Published:Updated:

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!
பிரீமியம் ஸ்டோரி
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

ஆபீஸ் பாய்

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

ஆபீஸ் பாய்

Published:Updated:
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!
பிரீமியம் ஸ்டோரி
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

கண்கள் சிவக்கும் ஜொள்ளு அதிகாரி!

வடக்கு மாவட்டத்தில் முக்கியமான டோல்கேட் அமைந்துள்ள பேரூராட்சியில் பணியில் இருக்கிறார் முன்னாள் முதல்வரின் பெயர்கொண்ட அதிகாரி. கடந்த ஆண்டு வேறொரு பேரூராட்சியில் பணியாற்றியபோது, பெண் ஊழியர் ஒருவரிடம் ஓவராக ஜொள்ளுவிட்டதால், சஸ்பெண்ட் செய்யப்பட்டு அதன் பிறகு இங்கு பணிக்கு வந்திருக்கிறார். இங்கு வந்த பிறகும் மனிதர் அடங்கவில்லை... சமீபத்தில் பெண்ணொருவரிடம் மீண்டும் ஜொள்ளுவிட, விவகாரம் அலுவலக ஊழியர்கள் மத்தியில் தீயாகப் பரவி, கடைசியில் அவரது காதுக்கே சென்று சேர்ந்திருக்கிறது. கடுப்பான அதிகாரி, அலுவலக ஊழியர்களை எதற்கெடுத்தாலும் காய்ச்சியெடுக்கிறாராம். தனக்குப் பிடிக்காத ஊழியர்களுக்கு, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆப்சென்ட் போட்டுவிடுகிறார். அலுவலகத்தில் டம்ளர் தவறி விழுந்தாலும்கூட ஊழியர்களை ஒருமையில் பேசி விரட்டுகிறாராம் அதிகாரி. பூனைக்கு மணி கட்டுவது யார் என்று புலம்புகிறார்கள் ஊழியர்கள்!

சைலன்ட் மோடில் பெண் அதிகாரி... ஆளுங்கட்சிப் புள்ளி மிரட்டல் காரணமா?

மலை மாவட்டத்தின் முக்கிய நகரில் கடந்த ஆண்டு பொறுப்பேற்றுக்கொண்ட துடிப்பான பெண் அதிகாரி ஒருவர், சுற்றுச்சூழல் மற்றும் வருவாய்த்துறை தொடர்பாக வந்த புகார்கள்மீது களத்தில் இறங்கி, உடனுக்குடன் நடவடிக்கை எடுத்துவந்தார். ஆனால், கடந்த ஆண்டு இறுதியிலிருந்து திடீரென சைலன்ட் மோடுக்கு மாறியவர், தனது வீடு உண்டு... அலுவலகம் உண்டு என்று வெளியில் தலைகாட்டுவதே இல்லை. எவ்வளவு பெரிய பிரச்னை என்றாலும் களத்துக்குச் செல்வதோ, நடவடிக்கை எடுப்பதோ கிடையாது. விசாரித்தால், ‘‘நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட ஆளுங்கட்சியைச் சேர்ந்த மாவட்டப் புள்ளி ஒருவர், பெண் அதிகாரியைக் கடுமையாக மிரட்டியதாலேயே அவர் கப்சிப் ஆகிவிட்டார்’’ என்று முணுமுணுக்கிறார்கள் விவரமறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள்!

‘‘மாவட்ட அதிகாரியே என் பாக்கெட்ல!’’

