.க., இந்தச் சட்டத்தைக் கொண்டுவந்தது. அப்போது சிஏஏ-வுக்கு எதிரான போராட்டங்களில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

CAA-NRC-NPR
CAA-NRC-NPR

இந்த நிலையில் நோபல் பரிசுபெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென், சிஏஏ மூலம் சிறுபான்மையினரை முக்கியத்துவமற்றவர்களாக மாற்றுவதுதான் பா.ஜ.க-வின் நோக்கம் எனக் கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமர்த்தியா சென், ``நான் பார்க்கிற வரையில், சிஏஏ-வை அமல்படுத்துவதன் மூலம், சிறுபான்மையினரின் பங்களிப்பைக் குறைப்பதும், அவர்களை முக்கியத்துவமற்றவர்களாக மாற்றுவதும், நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்துப் பெரும்பான்மை சக்திகளை அதிகரிப்பதும்தான் பா.ஜ.க-வின் நோக்கம்.

அமர்த்தியா சென்
அமர்த்தியா சென்

மதச்சார்பற்ற, சமத்துவ தேசமாக இருக்கவேண்டிய இந்தியா போன்ற ஒரு நாட்டுக்கு, குடியுரிமை திருத்தச் சட்டம் மிகவும் துரதிஷ்டமானது, அடிப்படையில் இதுவொரு மோசமான நடவடிக்கை என்று எண்ணுகிறேன்" எனத் தெரிவித்தார்.

பாஜக
பாஜக

``பா.ஜ.க அரசின் செயல்பாடுகள் முன்னேற்றமடைந்திருப்பதாக நான் நினைக்கவில்லை. ஒவ்வோர் இந்தியருக்கும் சில உரிமைகள் உள்ளன என்ற அங்கீகாரம்தான் இந்தியாவுக்குத் தேவை" என்றார்.