Published:Updated:

``ஒரே தலைவரோ, ஒரே அமைப்போ... கட்சியோ மாற்றத்தைக் கொண்டுவர முடியாது" - மோகன் பகவத்

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்

``நாட்டின் நிலையை மேம்படுத்தும் பொறுப்பை மற்றவர்களுக்கு வழங்காமல், அதற்கான பொறுப்பை மக்கள் ஏற்கவேண்டும். நாட்டை மேம்படுத்தும் இந்த பொறுப்பை ஆர்.எஸ்.எஸ்-க்குக் கூட கொடுக்காதீர்கள்." - மோகன் பகவத்

``ஒரே தலைவரோ, ஒரே அமைப்போ... கட்சியோ மாற்றத்தைக் கொண்டுவர முடியாது" - மோகன் பகவத்

``நாட்டின் நிலையை மேம்படுத்தும் பொறுப்பை மற்றவர்களுக்கு வழங்காமல், அதற்கான பொறுப்பை மக்கள் ஏற்கவேண்டும். நாட்டை மேம்படுத்தும் இந்த பொறுப்பை ஆர்.எஸ்.எஸ்-க்குக் கூட கொடுக்காதீர்கள்." - மோகன் பகவத்

Published:Updated:
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்

நாக்பூரில் மராத்தி இலக்கிய அமைப்பான விதர்பா சாகித்ய சங்கத்தின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. அதில், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார்.

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்

அப்போது பேசிய அவர், ``இந்த நாட்டுக்கு முன்னிருக்கும் அனைத்து சவால்களையும், எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும் சரி... ஒருவரால் மட்டுமே சமாளிக்க முடியாது. இதுதான் ஆர்.எஸ்.எஸ் சங்கத்தின் சித்தாந்த அடித்தளம். உண்மைதானே... ஒரு அமைப்பு, ஒரு கட்சி, ஒரு தலைவர் என எதுவும் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது. சாமான்யர்கள் அதற்காக நிற்கும்போதுதான் மாற்றம் ஏற்படுகிறது. சாமான்யர்கள்தான் அந்த மாற்றத்தைக் கொண்டுவர உதவுகிறார்கள். இந்தச் சிந்தனையே ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தின் அடிப்படை.

ஆர்.எஸ்.எஸ்
ஆர்.எஸ்.எஸ்

சாமான்யர்கள் தெருவில் இறங்கியபோதுதான் நாடு சுதந்திரம் பெற்றது. இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் 1857-ம் ஆண்டிலேயே தொடங்கியது, ஆனால் அது ஒரு பெரிய விழிப்புணர்வு அவ்வளவுதான். ஆனால், அந்த போராட்டத்தின் வெற்றி, சாமான்யர்கள் தெருவில் இறங்கியதால் மட்டுமே கிடைத்தது. சுபாஷ் சந்திரபோஸ் ஆங்கிலேயர்களுக்கு முன் மிகப்பெரிய சவாலை உருவாக்கினார். புரட்சியாளர்களும் சுதந்திரப் போராட்டத்தில் பங்களித்தனர். அவர்களின் பங்களிப்பால் மக்கள் தைரியம் பெற்றனர். எல்லோரும் சிறைக்குச் செல்லவில்லை. சிலர் ஒதுங்கினார்கள். ஆனால், நாடு சுதந்திரமாக மாறவேண்டும் என்ற எண்ணம் பரவலாக இருந்தது.

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்

எனவே, இந்து சமுதாயம் அதன் பொறுப்பை நிறைவேற்றும் திறன்கொண்டதாக மாறவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் விரும்புகிறது. தலைவர்கள் சமுதாயத்தை உருவாக்குவதில்லை, ஆனால் சமூகம் தலைவர்களை உருவாக்குகிறது. சமூகத்தில் ஏற்படும் மாற்றத்தின் மூலம் அனைத்து விஷயங்களும் நடைபெறுகின்றன. ஆர்.எஸ்.எஸ் சமூகத்தை ஒழுங்கமைக்கிறது. எனவே, நாட்டின் நிலையை மேம்படுத்தும் பொறுப்பை மற்றவர்களுக்கு வழங்காமல், அதற்கான பொறுப்பை மக்கள் ஏற்கவேண்டும். நாட்டை மேம்படுத்தும் இந்த பொறுப்பை ஆர்.எஸ்.எஸ்-க்குக்கூட கொடுக்காதீர்கள். உங்கள் வேலையை நீங்களே செய்யுங்கள்.... மக்கள் இதைக் கற்றுக்கொள்ள வேண்டும்" என்று கூறினார்.