Published:Updated:

``என் மகள் செய்த காரியத்தை நினைத்து வருந்துகிறேன்..!" - மக்களிடம் மன்னிப்புக் கேட்ட மிசோரம் முதல்வர்

மிசோரம் முதல்வர் ஜோரம்தங்கா ( இன்ஸ்டாகிரம் )

``என் மகள் மிலாரி சாங்டே மருத்துவரிடம் நடந்துகொண்டதை நினைத்து, நாங்கள் முற்றிலும் தவறு செய்திருக்கிறோம் என்பதை உணர்கிறோம்." - மிசோரம் முதல்வர் ஜோரம்தங்கா.

``என் மகள் செய்த காரியத்தை நினைத்து வருந்துகிறேன்..!" - மக்களிடம் மன்னிப்புக் கேட்ட மிசோரம் முதல்வர்

``என் மகள் மிலாரி சாங்டே மருத்துவரிடம் நடந்துகொண்டதை நினைத்து, நாங்கள் முற்றிலும் தவறு செய்திருக்கிறோம் என்பதை உணர்கிறோம்." - மிசோரம் முதல்வர் ஜோரம்தங்கா.

Published:Updated:
மிசோரம் முதல்வர் ஜோரம்தங்கா ( இன்ஸ்டாகிரம் )

மிசோரம் முதல்வர் ஜோரம்தங்காவின் மகள் மிலாரி சாங்தே, ஐஸ்வால் பகுதியில் இருக்கும் பிரபல தோல் மருத்துவமனைக்கு, சிகிச்சைக்கான முன் அனுமதி பெறாமல் சென்றிருக்கிறார். அந்த மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் சோனுனசங்கா, ``ஏற்கெனவே அனுமதி கேட்டுப் பெற்ற நோயாளிகளைத்தான் கவனிக்க முடியும். அதனால், முன் அனுமதி பெறாத யாரையும் இப்போது கவனிக்க முடியாது" என மறுத்திருக்கிறார். மருத்துவரின் பதிலால் ஆத்திரமடைந்த முதல்வரின் மகள் மிலாரி சாங்தே மருத்துவரைத் திட்டி, அவரைத் தாக்கியிருக்கிறார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

அதைத் தொடர்ந்து, முதல்வர் மகளின் இந்தச் செயலுக்கு மிசோரமில் சுமார் 700 மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்து தங்கள் பணியிடங்களுக்கு கறுப்பு பேட்ஜ் அணிந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், மிசோரம் முதல்வர் ஜோரம்தங்கா மருத்துவர்களிடமும், பொதுமக்களிடமும் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள கடிதத்தில், ``என் மகள் மிலாரி சாங்தே மருத்துவரிடம் நடந்துகொண்டதை நினைத்து, நாங்கள் முற்றிலும் தவறு செய்திருக்கிறோம் என்பதை உணர்கிறோம். மருத்துவர்கள், பொதுமக்களிடம் அதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்.

நானும், என் மனைவியும் மூன்று முறை அந்த மருத்துவரைச் சந்தித்து மன்னிப்புக் கேட்டோம். மருத்துவரும், அவர் குடும்பத்தினரும் மிகவும் அன்பாகவும், புரிந்துணர்வுடனும் நடந்துகொண்டார்கள். மருத்துவரும், அவர் குடும்பத்தினரும் மிகவும் முதிர்ச்சியடைந்தவர்கள். நாங்கள் அவர்களை மிகவும் பாராட்டுகிறோம். அவர்களுக்கு என்னுடைய மகளால் நிகழ்ந்த சம்பவத்தை நினைக்கும்போதெல்லாம் எங்களுக்குச் சங்கடமாக இருக்கிறது.

அதேபோல, மருத்துவரை அவமானப்படுத்தியதற்கு, இந்திய மருத்துவர்கள் சங்கம் எடுத்த போராட்ட முன்னெடுப்பு முதிர்ச்சியடைந்த நடவடிக்கை. அதை நாங்கள் உண்மையிலேயே மதிக்கிறோம். மேலும் இது போன்ற சம்பவம் நடக்காமல் இருக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக IMA ( Indian Medical Association Mizoram) உறுப்பினர் கூறுகையில், ``முதல்வர் மிகவும் முதிர்ச்சியான முறையில் இந்தப் பிரச்னையைக் கையாண்டார். இது ஓர் இதயப்பூர்வமான தனிப்பட்ட அறிக்கை... அதை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம். எனவே மன்னிக்கவும் மறக்கவும் முடிவு செய்திருக்கிறோம்'' எனத் தெரிவித்திருக்கிறார்.