Published:Updated:

``அதிமுக சட்ட விதிப்படி இன்றுவரை நான்தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்'- ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம்

`ஓ.பன்னீர்செல்வம் உட்கட்சி பிரச்னையை நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்று தொண்டர்கள் மத்தியில் மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கிறார்' என ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பாஜக கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்மு, சென்னையில் கூட்டணி கட்சியினரை சந்தித்து ஆதரவு திரட்டினார். விழா மேடையில் எடப்பாடி பழனிசாமி, எல்.முருகன், அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர். தமிழ்நாட்டில் பிரதான எதிர்கட்சியாக செயல்பட்டு வரும் அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் வலுப்பெற்று வருகிறது. இதையொட்டி, விழா மேடையில் எடப்பாடி பழனிசாமி அமர்ந்திருந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அரங்குக்கு வரவில்லை. எடப்பாடி தரப்பினர் புறப்படும் வரை காத்திருந்து திரௌபதி முர்முவை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தார்.

``அதிமுக சட்ட விதிப்படி இன்றுவரை நான்தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்'- ஓ.பன்னீர்செல்வம்

இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடத்தில் பேசியதாவது, ``அதிமுக தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கின்ற குழப்பத்திற்கு காரணம் ஓ.பன்னீர்செல்வம் தான். ஒற்றை தலைமையை எடப்பாடி பழனிசாமி ஏற்க வேண்டும் என்று கட்சி தொண்டர்கள் உறுப்பினர்கள் அனைவரும் விரும்புகின்றனர். பொதுக்குழுவுக்கு ஓ.பன்னீர்செல்வம் கட்டுப்பட்டு இருந்தால், குடியரசுத் தலைவர் வேட்பாளரை தனியாக சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. உட்கட்சி பிரச்னையை நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்று குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார். அவர் தொண்டர்கள் மத்தியில் மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கிறார்'' என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``அதிமுக சட்ட விதிப்படி இன்றுவரை நான்தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்'- ஓ.பன்னீர்செல்வம்

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஓ.பிஎஸ், ``இந்திய குடியரசு தலைவர் தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கட்சியின் வெற்றி வேட்பாளர் முர்முவை ஆதரித்து அதிமுக சார்பில் எங்களுடைய இதயபூர்வமான ஆதரவினை தெரிவித்து இருக்கின்றோம். அதிமுக கழக சட்ட விதிகளின் படி, இன்று வரை நான் தான் கழகத்தின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு கொண்டிருக்கிறேன்'' என்றார்.