Published:Updated:

``ஆளுநர் ஒன்றும் தலைமை ஆசிரியரல்ல; இவர்களால்தான் நாடு பின்தங்கியிருக்கிறது" - அரவிந்த் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால் - வி.கே.சக்சேனா

``நமது குழந்தைகளை எங்கு படிக்க அனுப்ப வேண்டும் என்பதை தீர்மானிக்க இவர் யார்?" என கவர்னர் குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் பேசியிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

``ஆளுநர் ஒன்றும் தலைமை ஆசிரியரல்ல; இவர்களால்தான் நாடு பின்தங்கியிருக்கிறது" - அரவிந்த் கெஜ்ரிவால்

``நமது குழந்தைகளை எங்கு படிக்க அனுப்ப வேண்டும் என்பதை தீர்மானிக்க இவர் யார்?" என கவர்னர் குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் பேசியிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

Published:Updated:
அரவிந்த் கெஜ்ரிவால் - வி.கே.சக்சேனா

டெல்லி சட்டசபையில் மூன்று நாள் குளிர்காலக் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இரண்டாம் நாளான நேற்று டெல்லி ஆளுநர் வி.கே.சக்சேனா அரசு நிர்வாகத்தில் தலையிடுவதை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ அடிஷி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.

அதைத் தொடர்ந்து பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ``நமது தலைமீது அமர்ந்திருக்கும் ஆளுநர் என்பவர் யார், எங்கிருந்து வந்தார்... எனது வீட்டுப் பாடங்களை எனது ஆசிரியர்கள்கூட இந்த அளவுக்கு ஆய்வு செய்ததில்லை. ஆனால், ஆளுநர் எனது ஒவ்வொரு கோப்பையும் அந்த அளவுக்கு ஆய்வு செய்கிறார்.

டெல்லி ஆளுநர் வி.கே.சக்சேனா
டெல்லி ஆளுநர் வி.கே.சக்சேனா
ட்விட்டர்

என்னை முதல்வராகத் தேர்ந்தெடுத்தது மக்கள்தான். ஆளுநர் எனக்குத் தலைமை ஆசிரியரல்ல. ஆளுநர் சக்சேனா பண்ணையார் மனநிலைகொண்டவர். அதனால்தான் ஏழைக் குழந்தைகளுக்கு நல்ல கல்வி கிடைப்பதை அவர் தடுக்கிறார். ஆனால், பா.ஜ.க எம்.பி., எம்.எல்.ஏ-க்களின் பிள்ளைகள் வெளிநாடுகளில் படிக்கின்றனர். நமது குழந்தைகளை எங்கு படிக்க அனுப்ப வேண்டும் என்பதைத் தீர்மானிக்க இவர் யார்?

ஆளுநரைப் போன்றவர்களால்தான் நாடு பின்தங்கியிருக்கிறது. ஒருமுறை நான் ஆளுநரைச் சந்தித்தபோது, தன்னால்தான் டெல்லி மாநகராட்சித் தேர்தலில் 14 வார்டுகளை பா.ஜ.க கைப்பற்றியதாகவும், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் டெல்லியிலுள்ள ஏழு தொகுதிகளையும் பா.ஜ.க கைப்பற்றும் என்றும் கூறினார். வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரம் இல்லை... நாளை நாங்களேகூட மத்தியில் ஆட்சிக்கு வரலாம்.

டெல்லி ஆளுநர் வி.கே.சக்சேனா - முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி ஆளுநர் வி.கே.சக்சேனா - முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
ட்விட்டர்

போலீஸ், நிலம், பொது ஒழுங்கு ஆகியவற்றைத் தவிர, இந்த விவகாரங்களில் ஆளுநர் சொந்தமாக முடிவெடுக்கக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருப்பதை கவனிக்க வேண்டும்" எனக் கடுமையாகச் சாடினார்.

அதைத் தொடர்ந்து பேசிய எம்.எல்.ஏ அடிஷி, "ஆசிரியர்கள் பின்லாந்தில் பயிற்சி பெறக் கூடாது என்று ஆளுநர் உத்தரவிட்டது சட்டவிரோதமானது. அவர் சொந்தமாக முடிவெடுக்கக் கூடாது. அவர் அரசியல் சட்டப் பதவி வகிக்கிறாரே தவிர பா.ஜ.க-வின் ஏஜென்ட் அல்ல" எனத் தெரிவித்திருக்கிறார்.