Published:Updated:

அதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்கு எதிர்ப்பு - தலைமை தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் மனு?!

ஓ.பி.எஸ் ( OPS )

``ஒருங்கிணைப்பாளரின் ஒப்புதலின்றி அழைப்பு விடுக்கப்பட்டுள்ள இந்த பொதுக்குழுக் கூட்டம் கட்சி விதிகளுக்குப் புறம்பானது" - தலைமை தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ் தரப்பு மனு அளித்ததாக தகவல்.

அதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்கு எதிர்ப்பு - தலைமை தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் மனு?!

``ஒருங்கிணைப்பாளரின் ஒப்புதலின்றி அழைப்பு விடுக்கப்பட்டுள்ள இந்த பொதுக்குழுக் கூட்டம் கட்சி விதிகளுக்குப் புறம்பானது" - தலைமை தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ் தரப்பு மனு அளித்ததாக தகவல்.

Published:Updated:
ஓ.பி.எஸ் ( OPS )

அதிமுக-வில் ஒற்றைத் தலைமை விவகாரம் தலையெடுத்தது முதல், ஓ.பி.எஸ், இ.பி.எஸ் தரப்பில் பெரும் உட்கட்சி மோதல் நிலவிவருகிறது. இதில் ஓ.பி.எஸ் தரப்பின் பெரும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், ஒருவழியாக நீதிமன்றத்தின்உத்தரவின்படி, அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் நேற்று பல்வேறு குழப்பங்களுடன் நடைபெற்றது. ஓ.பி.எஸ் இதில் கலந்துகொண்ட போதிலும் கூட்டத்தில் ஓ.பி.எஸ்-க்கு எதிராக கோஷங்கள் எழ, தனது ஆதரவாளர்களுடன் கூட்டத்திலிருந்து பாதியில் வெளியேறினார். மேலும், முன்னதாக நிறைவேற்றுவதாகக் கூறப்பட்ட 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டதுடன், அதிமுக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டார்.

ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்.
ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்.

அதைத்தொடர்ந்து தீர்மானங்கள் ஏதும் நிறைவேற்றப்படாததையடுத்து, அடுத்த பொதுக்குழுக் கூட்டம் ஜூலை 11-ல் நடைபெறும் என தமிழ்மகன் உசேன் அறிவித்தார். இந்த நிலையில், அதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்கு எதிராக டெல்லியிலுள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ் தரப்பு மனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஓ.பி.எஸ் தரப்பில் வழக்கறிஞர்கள் சார்பாகத் தலைமை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், ``ஒருங்கிணைப்பாளரின் ஒப்புதலின்றி அழைப்பு விடுக்கப்பட்டுள்ள இந்த பொதுக்குழுக் கூட்டம் கட்சி விதிகளுக்குப் புறம்பானது" கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஓ.பி.எஸ் தரப்பிலிருந்து இத்தகைய எதிர்ப்பு வெளியான நிலையில், எடப்பாடி பழனிசாமி சென்னையிலுள்ள தனது இல்லத்தில் கட்சி ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism