Published:Updated:

``நான் படவேண்டிய வெட்கத்தை நீங்க படுறீங்களேடா...” - சிறுவர்களிடம் கொஞ்சும் புதுச்சேரி பெண் அமைச்சர்

புதுச்சேரி பெண் அமைச்சர் சந்திர பிரியங்கா

குழந்தைகள் தினமான இன்று பள்ளிச் சிறுவர்களிடம் பாட்டுப் பாடச் சொல்லி கொஞ்சும் வீடியோவை, தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வைத்திருக்கிறார் புதுச்சேரி பெண் அமைச்சர் சந்திர பிரியங்கா.

புதுச்சேரி மாநிலத்தின் போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா. காரைக்கால் நெடுங்காடு தொகுதியின் எம்.எல்.ஏ-வான இவர், சமூகம் சார்ந்த விழிப்புணர்வு குறும்படங்களிலும் நடித்திருக்கிறார். பொதுமக்களுடன் நெருங்கிப் பழகும் இவர், சமீபத்தில் வணிக நிறுவனம் ஒன்றில் தன்னை அமைச்சர் என நம்ப மறுத்த சிறுவனிடம் “நான்தான் அமைச்சர் நம்புடா” என்று விளையாடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இந்த நிலையில் குழந்தைகள் தினமான இன்று, பள்ளிச் சிறுவர்களிடம் பாடச் சொல்லி அவர் செல்லமாகக் கொஞ்சும் வீடியோவைத் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வைத்திருக்கிறார் அமைச்சர் சந்திர பிரியங்கா.

அமைச்சர் சந்திர பிரியங்கா
அமைச்சர் சந்திர பிரியங்கா

அமைச்சர் சந்திர பிரியங்காவிடம் பேசினோம். ”வழக்கமாக எனது தொகுதிக்குச் செல்லும்போது பள்ளிவிட்டு நடந்து செல்லும் மாணவர்களை எனது காரில் ஏற்றிச் செல்வேன். இது வழக்கமாக நடக்கும் ஒன்றுதான். `அக்கா... அக்கா...’ என்றுதான் அன்போடு என்னிடம் பேசுவார்கள். அவர்கள் ‘பசங்க’ என்று ஒரு வீடியோவும் நடித்திருக்கிறார்கள். அந்தக் குழந்தைகள் நன்றாக கானா பாட்டு பாடுவார்கள். அதனால் அவர்களைப் பாடச் சொல்லிக் கேட்டேன்” என்கிறார் அமைச்சர் சந்திர பிரியங்கா.

வீடியோவைக் காண லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்...