Published:Updated:

``ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலா எந்தச் சதித்திட்டமும் தீட்டவில்லை” - ஓ.பன்னீர்செல்வம் பதில்

ஓ.பன்னீர்செல்வம்

``ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலாவோ அல்லது அவரின் குடும்பத்தினரோ எந்தவிதமான சதித்திட்டமும் தீட்டவில்லை.” - ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் பதில்.

``ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலா எந்தச் சதித்திட்டமும் தீட்டவில்லை” - ஓ.பன்னீர்செல்வம் பதில்

``ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலாவோ அல்லது அவரின் குடும்பத்தினரோ எந்தவிதமான சதித்திட்டமும் தீட்டவில்லை.” - ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் பதில்.

Published:Updated:
ஓ.பன்னீர்செல்வம்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை, ஆறுமுகசாமி ஆணையம் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது. இதன் முதற்கட்ட விசாரணையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த அப்போலோ மருத்துவர்களிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தியது. அதைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட விசாரணையாக சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் நேற்று ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை மேற்கொண்டது. இந்த நிலையில், ஓபிஎஸ்-ஸிடம் இன்று மீண்டும் விசாரணை நடைபெற்றது.

இந்த விசாரணையில், சசிகலா தரப்பு வழக்கறிஞர், 2011-12 ஆண்டு மற்றும் அதற்குப் பிந்தைய ஆண்டுகளில் சசிகலா மற்றும் அவரின் குடும்பத்தினர் சதித்திட்டம் தீட்டியதாகவோ அல்லது அது தொடர்பாக எவ்விதத் தகவலையோ காவல்துறை திரட்டவில்லை என ஆணையத்தில் ஆஜரான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் வாக்குமூலம் அளித்திருப்பதைச் சுட்டிக்காட்டி கேள்வியெழுப்பினார்.

 ஜெயலலிதா
ஜெயலலிதா

அதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், ``சாட்சியங்கள் ஆணையத்தில் கூறியது சரிதான்” என பதிலளித்தார்.

இந்த விசாரணையில், ``ஜெயலலிதாவைக் குற்றவாளி என கர்நாடக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், ஜெயலலிதா தன்னை அழைத்து சட்டமன்ற உறுப்பினர்களைக் கூட்டி முதல்வரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என கூறினார். தேர்ந்தெடுக்கப்படுபடுபவர் ஆளுநரைச் சந்தித்து கடிதம் அளிக்க வேண்டும் எனக் கூறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜெயலலிதா, பன்னீர்செல்வம்
ஜெயலலிதா, பன்னீர்செல்வம்

அதேநேரத்தில் பாதுகாவலர் வீரப்பெருமாள் மூலம் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை அழைத்து, என்னிடம் தெரிவித்த கருத்தை மீண்டும் அவரிடம் தெரிவித்ததாகவும், ஓ.பன்னீர்செல்வம்தான் முதலமைச்சர் எனவும் அவர் பெயரை நீங்கள்தான் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் சொல்ல வேண்டும் எனவும் ஜெயலலிதா கூறினார். அப்போது நான் மிகுந்த துயரத்துடன் அழுதுகொண்டிருந்ததேன், `அதற்கு அழாதே பன்னீர், இந்த நேரத்தில் நீ தைரியமாக இருக்க வேண்டும், சென்னைக்கு சென்று நான் சொன்னதை செய்’ என ஜெயலலிதா கூறினார்" என ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism