Published:Updated:

நுபுர் ஷர்மா சர்ச்சைப் பேச்சு: அப்செட்டில் வளைகுடா நாடுகள்; தொடரும் போராட்டம்; மௌனம் கலைப்பாரா மோடி?

முகமது நபிகள் குறித்த சர்ச்சைக் கருத்து - பாஜக

நுபுர் ஷர்மாவின் நபிகள் நாயகம் குறித்த சர்ச்சைப் பேச்சு இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளையே கொதிப்படையவைத்திருக்கிறது. பிரதமர் மோடி, இந்தப் பிரச்னையில் உடனே தலையிட்டு தீர்வு காண வேண்டும் என முக்கியப் பிரமுகர்கள் வலியுறுத்திவருகின்றனர்.

நுபுர் ஷர்மா சர்ச்சைப் பேச்சு: அப்செட்டில் வளைகுடா நாடுகள்; தொடரும் போராட்டம்; மௌனம் கலைப்பாரா மோடி?

நுபுர் ஷர்மாவின் நபிகள் நாயகம் குறித்த சர்ச்சைப் பேச்சு இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளையே கொதிப்படையவைத்திருக்கிறது. பிரதமர் மோடி, இந்தப் பிரச்னையில் உடனே தலையிட்டு தீர்வு காண வேண்டும் என முக்கியப் பிரமுகர்கள் வலியுறுத்திவருகின்றனர்.

Published:Updated:
முகமது நபிகள் குறித்த சர்ச்சைக் கருத்து - பாஜக

பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவின் நபிகள் நாயகம் குறித்த சர்ச்சை பேச்சு இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளையே கொதிப்படையவைத்திருக்கிறது. குறிப்பாக, கத்தார், குவைத், இரான், இராக் என 15-க்கும் மேற்பட்ட மத்திய கிழக்கு இஸ்லாமிய நாடுகள் இந்தியாவுக்குக் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. இந்த விவகாரம் சர்வதேசப் பிரச்னையாக உருவெடுக்கவும், நுபுர் ஷர்மா கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். ஆனால், காவல்துறையில் புகார் அளித்தும் அவர்மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை; இதனால், அதிருப்தியும் ஆத்திரமும் அடைந்த இஸ்லாமியர்கள் நாடு முழுவதும் தீவிரமான போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில், இது பற்றி வாய் திறக்காமல் இருக்கும் பிரதமர் மோடி, இந்தப் பிரச்னையில் உடனடியாகத் தலையிட்டு தீர்வுகாண வேண்டும் எனப் பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் வலியுறுத்திவருகின்றனர்.

நுபுர் சர்மா
நுபுர் சர்மா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சர்ச்சையின் தொடக்கம்:

கடந்த மாதம் ஒரு தனியார் தொலைக்காட்சியில் கியான் வாபி மசூதி விவகாரம் குறித்த விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்ற பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா, இஸ்லாமிய இறைதூதர் நபிகள் நாயகத்தைப் பற்றி தரக்குறைவாகப் பேசினார். அந்தக் காணொளியை ஆல்ட் நியூஸ் (Alt News co-founder) எனும் தனியார் ஊடகத்தின் நிறுவனர் மொஹத் ஜுபிர் (Mohd Zubir) என்பவர், தனது சமூக வலைதளத்தில் பதிவேற்றி, `நுபுர் ஷர்மா நபிகள் பற்றி இழிவாகப் பேசியிருக்கிறார். இதுதான் பாஜக-வின் நிலைப்பாடா?' எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதைத் தொடர்ந்து, நுபுர் ஷர்மா பேசிய காணொளி சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி சர்ச்சையை ஏற்படுத்திக்கொண்டிருக்க, எரியும் தீயில் எண்ணெயை ஊற்றும்விதமாக டெல்லி பா.ஜ.க-வின் மாநில செய்தித் தொடர்பாளர் நவீன் குமார் ஜிண்டாலும் நபிகள் நாயகம் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் ட்வீட் செய்தார். இந்த விவகாரம் இன்னும் அதிர்வலைகளை ஏற்படுத்த, இஸ்லாமியர்கள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன. மேலும், நுபுர் ஷர்மா மீது மும்பை, டெல்லி உள்ளிட்ட பகுதிளில் உள்ள காவல் நிலையங்களில் அடுத்தடுத்து வழக்கு பதிவுசெய்யப்பட்டது.

