Published:Updated:

``2024-ல் குறைந்தது 350 சீட் வெற்றிபெற வேண்டும்" - பாஜக அமைச்சர்களுக்கு அமித் ஷா உத்தரவு?!

அமித் ஷா

``இந்த முறை கடந்த தேர்தலைவிட அதிக இடங்களில் வெற்றிபெற வேண்டும். மேலும், வலுவான அமைப்பு மற்றும் மோடியின் ஈர்ப்பு 2024-ம் ஆண்டுக்கான வெற்றிச் சூத்திரமாக இருக்கும்."

``2024-ல் குறைந்தது 350 சீட் வெற்றிபெற வேண்டும்" - பாஜக அமைச்சர்களுக்கு அமித் ஷா உத்தரவு?!

``இந்த முறை கடந்த தேர்தலைவிட அதிக இடங்களில் வெற்றிபெற வேண்டும். மேலும், வலுவான அமைப்பு மற்றும் மோடியின் ஈர்ப்பு 2024-ம் ஆண்டுக்கான வெற்றிச் சூத்திரமாக இருக்கும்."

Published:Updated:
அமித் ஷா

2014, 2019 எனக் கடந்த இரண்டு மக்களவைத் தேர்தல்களிலும் பா.ஜ.க-வே வெற்றிபெற்று ஆட்சியில் நீடித்துவருகிறது. இதன் காரணமாகவே அடுத்து வரும் மக்களவைத் தேர்தலில் எப்படியாவது பா.ஜ.க-வை வீழ்த்த வேண்டும் என்று காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உட்பட பல்வேறு எதிர்க்கட்சிகளும் இப்போதிலிருந்தே தங்களைத் தயார் செய்துவருகின்றன. பா.ஜ.க-வும், ஆட்சியதிகாரத்தை விட்டுக்கொடுக்காமல் அடுத்த மக்களவைத் தேர்தலிலும் வெற்றிபெற வேண்டும் என அதற்கான அஜண்டாவைப் பட்டை தீட்டிவருகின்றன.

மோடி, ஜே.பி.நட்டா, அமித் ஷா
மோடி, ஜே.பி.நட்டா, அமித் ஷா

இதன் ஒரு பகுதியாகவே, பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், பா.ஜ.க அமைச்சர்களை அழைத்து, கூட்டம் நடத்தினர். இந்த நிலையில், அந்தக் கூட்டத்தில் 2024 தேர்தல் தொடர்பாக அமைச்சர்களுக்கு சில முக்கிய உத்தரவுகள் காட்டமாகச் சொல்லப்பட்டிருப்பதாக, கட்சியின் நெருங்கிய வட்டாரங்களிருந்து செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

மேலும் அமித் ஷா அந்தக் கூட்டத்தில், ``கட்டமைக்கப்பட்டிருக்கும் அமைப்பின் காரணமாகத்தான் நாம் இங்கு இருக்கிறோம். அமைப்பினால்தான் இந்த அரசும் இருக்கிறது. எனவே, அமைப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். பிரதமர் மோடி மிகவும் பிரபலமானவர், அவரின் பெயரால் யார் வேண்டுமானாலும் வெல்லலாம். ஆனால், களத்தில் எந்த அமைப்பும் இல்லையென்றால், நம்மால் அதைப் பயன்படுத்திக்கொள்ள இயலாது.

அமித் ஷா
அமித் ஷா
ட்விட்டர்

எனவே இம்முறை கடந்த தேர்தலைவிட அதிக இடங்களில் வெற்றிபெற வேண்டும். மேலும், வலுவான அமைப்பு மற்றும் மோடியின் ஈர்ப்பு 2024-ம் ஆண்டுக்கான வெற்றிச் சூத்திரமாக இருக்கும்" என்று பேசியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில், 303 இடங்களில் பா.ஜ.க வெற்றிபெற்றிருந்தது. இருப்பினும் கிட்டத்தட்ட 144 இடங்களில் பா.ஜ.க குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற முடியாமல் போனதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த 144 இடங்களில் குறைந்தது 70 இடங்களைக் கைப்பற்றுவதற்காகவே பா.ஜ.க அமைச்சர்களை அழைத்து இந்தக் கூட்டம் நடத்தப்பட்டிருப்பதாகவும், அந்தத் தொகுதிகள் அனைத்தும் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.