தஞ்சாவூர் அருகே அமைந்திருக்கும் ‘மலை’ ஊரின் மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரியான முத்தான நபர், சேவை அமைப்பு ஒன்றில் பொருளாளராக இருக்கிறார். மாவட்டத்துக்கு உயரதிகாரியாக யார் வந்தாலும், அவரைத் தனது கையில் போட்டுக்கொள்வதில் கில்லாடியான இவர், கடந்த சில ஆண்டுகளாகவே அலுவலகத்துக்கு சரிவரச் செல்வதில்லை. துறை அதிகாரிகள் கேள்வி கேட்டால், ‘மாவட்ட அதிகாரியே என் பாக்கெட்ல. கேள்வி கேட்டா உங்களை டிரான்ஸ்ஃபர் செஞ்சுடுவேன்’ என்று மிரட்டுகிறாராம். சமீபத்தில் செய்தித்துறை சார்ந்த அதிகாரிகள் இருக்கும்போதே அரசு நிகழ்ச்சி ஒன்றை இவர் தொகுத்து வழங்கியது அதிருப்தியை ஏற்படுத்த, “மாவட்ட அதிகாரி ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தருகிறார்?” என்று சலித்துக்கொள்கிறார்கள் அரசு அதிகாரிகள்.

காசு கறக்க, தனி டீம்!

கோட்டை நகரில் உணவு பாதுகாப்பு அதிகாரியாக இருப்பவர் பெரிய கடைகள், மால்கள் மற்றும் வணிக நிறுவனங்களிடம் ஸ்வீட் பாக்ஸ் பெற்றுக்கொண்டு அங்கெல்லாம் தலைகாட்டுவதே இல்லை. ஆனால், துறைரீதியாகக் கணக்கு காட்டுவதற்காகச் சிறு ஹோட்டல்கள், பெட்டிக்கடைகளில் ஆய்வுசெய்து, அவர்கள்மீது ஏகப்பட்ட வழக்குகளைப் பாய்ச்சுகிறார். யாராவது இவரைக் கேள்வி கேட்டால், “துறையின் வி.ஐ.பி எனக்கு நெருக்கம்” என்று சொல்லியே காரியம் சாதிக்கிறாராம். மாவட்டத்தில் எந்தெந்த நிறுவனங்களிடம் கைவைத்தால் காசு கறக்கலாம் என்று ஸ்கெட்ச் போடுவதற்கென்றே நான்கு பேர் கொண்ட டீமைக் கையில் வைத்திருக்கிறார். இவரது ஆட்டத்துக்கு எண்ட் கார்டு போடுவது யார் என்று புலம்புகிறார்கள் உள்ளூர் சிறு வியாபாரிகள்

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

!‘‘டிரான்ஸ்ஃபர் வேணுமா... கூகுள் பே-ல டிரான்ஸ்ஃபர் பண்ணு!’’

டெல்டா மாவட்டம் ஒன்றில் சிவில் சப்ளை துறையில் அதிகாரியாகப் பணியாற்றும் அந்தப் பெண்மணி, வசூல் வேட்டையில் படு கில்லாடி. இதே அலுவலகத்தில் ஒரு பிரிவிலிருந்து இன்னொரு பிரிவுக்குப் பணிமாறுதல் வேண்டுமென்றாலும்கூட, முக்கிய பேப்பர் இருந்தால்தான் காரியம் கனகச்சிதமாகக் கைகூடும் என்கிறார்கள். இது குறித்துப் பேசும் ஊழியர்கள், ‘‘சில டேபிள்கள்ல உட்கார்ந்தா, சில்லறை நல்லா தேறும். சில டேபிள்கள்ல உட்கார்ந்தா, வெறும் சம்பளம் மட்டும்தான் கிடைக்கும். இதனால, வளமான டேபிள்களுக்குப் பணிமாறுதல் கிடைக்க அந்தம்மாவுக்கு லஞ்சம் கொடுத்து, பலர் காரியம் சாதிச்சுக்குறாங்க. அதேசமயம், அந்தம்மா பணத்தை நேரடியா வாங்க மாட்டாங்க. தனக்கு அடுத்த நிலையில உள்ள அதிகாரி மூலம்தான் வாங்குறாங்க. அவரும் ரொம்ப உஷாரு... வெளியில சிலரோட போன் நம்பர்களைக் கொடுத்து, ‘கூகுள் பே’ல பணத்தைப் போடச் சொல்வார்’’ என்றார்கள்.