Published:Updated:

கல்வான் பள்ளத்தாக்கு மோதல் விவகாரம்: சீன வீரர்கள் 41 பேர் பலி? - நடந்ததும் நடப்பதும் என்ன?!

கல்வான் - விவகாரம்

இந்திய - சீன ராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், அதிகபட்சமாக 41 பேர் சீனத் தரப்பில் உயிரிழந்ததாக ஆஸ்திரேலிய புலனாய்வுப் பத்திரிகை தெரிவித்திருக்கிறது.

கல்வான் பள்ளத்தாக்கு மோதல் விவகாரம்: சீன வீரர்கள் 41 பேர் பலி? - நடந்ததும் நடப்பதும் என்ன?!

இந்திய - சீன ராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், அதிகபட்சமாக 41 பேர் சீனத் தரப்பில் உயிரிழந்ததாக ஆஸ்திரேலிய புலனாய்வுப் பத்திரிகை தெரிவித்திருக்கிறது.

Published:Updated:
கல்வான் - விவகாரம்

கடந்த 2020-ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன ராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் அதிகபட்சமாக 41 பேர் சீனத் தரப்பில் உயிரிழந்ததாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த புலனாய்வுப் பத்திரிகை `கிளாக்ஸன்' பரபரப்பு தகவலை வெளியிட்டிருக்கிறது. தங்கள் தரப்பில் வெறும் நான்கு பேர் மட்டுமே உயிரிழந்ததாக இதுவரையில் கூறிவந்த சீனாவின் கருத்து முற்றிலும் பொய் என்பது இதன் மூலம் நிரூணமாகியிருக்கிறது.

இந்தியா - சீனா எல்லை
இந்தியா - சீனா எல்லை

கல்வான் பள்ளத்தாக்கு மோதல்:

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான எல்லைப் பிரச்னை, பல தசாப்தங்களாக நீடித்துவருகிறது. இந்த நிலையில், கடந்த 2020, ஜூன் 15-ம் தேதி லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு எல்லைப் பகுதியில் இந்தியா மற்றும் சீன ராணுவப் படையினருக்கு இடையே கடுமையான மோதல் வெடித்தது. இருதரப்பு வீரர்களும் ஒருவரை ஒருவர் கட்டையாலும், இரும்புக்கம்பிகள் மற்றும் கற்களாலும் மாறிமாறித் தாக்கிக்கொண்டனர். இந்த மோதலில், இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். பின்வாங்கிய சீனப் படையினர் தரப்பில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற தகவலை சீன ராணுவம் வெளியில் கூற மறுத்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உயிரிழப்பை ஒப்புக்கொண்ட சீனா:

இருப்பினும் இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் உளவுப்பிரிவு அமைப்புகள் சீனத் தரப்பில் 40-க்கும் மேல் பலி எண்ணிக்கை இருக்கும் எனச் சந்தேகம் தெரிவித்தன. குறிப்பாக, ரஷ்யாவைச் சேர்ந்த செய்தி நிறுவனமான டாஸ் (TASS - Russian news agency), சீனத் தரப்பில் 45 வீரர்களுக்கும் மேல் இறந்திருக்கலாம் எனக் கூறியது. இந்தச் செய்திகளுக்கெல்லாம் மறுப்பு தெரிவிக்கும் வகையில், பல மாதங்கள் கழித்து பதிலளித்த சீனா, தங்கள் தரப்பில் வெறும் நான்கு பேர் மட்டுமே உயிரிழந்ததாகக் கூறியது.

கல்வான் பள்ளத்தாக்கு மோதல் நினைவுச்சின்னம்
கல்வான் பள்ளத்தாக்கு மோதல் நினைவுச்சின்னம்

இந்தத் தகவல் சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தின் (People's Liberation Army) அதிகாரபூர்வ நாளிதழ் பி.எல்.ஏ டெய்லியில் (PLA Daily) வெளியானது. மேலும், இதை மேற்கோள்காட்டி சீன அரசாங்கத்தின் அதிகாரபூர்வ நாளிதழான குளோபல் டைம்ஸ் (Global Times) நாளிதழும் கல்வான் பள்ளத்தாக்கில் உயிரிழந்த சீன வீரர்களின் பெயர்கள், விவரங்களை முதன்முறையாக அறிவித்தது.

