Published:Updated:

நிர்வாண போட்டோ விவகாரம்: நடிகர் ரன்வீர் சிங்குக்கு மும்பை போலீஸார் சம்மன்!

ரன்வீர் சிங் | நிர்வாண போட்டோஷூட்

நிர்வாணமாக போஸ் கொடுத்தது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி நடிகர் ரன்வீர் சிங்குக்கு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

நிர்வாண போட்டோ விவகாரம்: நடிகர் ரன்வீர் சிங்குக்கு மும்பை போலீஸார் சம்மன்!

நிர்வாணமாக போஸ் கொடுத்தது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி நடிகர் ரன்வீர் சிங்குக்கு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

Published:Updated:
ரன்வீர் சிங் | நிர்வாண போட்டோஷூட்

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் சமீபத்தில் வெளிநாட்டு பத்திரிகைக்கு நிர்வாணமாக போட்டோவுக்கு போஸ் கொடுத்திருந்தார். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பின. அவை பெண்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக இருப்பதாகக் கூறி, மும்பை செம்பூர் போலீஸ் நிலையத்தில் தொண்டு நிறுவனம் ஒன்று ரன்வீர் சிங்குக்கு எதிராகப் புகார் செய்தது. அதோடு மகாராஷ்டிரா பெண்கள் கமிஷனிலும் இது தொடர்பாக புகார் செய்யப்பட்டது. தொண்டு நிறுவனம் சார்பாக வழக்கறிஞர் ஆசிஷ் ராய் கொடுத்துள்ள புகாரில், ``ரன்வீர் சிங் பத்திரிகைக்கு கொடுத்த நிர்வாண போட்டோக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கிறார். அவை வைரலாகியிருக்கின்றன. இந்தப் படங்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளின் கண்ணியத்துக்கு எதிரானவை” என்று குறிப்பிட்டிருந்தார். அதன் அடிப்படையில் போலீஸார் முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்துள்ளனர். இது தொடர்பாக விசாரிப்பதற்காக ரன்வீர் சிங்குக்கு சம்மன் கொடுக்க மும்பை போலீஸார் அவரின் வீட்டுக்குச் சென்றனர். ஆனால் வீட்டில் ரன்வீர் சிங் இல்லை.

ரன்வீர் சிங்
ரன்வீர் சிங்

அவர் படப்பிடிப்புக்காக வெளியில் சென்றிருப்பதாகவும், 16-ம் தேதிதான் வருவார் என்றும் போலீஸாரிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்மனைக் கொடுத்துவிட்டு, வரும் 22-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி தெரிவித்துவிட்டு வந்தனர். ரன்வீர் சிங் நிர்வாணமாக போட்டோவுக்கு போஸ் கொடுத்திருப்பதற்கு பாலிவுட்டில் பலரும் ஆதரவு தெரிவித்திருந்தனர். மேலும் ரன்வீர் சிங்குக்கு மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் பொதுமக்களிடம் ஆடைகளை நன்கொடையாகப் பெற்று அனுப்பிவைத்தது. நடிகை தீபிகா படுகோனேவின் கணவரான ரன்வீர் சிங் தங்களது தொண்டு நிறுவனத்துக்கும் நிர்வாண போஸ் கொடுக்க வேண்டும் என்று மற்றொரு தொண்டு நிறுவனம் கோரிக்கை விடுத்திருக்கிறது.