Published:Updated:

`குரான், பைபிள் போல்தான்... தவறில்லை'- பகவத் கீதை விஷயத்தில் ஆதரவு தெரிவித்த டி.டி.வி!

ttv dinakaran
ttv dinakaran

பகவத் கீதையை தொழில்நுட்ப பாடத்தில் இல்லை தனி பாடமாக தான் உள்ளது. பகவத்கீதையை பாடத்திட்டத்தில் வைப்பது ஒன்றும் தவறில்லை.

அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமத்தின் அறிவுறுத்தலின்பேரில், பொறியியல் படிப்பின் 3-வது செமஸ்டரில் இந்தப் படிப்பு சேர்க்கப்பட்டுள்ளது. தத்துவவியல் படிப்பாகப் பகவத் கீதையை இந்த ஆண்டு முதல் எம்.ஐ.டி, ஏ.சி.டி, எஸ்.ஏ.பி, சி.இ.ஜி ஆகிய கல்வி வளாகத்தில் படிக்கும் மாணவர்களின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுகிறது எனவும் அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியது.

TTV Dinakaran
TTV Dinakaran

இதற்கு தி.மு.க, ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, `பகவத் கீதையை மாணவர்கள் விருப்பபடமாக படிக்கலாம்’ என அண்ணா பல்கலைகழகம் சார்பில் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றகழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், `பகவத் கீதையை பாடத்திட்டத்தில் சேர்ப்பதில் தவறில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

சென்னையில் பேசிய டி.டி.வி.தினகரன், ``காந்தியின் 150 பிறந்த நாள், பெருந்தலைவர் காமராஜரின் நினைவு நாளில் மரியாதை செய்துள்ளோம். நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் முறைகேடுகளை கண்டறிந்து விசாரித்து வருகின்றனர். தமிழக மாணவர்களை விசாரிப்பது போல் மற்ற மாநிலங்களில் இருந்து வந்துள்ள மாணவர்களையும் விசாரிக்க வேண்டும். இது போல பிரச்சனைகளுக்கு தான் நீட் தேர்வில் இருந்து மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும். யார் முறைகேடாக வந்தாலும் விசாரணை செய்ய வேண்டும்.

Anna University
Anna University

அண்ணாபல்கலை கழகத்தில் பகவத் கீதையை தொழில்நுட்ப பாடத்தில் இல்லை. தனி பாடமாக தான் உள்ளது. பகவத்கீதையை பாடத்திட்டத்தில் வைப்பது ஒன்றும் தவறில்லை. பகவத் கீதையை மதிப்பது போல குரானையும், பைபிளையும் மதிக்கப்படுகிறது. பகவத் கீதையை பாடமாக கொண்டுவருவதை விவாதிக்க வேண்டாம். சசிகலாவை சட்டரீதியாக வெளியே கொண்டுவருவதற்கான வேலைகள் நடந்து வருகிறது” என்றார். தொடர்ந்து, இடைத்தேர்தல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், சின்னம் பெறுவதற்கான நீதிமன்றத்தில் உள்ளது அதன் விசாரனை தேதி அக்டோபர் 17 கொடுத்துள்ளனர்.நிலையான சின்னம் பெற்றுதான் போட்டியிட வேண்டும் என இருக்கிறோம்” என தெரிவித்தார்

பின் செல்ல