கல்வான் பள்ளத்தாக்கு மோதல் நினைவுச் சின்னம்
கல்வான் பள்ளத்தாக்கு மோதல் நினைவுச் சின்னம்

தற்போது வெளியாகியிருக்கும் பரபரப்பு தகவல்:

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல புலனாய்வுப் பத்திரிகையான `கிளாக்ஸன்' (Klaxon), கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் இந்திய வீரர்களைவிட சீன ராணுவம் அதிக உயிரிழப்புகளைச் சந்தித்ததாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டு, பரபரப்பு கிளப்பியிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கிளாக்ஸன் பத்திரிகை சார்பில் அமைக்கப்பட்ட உண்மை கண்டறியும் புலனாய்வு செய்திக்குழுவினர், சம்பவம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு அதன் அடிப்படையில் தயாரித்த ஆய்வறிக்கையை தற்போது செய்தியாக வெளியிட்டிருக்கின்றனர்.

கிளாக்ஸன்
கிளாக்ஸன்
klaxon australia

அதில், இந்திய வீரர்களின் தாக்குதலைத் தாக்குப்பிடிக்க முடியாமல் பின்வாங்கிய சீன வீரர்கள், ஆற்றில் குதித்து தப்பிச்செல்ல முடிவுசெய்திருக்கின்றனர். அவசரகதியில், தண்ணீரில் மூழ்கிவிடாமல் இருப்பதற்கு அணியும் ‘வாட்டர் பேன்ட்'டைக்கூட அணியாமல் உறை பனியிலும், காரிருளிலும் சீனப் படையினர் ஆற்றைக் கடக்க முயன்றுகொண்டிருந்தபோது, ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் அப்படியே அடித்துச் செல்லப்பட்டிருக்கின்றனர்.

கல்வான் பள்ளத்தாக்கு
கல்வான் பள்ளத்தாக்கு
Google Earth

இந்தச் சம்பவத்தில், மொத்தம் 38 சீன வீரர்கள் உயிரிழந்தனர் என அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. மேலும், மூன்று சீன வீரர்கள் இந்திய வீரர்களுடன் நேருக்கு நேர் ஏற்பட்ட மோதலில் காயமடைந்து உயிரிழந்ததாகவும் கூறியிருக்கிறது. ஆகமொத்தம், சீனத் தரப்பில் 41 வீரர்கள் உயிரிழந்திருப்பதாக கிளாக்ஸன் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், இந்த மோதல் சம்பவத்துக்குப் பிறகு உயிரிழந்த சீனப் படையினரின் உடல்களை முதலில் ஷிகுவான்ஹே தியாகி கல்லறைக்கு எடுத்துச்செல்லப்பட்டதாகவும், அதன் பின்னர் வீரர்களின் உடல்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டதாகவும் விவரித்திருக்கிறது. அதேசமயம், உயிரிழந்த வீரர்களைப் பற்றிய எந்தத் தகவலும் சீன இணைய உலகில் இல்லை என்றும் கிளாக்ஸன் தெரிவித்திருக்கிறது.

இந்தியா - சீனா
இந்தியா - சீனா

ஆஸ்திரேலியப் பத்திரிகை தற்போது வெளியிட்டிருக்கும் இந்த புலனாய்வுச் செய்தி சீன அரசாங்கத்துக்குப் புதுத் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு சீனா என்ன பதில் வைத்திருக்கிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்தியா-சீனா
இந்தியா-சீனா

ஒலிம்பிக் தொடக்கவிழாவைப் புறக்கணித்த இந்தியா:

இந்த நிலையில், சீனாவில் தொடங்கியிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில், ஜோதியை ஏந்தும் நிகழ்ச்சிக்குத் தேர்வு செய்யப்பட்ட 1,200 பேர்கொண்ட குழுவில், இந்தியாவுடனான கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் காயமடைந்த குய் ஃபபாவோ (Qi Fabao) என்ற சீன ராணுவ வீரரை அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டு இடம்பெறவைத்திருக்கிறது.

சீனா குளிர்கால ஒலிம்பிக் போட்டி
சீனா குளிர்கால ஒலிம்பிக் போட்டி

இதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக, `ஒலிம்பிக் நிகழ்ச்சியிலும் சீனத்தரப்பு அரசியல் செய்திருப்பது உண்மையில் வருந்தத்தக்கது. எனவே, சீனாவில் இருக்கும் இந்திய தூதரகப் பொறுப்பாளர்கள், குளிர்கால ஒலிம்பிக்கின் தொடக்க மற்றும் நிறைவுவிழாவில் கலந்துகொள்ள மாட்டார்கள்' என இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. மேலும், தூர்தர்ஷன் சேனலும் `சீனாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக்கின் விழாக்களை நேரடியாக ஒளிபரப்ப மாட்டோம்' என்றும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism