Published:Updated:

`பாகிஸ்தான் தாக்குதல் நடத்த திட்டம்’- அலர்ட் செய்யும் காஷ்மீர் தலைமைச் செயலாளர்

கலிலுல்லா.ச

``காஷ்மீரில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது.''

Subramaniyam
Subramaniyam ( ANI )

ஜம்மு காஷ்மீர் தலைமைச் செயலாளர் பி.வி.ஆர் சுப்ரமணியம் ஸ்ரீநகரில் செய்தியாளர்களைச் சந்தித்துப்பேசினார். அப்போது அவர், ``ஜம்மு - காஷ்மீரில் பள்ளிகள் திங்கள்கிழமை முதல் வழக்கம் போலச் செயல்படும். மக்களுக்கான பொதுபோக்குவரத்து விரைவில் இயக்கப்படும். அரசு அலுவலகங்கள் இன்று முதல் வழக்கம் போலச் செயல்படும். தொலை தொடர்பு வசதிகள் படிப்படியாக வழங்கப்பட்டு வருகின்றன. 22 மாவட்டங்களில் 12 மாவட்டங்கள் வழக்கம் போல இயங்கி வருகிறது. 5 மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, சுமுகமான சூழல் நிலவி வருகிறது. புதிய நடவடிக்கைகளால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. திங்கள் அன்று முதல் ஸ்ரீநகர் எந்தவித தடையுமின்றி இயங்கும். அப்பகுதியில் இன்று இரவு முதல் தொலை தொடர்பு இணைப்புகள் வழங்கப்படும்.

J&K chief secretary
J&K chief secretary
ANI

அதேபோல ஜம்மு காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள அனைத்துக் கட்டுப்பாடுகளும் விரைவில் தளர்த்தப்படும். ஜம்மு- காஷ்மீரின் நிலைமை மீண்டும் பழையபடி திரும்ப மக்களின் ஒத்துழைப்பு அவசியம். சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிப்பதற்கே சட்ட விதிகளின்படி ஒரு சில தனிநபர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகள் முழுமையாக இயங்குகின்றன.

`ஜம்மு-காஷ்மீர் விஷயங்கள் தவறாகப் போகின்றன'- தலைவர் பதவியில் மீண்டும் சோனியா காந்தி!

கடந்த காலங்களிலும் இதுபோன்ற நடவடிக்கைகள் நடந்துள்ளன. தடுப்புக்காவல்கள் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு மதிப்பீடுகளின் அடிப்படையில் தகுந்த முடிவுகள் எடுக்கப்படும். கடந்த பதினைந்து நாள்களில் எடுக்கப்பட்ட முடிவை அமல்படுத்துவதில், எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு அரசாங்கம் சில தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து உள்ளது.

srinagar
srinagar
ANI

செயற்கைக்கோள் மற்றும் கேபிள் டிவி இணைப்புகள் செயல்பாட்டில் உள்ளன. மேலும், காஷ்மீரில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது” என்றார்.