நவீன்குமார் ஜிண்டால்
நவீன்குமார் ஜிண்டால்
ட்விட்டர்

கலவரமான பேரணி:

நபிகள் பற்றி தவறாகப் பேசிய பா.ஜ.க நிர்வாகிகள் நுபுர் ஷர்மா, நவீன் ஜிண்டாலைக் கண்டித்து, உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் இஸ்லாமியர்கள் நடத்திய பேரணியில் இந்துக்கள்-இஸ்லாமியர்கள் இடையே கலவரம் வெடித்தது. அதில், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கலவரம் தொடர்பாக 36 பேர் கைதுசெய்யப்பட்டனர். 1,500 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது.

கத்தார்
கத்தார்

கண்டனம் தெரிவித்த 15 நாடுகள்:

இந்த விவகாரம் இந்தியாவிலேயே பெரிதாக கண்டுகொள்ளப்படாமல் இருந்த நிலையில், அரபு நாடுகள் கொதித்தெழுந்தன. குறிப்பாக, கத்தார், குவைத், இரான், இராக், எகிப்து, சவுதி அரேபியா, ஓமன், ஜோர்டான், ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், மாலத்தீவு, லிபியா, இந்தோனேசியா, மலேசியா உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட நாடுகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், அந்த நாடுகளில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி விளக்கம் கேட்டதோடு, மன்னிப்புத் தெரிவிக்கவும் வலியுறுத்தப்பட்டது. அந்த நாடுகளின் அரசாங்கங்கள் மட்டுமல்லாமல் மக்களும் இந்தியப் பொருள்களைப் புறக்கணிப்போம் என்றும் #Boycott_India என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்தனர். அதைத் தொடர்ந்து அரபு நாடுகளில் உள்ள மால்கள், சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனைக்கு இருந்த இந்தியத் தயாரிப்புப் பொருள்களை, `தடை செய்யப்பட்ட பொருள்கள்' என்று குறிப்பிட்டு மூடிவைக்கப்பட்ட சம்பவமும் நடந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தியாவின் விளக்கம்:

அதுவரை அமைதியாக இருந்த பா.ஜ.க., இந்த விவகாரம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தவும் நுபுர் ஷர்மாவை தற்காலிகமாகக் கட்சியைவிட்டு இடைநீக்கம் செய்தது. அதேபோல, நவீன் ஜிண்டாலை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கியது. மேலும், பா.ஜ.க தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங்,``பாஜக அனைத்து மதங்களையும் மதிக்கிறது. எந்த மதத்தினரையும் இழிவுபடுத்துவதை பா.ஜ.க கடுமையாகக் கண்டிக்கிறது" என நீண்ட அறிக்கை வெளியிட்டார்.

பா.ஜ.க அறிக்கை
பா.ஜ.க அறிக்கை

ஆனால் அதன் பிறகும் அடுத்தடுத்த நாடுகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்துவந்தன. இந்த விவகாரத்தில் மற்ற நாடுகளைவிடவும் கத்தார் நாட்டின் எதிர்வினை பெரும் பேசுபொருளானது. கத்தார் வெளியுறவுத்துறை அமைச்சகம், அந்த நாட்டுக்கான இந்தியத் தூதர் தீபக் மிட்டலிடம், `நபிகள் நாயகத்துக்கு எதிராக இந்தியாவின் ஆளுங்கட்சியைச் சேர்ந்த இருவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது கண்டனத்துக்குரியது. இது தொடர்பாக இந்திய அரசின் கண்டனத்தையும், பொது மன்னிப்பையும் எதிர்பார்க்கிறோம்' எனக் கேட்டுக்கொண்டது. மேலும், `இஸ்லாமுக்கு எதிரான பேச்சுகளை எந்தவித தண்டனையும் இல்லாமல் அப்படியே விடுவது மனித உரிமைகளுக்கு ஆபத்தானது’ என்றும் `அது பாரபட்சத்துக்கு வழிவகுப்பதோடு, வெறுப்பையும் வன்முறையையும் தூண்டும்' எனவும் குறிப்பிட்டது.

