Published:Updated:

`ஜெர்மனியின் நிலைதான் இந்தியாவுக்கு ஏற்படும்!' - `நோபல்' வெங்கட்ராமன் எச்சரிக்கை

குடியுரிமைச் சட்டத் திருத்தம் CAB | `நோபல்' வெங்கட்ராமன்

"உங்கள் மதமும் எங்கள் மதமும் ஒரே தரமுடையது அல்ல என்று 200 மில்லியன் மக்களிடம் அரசு கூறுவதைப் போன்ற பிரிவினை எதுவுமில்லை."

`ஜெர்மனியின் நிலைதான் இந்தியாவுக்கு ஏற்படும்!' - `நோபல்' வெங்கட்ராமன் எச்சரிக்கை

"உங்கள் மதமும் எங்கள் மதமும் ஒரே தரமுடையது அல்ல என்று 200 மில்லியன் மக்களிடம் அரசு கூறுவதைப் போன்ற பிரிவினை எதுவுமில்லை."

Published:Updated:
குடியுரிமைச் சட்டத் திருத்தம் CAB | `நோபல்' வெங்கட்ராமன்

``நீங்கள் குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர். அதனால் உங்கள் மதமும் எங்கள் மதமும் ஒரே தரமுடையது அல்ல என்று 200 மில்லியன் மக்களிடம் அரசு கூறுவதைப் போன்ற பிரிவினை எதுவுமில்லை" என்று இந்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராகக் குரல் கொடுத்திருக்கிறார் இந்திய வம்சாவளி நோபல் விஞ்ஞானி சர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன். இது தொடர்பாக 'தி டெலிகிராப்' செய்தி இதழுக்குப் பிரத்யேகப் பேட்டி ஒன்றை அவர் அளித்திருக்கிறார்.

CAB
CAB

இந்தியக் குடியுரிமையை மத அடிப்படையிலும் சிறுபான்மை அடிப்படையிலும் மறு வரையறை செய்யும் வகையிலான சட்டத் திருத்த மசோதாவை பா.ஜ.க அரசு மக்களவையில் நிறைவேற்றியிருக்கிறது. அஸ்ஸாம், திரிபுரா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட பகுதிகளில் இதற்கு எதிராக ஏற்கெனவே போராட்டம் வெடித்துள்ளன. இந்திய அறிஞர்கள் மற்றும் விஞ்ஞானிகள் இந்தச் சட்டத்திருத்தத்துக்கு எதிராகக் கையெழுத்து இயக்கம் ஒன்றை நடத்தி வருகின்றனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வெளிநாடு வாழ் இந்திய விஞ்ஞானிகளும் இந்த இயக்கத்தில் பங்கெடுத்துள்ளனர். இதற்கிடையே, 2009-ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்ற இந்திய வம்சாவளி விஞ்ஞானியான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் இதுகுறித்துப் பேசுகையில், ``குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராகக் கையெழுத்து இடச்சொல்லி எனக்கும் அறிக்கை வந்தது.

CAB
CAB
இன்று உலகமே தேசியவாதத்தாலும் இனவெறியாலும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவையும் இந்த நோய் தாக்கியுள்ளது.
'நோபல்' வெங்கட்ராமன்

ஆனால், 1971-லேயே நான் இந்தியாவைவிட்டு வெளியேறிய நபர் என்பதால் என்னால் அதில் கையெழுத்து இடமுடியாது. ஆனால், ஒன்று மட்டும் சொல்ல நினைக்கிறேன். நான் வக்கீல் இல்லை, ஆனால், சுயசிந்தனையுள்ள எந்த நீதிமன்றமும் இந்தக் குடியுரிமை திருத்தத்தை ஏற்றுக்கொள்ளாது. இன்று உலகமே தேசியவாதத்தாலும் இனவெறியாலும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவையும் இந்த நோய் தாக்கியுள்ளது.

ஹிட்லர்
ஹிட்லர்
நாஜிக்களின் தாக்கத்திலிருந்தும் ஹிட்லரின் பாதிப்பிலிருந்தும் விடுபடுவதற்கு 50 ஆண்டுகள் ஆகின.

இந்தியாவின் மீது எனக்குப் பெரிய மதிப்பு உண்டு. நான் படிப்பதற்குப் பலவகையில் அந்த நாடு எனக்கு உதவியிருக்கிறது. ஆனால், அதே தேசத்தில் அரசே இன்று மதத்தால் மக்களைப் பிரிக்கிறது. இனச் சிறுபான்மையினர்களிலும் பெண்களிலும் அறிவார்ந்த நபர்களை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த நூற்றாண்டில் பல இயக்கங்களும் தனிநபர்களும் போராடி வருகிறார்கள். இளைஞர்கள் போட்டி போட்டுக்கொண்டு அறிவார்ந்து முன்னேறிவருகிறார்கள், புதிதாகப் பலவற்றைக் கண்டுபிடிக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேருக்கும் இந்தச் சட்டத்திருத்தம் பெரிய இடர்ப்பாடாக இருக்கும். நினைவில் இருக்கட்டும், அறிவியல் சுதந்திரமாகச் செயல்பட வேண்டியது. குறிப்பிட்ட எந்த மதமும் வெறியும் அதில் திணிக்கப்படும்போது அதனால் சுதந்திரமாகச் செயல்பட முடியாது. ஜெர்மனியின் அறிவியல் செயல்பாடுகள் நாஜிக்களின் தாக்கத்திலிருந்தும் ஹிட்லரின் பாதிப்பிலிருந்தும் விடுபடுவதற்கு 50 ஆண்டுகள் ஆகின. கம்யூனிச சித்தாந்தத்திலிருந்து விடுபடாமல் அறிவியலை அணுகிய ரஷ்யா இன்றளவும் பின் தங்கியே இருக்கிறது. குடியுரிமைச் சட்டத்திருத்தத்தை மேற்கொண்டால் அந்த நிலைமைதான் இந்தியாவுக்கும் ஏற்படும்" என்று கூறியிருக்கிறார்.

தொடர்புடைய செய்திக் கட்டுரைகள்:

> `இணைய சேவை துண்டிப்பு; ராணுவம் அழைப்பு! அஸ்ஸாம், திரிபுராவில் தொடரும் போராட்டம் #CAB

> `குடியுரிமை மசோதாவும் நடைபாதையில் வசிப்பவர்களும்...!' - ஜவாஹிருல்லா எழுப்பும் கேள்வி

> குடியுரிமை மசோதாவை எதிர்க்கும் தமிழக எம்.பிக்களின் வாதங்கள்! #CAB

> `ஈழத்தமிழர்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள்!' - நாடாளுமன்றத்தில் ஒலித்த ஒருமித்த குரல் #CAB