Published:Updated:

`சென்சஸுக்கு ஒத்துழைப்பு கொடுக்கிறோம்; ஆனால்...!' - கேரள அரசு புதிய அறிவிப்பு

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

``சென்சஸ் தொடர்பான நடவடிக்கைகள் என்.பி.ஆர்-உடன் குழப்பத்தை ஏற்படுத்தினால் சென்சஸ் எடுப்பது மிகவும் கடினம் என்று மாவட்ட ஆட்சியர்களும் தகவல்கள் தெரிவித்துள்ளனர்” என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்திருக்கிறார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப்பெற வலியுறுத்தி கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கேரள மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் மற்றும் சில மத்திய அமைச்சர்கள் உட்பட பலரும் இதற்கு எதிராக தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். இந்தநிலையில் முதல்வர் பினராயி விஜயன், தேசிய மக்கள் தொகைப் பதிவேடு குறித்த பணிகளை கேரளாவில் அனுமதிக்கப்போவதில்லை என்றும் அதேநேரம் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

பினராயி  விஜயன், ஆரிஃப் முகமது கான்
பினராயி விஜயன், ஆரிஃப் முகமது கான்
http://www.keralacm.gov.in/

இதுதொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய கேரள அமைச்சர் ஏ.சி.மொய்தீன், ``தேசிய மக்கள்தொகை பதிவேட்டுக்குத் தொடர்புடைய சென்சஸ் கேள்விகள் கேரளாவில் பயன்படுத்தப்போவதில்லை என சென்சஸ் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க உள்ளோம்” என்று கூறினார்.

``உண்ணாவிரதம் முதல் உச்ச நீதிமன்றம் வரை" - சி.ஏ.ஏ-வுக்கு எதிராகத் தொடரும் பினராயி அதிரடிகள்!

மாநில அரசு இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ``சென்சஸ் தொடர்பான கேள்விகளில் மக்களின் பிறந்த தேதி மற்றும் பெற்றோர் பற்றிய விவரங்கள் தொடர்பான கேள்விகளை விலக்க வேண்டும் எனக் கண்காணிப்பு அதிகாரிகளிடம் மாநில அரசு வலியுறுத்தும். மக்கள் அனைவரும் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இந்த அச்சத்திலிருந்து மக்களை மீட்டெடுப்பதும் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிப்பதும் அரசின் கடமையாகும். என்.பி.ஆர் மற்றும் என்.ஆர்.சி ஆகியவற்றை அமல்படுத்தினால் மோசமான நிலைமை உருவாகும். அதனால்தான், மாநில அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. நாடு முழுவதும் போராட்டத்தைத் தூண்டிய என்.ஆர்.சி-க்கு என்.பி.ஆர் வழிவகுக்கும்” என்று கூறப்பட்டுள்ளது.

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

மேலும், ``என்.பி.ஆர்-ஐ அமல்படுத்துவது மாநிலத்தில் மிகவும் மோசமான சூழலை உருவாக்கும் என்று காவல்துறை தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். சென்சஸ் தொடர்பான நடவடிக்கைகள் என்.பி.ஆர்-உடன் குழப்பத்தை ஏற்படுத்தினால் சென்சஸ் எடுப்பது மிகவும் கடினம் என்று மாவட்ட ஆட்சியர்களும் தகவல்கள் தெரிவித்துள்ளனர்” என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

`பள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் அரசியலமைப்பு!’- கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு
பின் செல்ல