கத்தார் ஏர்வேஸ்
கத்தார் ஏர்வேஸ்

இதற்கு பதிலளித்த இந்தியத் தூதர் தீபக் மிட்டல், ``இந்த கருத்துகளுக்கும் இந்திய அரசுக்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை. எங்களின் கலாசாரத்தின்படியும், வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கையின்படியும் இந்திய அரசு அனைத்து மதங்களையும் சமமாக மதிக்கிறது; சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தது, `உதிரி சக்திகளான’ (Fringe element) சில தனி நபர்கள்தான். அவர்கள்மீது ஏற்கெனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது; கட்சி சார்பில் கண்டன அறிக்கையும் வெளியிடப்பட்டுவிட்டது" எனத் தெரிவித்தார்.

வழக்கு பதிவும் பாதுகாப்பும்:

இந்த நிலையில் நுபுர் ஷர்மா, தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், தனது குடும்பத்தினருக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் கூறி டெல்லி காவல்துறையில் புகாரளித்தார். அதைத் தொடர்ந்து அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல மற்றொரு சர்ச்சை நபரான நவீன் ஜிண்டால், தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் சமூக வலைத்தளங்களில் கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகவும், தனது முகவரியை பொதுவெளியில் பதிவிட வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

நுபுர் ஷர்மா, நவீன் ஜிண்டால்
நுபுர் ஷர்மா, நவீன் ஜிண்டால்

தொடரும் போராட்டம்:

`மன்னிப்புக் கேட்பதும், கட்சியைவிட்டு தற்காலிகமாக நீக்கிக்கொள்வது மட்டும் போதாது. அது நீதியல்ல. நுபுர் ஷர்மா மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், அவரைச் சிறைக்கு அனுப்ப வேண்டும்' என வலியுறுத்தி பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் இந்திய அளவில் அடுத்தடுத்து போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர். குறிப்பாக, உத்தரப்பிரதேசம், டெல்லி, மேற்கு வங்கம், கர்நாடகா என அந்த மாநிலங்களில் இஸ்லாமியர்களின் போராட்டம் தீவிரமடைந்திருக்கிறது. அதேசமயம், போராட்டம் நடத்தும் இஸ்லாமியர்கள் மீது தடியடி நடத்தியும், வழக்கு பதிவு செய்தும் கடுமையான நடவடிக்கைகளை அந்தந்த மாநில காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.

இஸ்லாமியர்கள்
இஸ்லாமியர்கள்

மத்திய அரசின்மீது விமர்சனம்:

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய பா.ஜ.க அரசு மீது கடுமையான விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் முன்வைத்துவருகின்றன.

குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர் ராகுல் காந்தி, ``உள்நாட்டில் பிளவுபட்ட இந்தியா, உலக அளவில் பலவீனமாகிறது. பா.ஜ.க-வின் வெட்கக்கேடான மதவெறி எங்களைத் தனிமைப்படுத்தியது மட்டுமின்றி, உலக அளவில் இந்தியாவின் மதிப்பையும் கெடுத்துவிட்டது" எனக் காட்டமாக விமர்சித்திருக்கிறார்.

சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, ``இந்தியாவுக்கு சர்வதேச அளவில் தர்மசங்கடம் ஏற்பட்டிருக்கிறது. வளைகுடா நாடுகளிடம் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்கவேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டிருக்கிறது. பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா, நபிகள் குறித்துப் பேசிய வார்த்தைகள் இந்தியாவின் மதிப்பை சர்வதேச அளவில் களங்கப்படுத்திவிட்டன. பா.ஜ.க-வால் நாட்டின் மதிப்புதான் பாதிக்கப்பட்டிருக்கிறது. பா.ஜ.க-வின் மதிப்பு பாதிக்கப்படவில்லை" எனக் குற்றம்சாட்டினார்.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ``பேரழிவை உருவாக்கக்கூடிய பா.ஜ.க தலைவர்களின் சமீபத்திய வெறுப்புப் பேச்சுகளை வன்மையாகக் கண்டிக்கிறேன். இத்தகைய வெறுப்புப் பேச்சுகளின் விளைவாக வன்முறை பரவுவது மட்டுமல்லாமல், அமைதி மற்றும் நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் நாட்டின் கட்டமைப்பும் பிளவுபடுகிறது. நாட்டின் ஒற்றுமைக்குக் குந்தகம் ஏற்படாமல் இருக்கவும், மக்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகாமல் இருக்கவும் குற்றம்சாட்டப்பட்ட பா.ஜ.க தலைவர்களை உடனடியாக கைதுசெய்ய வேண்டும்!" எனக் கோரிக்கை வைத்திருக்கிறார்.

சுப்பிரமணியன் சுவாமி
சுப்பிரமணியன் சுவாமி

அதேபோல, பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி, ``மோடியின் எட்டு ஆண்டுக்கால ஆட்சியில், பாரதமாதா தலையை அவமானத்தால் தொங்கப்போடும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. நாம் சீனாவிடம் லடாக்கில் மண்டியிட்டோம்; ரஷ்யர்களிடம் அடிபணிந்து விட்டோம்; அமெரிக்காவிடம் குவாட் அமர்வில் பணிந்துவிட்டோம். இப்போது கத்தார் என்ற சிறிய நாட்டிடம் இந்தியா சாஷ்டாங்கமாகக் காலில் விழுந்துவிட்டது. இந்திய வெளியுறவுக் கொள்கையின் சீரழிவுதான் இது" என சொந்தக் கட்சியையே விமர்சித்திருக்கிறார்.

பிரதமருக்கு வலுக்கும் கோரிக்கை:

நிலைமை தீவிரமடைந்துவரும் நிலையில், இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு உரிய தீர்வை வழங்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்துவருகின்றன. குறிப்பாக, பிரபல பாலிவுட் நடிகர் நசீருதின் ஷா, ``இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு எடுத்தது மிகவும் தாமதமான நடவடிக்கை. அவர்கள் வாயைத் திறந்து இது போன்ற கருத்துக்குக் கண்டனம் தெரிவிக்கவே ஒரு வாரம் ஆகியிருக்கிறது. இதே போன்ற சம்பவம் பாகிஸ்தானிலோ ஆப்கானிஸ்தானிலோ நடந்திருந்தால் உடனே மரண தண்டனை கிடைத்திருக்கும். ஆனால் இங்கு நபிகள் நாயகத்தைப் பின்பற்றுபவர்களுக்கு ஆறுதல்கூட கிடைக்கவில்லை. நுபுர் ஷர்மா போன்ற நபர்களுக்குக் கொஞ்சம் நல்ல புத்தியைப் புகட்டுமாறு நான் பிரதமரிடம் நேரடியாகக் கோரிக்கை வைக்கிறேன். பிரதமர் மோடி தலையிட்டு இந்த விவகாரத்தில் மேலும் விஷம் பரவுவதைத் தடுக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

நசீருதின் ஷா
நசீருதின் ஷா

நுபுர் ஷர்மாவின் ட்விட்டர் கணக்கை பிரதமர் மோடி உட்பட மத்திய அமைச்சர்களான ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, பூபேந்திர யாதவ் போ உள்ளிட்ட முக்கியப் புள்ளிகளும் பின்தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism