Published:Updated:

``மத்திய அரசு தேர்தல் நேரத்தில் ஹிஜாப் விவகாரத்தை கையிலெடுத்து இழிவான பிரசாரம் செய்கிறது!" - சீமான்

சீமான்

`ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம், ஓரே குடும்ப அட்டை போன்றவற்றைக் கூறும் மத்திய அரசு ஒரே குளம், ஒரே சுடுகாடு என்பதை வலியுறுத்துவதில்லை!' - சீமான்

``மத்திய அரசு தேர்தல் நேரத்தில் ஹிஜாப் விவகாரத்தை கையிலெடுத்து இழிவான பிரசாரம் செய்கிறது!" - சீமான்

`ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம், ஓரே குடும்ப அட்டை போன்றவற்றைக் கூறும் மத்திய அரசு ஒரே குளம், ஒரே சுடுகாடு என்பதை வலியுறுத்துவதில்லை!' - சீமான்

Published:Updated:
சீமான்

தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் மாநகராட்சிகளில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் மேற்கொண்டார். முதலில் கும்பகோணத்தில் நடைபெற்றக் கூட்டத்தில் கலந்துகொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்த பின்னர் தஞ்சாவூர் வந்த அவருக்கு அக்கட்சி நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.

செய்தியாளர் சந்திப்பில் சீமான்
செய்தியாளர் சந்திப்பில் சீமான்

தஞ்சாவூர் ரெட்டிபாளையம் சாலையிலுள்ள திருமண மண்டபம் ஒன்றில் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் சீமான் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பிரசாரம் மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியாதவாது, ``ஊழலற்ற உள்ளாட்சி மலர வேண்டும் என்பதற்காக இந்தத் தேர்தலைச் சந்திக்கிறோம். இதில், எண்ணற்ற இடையூறுகள் வருகின்றன. இதையெல்லாம் எதிர்கொண்டு நாங்களும் போட்டியிடுகிறோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கடந்த 8 ஆண்டுகளில் மத்திய அரசுப் பண மதிப்பிழப்பு, தனியார்மயம், ஜிஎஸ்டி, பொதுத் துறைகள் விற்பனை போன்றவற்றைத் தவிர, வேறெந்த சாதனையையும் செய்யவில்லை. இதையெல்லாம் சாதனையாகச் சொல்ல முடியாத மத்திய அரசு, தேர்தல் காலத்தில் ஹிஜாப் விவகாரத்தை உருவாக்கி, சாதி, மத பிரச்னையை தூண்டிவிட்டு இழிவான அரசியலை செய்து வருகிறது. இதனால், இவ்வளவு காலம் பேசாத நீட் தேர்வு பிரச்னை, பர்தா பிரச்னை குறித்து பேசுகிறது.

தஞ்சாவூர் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் சீமான்
தஞ்சாவூர் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் சீமான்

நகைக் கடன் தள்ளுபடி குறித்து உதயநிதி ஸ்டாலினிடம் மக்கள் கேள்வி கேட்டதை வரவேற்கிறேன். நம் உரிமையை நாம் கேட்க வேண்டும். மதிப்புமிக்க ஜனநாயகத்தில் கடைசியாக இருக்கிற உரிமை என்பது வாக்குரிமைதான். அதை நாம் விற்பதால், எந்த உரிமையையும் பெற முடியாமல் போய்விடுகிறது. குடிநீர், சாலை, தடையற்ற மின்சாரம் என அடிப்படை வசதிகள் எதுவுமே கிடைப்பதில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மக்களைப் பார்த்து வேட்பாளர்கள் அஞ்சுகிற காலம் எப்போது வருகிறதோ, அப்போது எல்லாமே சரியாகிவிடும். அந்த நிலை, வாக்குக்குக் காசு வாங்குவதை நிறுத்தும்போதுதான் வரும். இந்த விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட வேண்டும். வாக்குக்காகக் காசுக் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம். யார் வாங்கினாலும், வாங்காவிட்டாலும், நான் இறுதி வரை வாங்க மாட்டேன் என ஒவ்வொருவரும் உளமார உறுதிமொழி ஏற்க வேண்டும். இதுபோன்ற தலைமுறையை நாம் எப்போது தயார் செய்கிறோமோ, அப்போதுதான் மாற்றம் ஏற்படும்.

நாம் தமிழர் கட்சியினர்
நாம் தமிழர் கட்சியினர்

இஸ்லாமிய சிறைவாசிகளுக்குத் தற்காலிக பிணை விடுப்பே தராத திமுக அரசு எப்படி விடுதலை செய்யும். ஆனால், நாங்கள்தான் இஸ்லாமிய மக்களுக்குப் பாதுகாப்பு என்று மட்டும் கூறுவர். ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம், ஓரே குடும்ப அட்டை போன்றவற்றைக் கூறும் மத்திய அரசு ஒரே குளம், ஒரே சுடுகாடு என்பதை வலியுறுத்துவதில்லை. இதை எல்லாம் கொண்டு வந்த பிறகு தேச பக்தி எனக் கூற வேண்டும்" எனத் தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism