Published:Updated:

"ரஜினிக்கு அப்பவே ஆலோசனை சொன்னேன்!"- ரகசியம் சொல்லும் சீமான்!

சீமான்
சீமான்

"என்னை பி.ஜே.பியின் ‘பி' டீம் என்பவர்கள்தான் மெயின் டீமாக இருக்கிறார்கள்." - சீமான்

தன் கட்சித் தம்பிகளுக்காக என்றில்லை, நடிகர்கள் சூர்யா, விஜய்க்கு ஒரு பிரச்னை என்றாலும் ‘அண்ணனாகத் துணை நிற்பேன்' என அதிரடி அறிக்கைகளை வெளியிட்டு வரும் சீமானிடம் தற்கால அரசியல் சூழல் குறித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

'இந்துத்துவ அஜென்டாபடிதான் சீமான் செயல்படுகிறார்' என்கிற விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றனவே?

‘‘அதெல்லாம் சும்மா கிளப்பிவிடுவது. நான் இறை நம்பிக்கையற்று நீண்டகாலம் பயணம் செய்தவன். இன மீட்சி என்று வரும்போது தமிழர் வழிபாட்டை மீட்பதற்காக சில வேலைகளைச் செய்தேன். உடனே, ‘பாருங்கள், சீமான் இந்துத்துவத்தைத் தூக்கிப் பிடிக்கிறார்' என விமர்சனம் செய்கிறார்கள். நான் என் மெய்யியல் கோட்பாட்டைத்தான் தூக்கிப் பிடிக்கிறேன். அதைப் பார்த்து இளைஞர்கள் எழுச்சியோடு என்னை நோக்கிப் படையெடுத்து வருகிறார்கள். பா.ஜ.க அதைக் காப்பியடித்தது, அரசியல் செய்ய நினைத்தது. ஆனால், அது எடுபடவில்லை. என் அளவுக்கு பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் அமைப்பை விமர்சனம் செய்தவர்கள் தமிழ்நாட்டில் யாரும் இல்லை. என்னை பி.ஜே.பியின் ‘பி' டீம் என்பவர்கள்தான் மெயின் டீமாக இருக்கிறார்கள்."

 சீமான்
சீமான்

நாம் தமிழர் கட்சியினர் மேடைகளிலும் சமூக வலைதளங்களிலும் மிகவும் அநாகரிகமாகப் பேசுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றனவே?

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன?

மாநில உரிமைகள் சார்ந்த தி.மு.க அரசின் நடவடிக்கைகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?

அரசியலுக்கு வரவே போவதில்லை என்று முற்றுப்புள்ளி வைத்துவிட்டாரே ரஜினி?

விஜய் எதிர்காலத்தில் அரசியலுக்கு வந்தால் வரவேற்பீர்களா?

மூச்சுக்கு முன்னூறு முறை பிரபாகரன் பற்றிப் பேசும் நீங்கள், ‘மேதகு' படம் பற்றி வாய் திறக்கவில்லையே?

‘நடக்காத விஷயங்களைக் கதைகளாகச் சொல்லி நீங்கள்தான் பிரபாகரனை இழிவுபடுத்துகிறீர்கள்’ எனப் பலர் விமர்சனம் செய்கிறார்களே?

‘மீ டூ' குற்றச்சாட்டைக் கண்டுகொள்ளாமல் வைரமுத்துவைப் பாராட்டுவது சரியா?

உங்கள் மீதான நடிகை விஜயலட்சுமியின் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் குறித்து பற்றி என்ன சொல்கிறீர்கள்?

இப்படிப் பரபரப்பான கேள்விகளுக்கு மிகவும் வெளிப்படையாக சீமான் பதிலளிக்கும் வீடியோவைக் காண கீழேயிருக்கும் லிங்கை கிளிக் செய்யுங்கள்.

அடுத்த கட்டுரைக்கு