Published:Updated:

``அலுவல் மொழியான இந்தி தேசத்தை ஒன்றிணைக்கிறது; அனைத்து மொழிகளுக்கும் நண்பனும்கூட!'' - அமித் ஷா

அமித் ஷா

``அலுவல் மொழியான இந்தி தேசத்தை இணைக்கும் பாலமாக திகழ்கிறது. இந்தி உட்பட அனைத்து உள்ளூர் மொழிகளின் இணையான வளர்ச்சிக்கு மோடியின் அரசு துணைநிற்கும்." - அமித் ஷா

பல மொழிகளைப் பேசும் மக்கள் வசிக்கும் இந்தியாவில், அலுவல் மொழிகளில் ஒன்றாக இந்தி இருக்கிறது. 25.8 கோடி பேர் பேசும் இந்தி மொழியானது, உலகளவில் அதிக மக்கள் பேசும் மொழிகள் பட்டியலில் 4-வது இடத்திலிருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் `இந்தி திவாஸ்' செப்டம்பர் 14-ம் தேதி அன்று அனுசரிக்கப்படுகிறது.

இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு செப்டம்பர் 14-ம் தேதியை `இந்தி திவாஸ்' என்று அதிகாரபூர்வமாக அறிவித்தார். இந்தி அலுவல் மொழியாக கொண்டாடப்படும் என்ற முடிவுக்கு 1950 ஜனவரி 26-ம் தேதி இந்தியாவின் அரசியல் சாசனம் அங்கீகாரம் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மோடி அமித் ஷா
மோடி அமித் ஷா

இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், ``அலுவல் மொழியான இந்தி தேசத்தை இணைக்கும் பாலமாக திகழ்கிறது. இந்தி உட்பட அனைத்து உள்ளூர் மொழிகளின் இணையான வளர்ச்சிக்கு மோடியின் அரசு துணைநிற்கும். இந்தி மொழி அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பனாக இருக்கிறது. இந்தியை பாதுகாப்பதிலும், மேம்படுத்துவதிலும் பங்காற்றிய மாபெரும் ஆளுமைகளை நான் வணங்குகிறேன். அனைவருக்கும் 'இந்தி திவாஸ்' நல்வாழ்த்துகள்'' எனப் பதிவிட்டிருக்கிறார்.