Published:Updated:

`தேர்தல் வெற்றி உங்களுக்கு இப்படியொரு தைரியத்தைக் கொடுத்துவிட்டதா?’ - கொதிக்கும் சசி தரூர்!

என்னவேண்டுமென்றாலும் செய்யலாம், யாரைவேண்டுமானாலும் கொல்லலாம் என்ற தைரியத்தை ஒரு தேர்தல் முடிவுகள் கொடுத்துவிட்டதா?”

Sasi Tharoor
Sasi Tharoor

காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் பூனேவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், `மதத்தின் பெயரால் நடக்கும் கொலை, தாக்குதல் சம்பவங்களுக்கு கண்டனம்’ தெரிவித்தார். சசிதரூர் ``நாட்டில் கடவுளின் பெயரால் தாக்குதலை நடத்துவது, கடவுளையே அவமதிக்கும் செயல். கடந்த 6 ஆண்டுகளில் நாம் இதைத்தான் கண்டிருக்கிறோம். பூனேவில் `மோஹ்சின் ஷேக்’ கொல்லப்பட்டதிலிருந்து தொடங்கியது.

தப்ரஸ் அன்சாரி கொலை வழக்கு!  எஸ்.பி. சொல்வது என்ன?
aklak
aklak

மாட்டிறைச்சி வைத்திருந்தாக அக்லாக்கை கொலை செய்தனர். அவர் வைத்திருந்தது மாட்டிறைச்சி இல்லை என்பது பின்பு தெரியவந்தது. அதே மாட்டிறைச்சியே இருந்தாலும், ஒருவரை கொலை செய்வதற்கான உரிமையை யார் உங்களுக்குக் கொடுத்தது?. மாடுகளை பால்பண்ணைகளுக்குக் கொண்டு செல்வதற்கான உரிமத்தை (லைசன்ஸ்) பெஹ்லுகான் வைத்திருந்திருந்தார். ஆனால், அவரும் பசுக்குண்டர்களால் தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளார்.

என்னவேண்டுமென்றாலும் செய்யலாம், யாரை வேண்டுமானாலும் கொல்லலாம் என்ற தைரியத்தை ஒரு தேர்தல் முடிவுகள் கொடுத்துவிட்டதா?” என்று கொந்தளிக்கிறார். தொடர்ந்து, ``இதுதான் நம் நாடா, இது தான் இந்து தர்மம் போதித்ததா? நானும் ஒரு இந்துதான். ஆனால், இந்த வகையான இந்துவல்ல. அவர்கள் கொலை செய்யும்போது, `ஜெய் ஸ்ரீராம்’ சொல்லுமாறு வலியுறுத்துகின்றனர். இது இந்து தர்மத்தை அவமதிக்கும் செயல்.

அகப்பை மாட்டி, நாணயக் குடுவை... பழங்கால தமிழர்களின் கேட்ஜெட்ஸ்! #VikatanPhotoCards
சசி தரூர்
சசி தரூர்

ராமரின் பெயரைப் பயன்படுத்தி மக்களை கொலை செய்வது, அவரை அவமிதக்கும் செயல். பா.ஜ.கவின் ஹிந்துயிசம் என்பது, அவர்களின் `அரசியல் சித்தாந்தம்’தான். மற்றபடி, அதற்கும், உண்மையான ஹிந்துயிசத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. உள்நாட்டுப் பிரச்னைகள் தொடர்பாக நான் தொடர்ந்து அரசாங்கத்தைத் தாக்குவேன். ஆனால், சர்வதேச பிரச்னைகள் என வரும்போது, காஷ்மீர் விவகாரத்தில், இந்தியாவை விமர்சிக்க குறைந்த தகுதி வாய்ந்த நாடு பாகிஸ்தான் என்று நான் நினைக்கிறேன்’ என்றார்.