Published:Updated:

ஒன் பை டூ

ஜெயக்குமார், கரு.நாகராஜன்
பிரீமியம் ஸ்டோரி
ஜெயக்குமார், கரு.நாகராஜன்

வெறுமனே அனுமானத்தின் அடிப்படையில் பரப்பப்பட்ட வதந்திகள் அவை.

ஒன் பை டூ

வெறுமனே அனுமானத்தின் அடிப்படையில் பரப்பப்பட்ட வதந்திகள் அவை.

Published:Updated:
ஜெயக்குமார், கரு.நாகராஜன்
பிரீமியம் ஸ்டோரி
ஜெயக்குமார், கரு.நாகராஜன்

ரஜினியின் அரசியல் விலகல்... யாருக்கு ஏமாற்றம்?

ஜெயக்குமார், மீன்வளத்துறை அமைச்சர்

`` `ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்திருந்தால், அது அ.தி.மு.க கூட்டணிக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்தும்’ என்பது மாதிரியான தவறான பிரசாரத்தை இங்கு சிலர் செய்துவந்தனர். வெறுமனே அனுமானத்தின் அடிப்படையில் பரப்பப்பட்ட வதந்திகள் அவை.

அ.தி.மு.க மாபெரும் வலிமை மிகுந்த இயக்கம். எங்களுடைய வாக்குவங்கி, எந்தச் சூழலிலும் மாறவே மாறாது என்பதைத்தான் கடந்தகாலத் தேர்தல்கள் நிரூபித்திருக்கின்றன.

கடந்த 10 ஆண்டுக்கால அ.தி.மு.க ஆட்சியில் மக்கள் நலத் திட்டங்கள் அனைவரையும் சென்றடைந்திருப்பதால், அரசின்மீதான நம்பிக்கை மக்களிடம் அதிகரித்திருக்கிறது. எந்தக் கட்சியையும் சாராத நடுநிலையாளர்களிடையே ஏற்பட்டிருக்கும் இந்த நம்பிக்கை, வரும் தேர்தலில் எங்களுக்கான வாக்குகளாக மாறும். இதனால், எங்கள் வாக்குவங்கி இன்னும் வலிமையடைந்திருக்கிறது. இந்தநிலையில், ரஜினிகாந்த் அரசியலுக்குள் வந்தாலும் சரி... வராமல் போனாலும் சரி... எங்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. அதனால், அவரது அரசியல் வருகையையோ, அரசியல் விலகலையோ எதிர்பார்த்து நாங்கள் காத்திருக்கவும் இல்லை. அதேசமயம், ரஜினியின் அரசியல் வருகையை எதிர்பார்த்து அவருடைய ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தார்கள். அவர் அரசியலுக்குள் வராமலேயே விலகிச் சென்றிருப்பது அவருடைய ரசிகர்களுக்கு வேண்டுமானால், பெரும் ஏமாற்றமாக இருக்கலாம்.’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ஜெயக்குமார், கரு.நாகராஜன்
ஜெயக்குமார், கரு.நாகராஜன்

கரு.நாகராஜன், பொதுச்செயலாளர், தமிழக பா.ஜ.க.

`ரஜினி எப்படியும் கட்சி தொடங்கிவிடுவார்’ என்று எதிர்பார்த்திருந்த அவரின் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் மிகப்பெரிய ஏமாற்றம் கிடைத்திருக்கிறது. ஆனாலும், ‘எனது உடல்நிலை சரியில்லை... கடவுள் எனக்கு விடுத்த எச்சரிக்கை...’ என்று தனது அரசியல் விலகலுக்கான காரணத்தையும் ரஜினி தெளிவாகச் சொல்லியிருக்கிறார். இதை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்றே நினைக்கிறேன்.

‘ஆன்மிக அரசியல்’ பேசிவந்த ரஜினிகாந்த், ஐபிஎல்-லுக்கு எதிரான போராட்டத்தின்போது காவலர்கள் தாக்கப்பட்டதையும் கண்டித்துப் பேசினார். இப்படித் தன்னை வலதுசாரி சிந்தனையாளராக அவர் காட்டிக் கொண்டதால், அவரது அரசியல் வருகை பா.ஜ.க-வுக்கு பலம் சேர்க்கும் என்ற கருத்து நிலவிவந்தது.

பா.ஜ.க என்பது மிகப்பெரிய கட்டமைப்பைக் கொண்ட கட்சி. எந்தவொரு தனிப்பட்ட தலைவரையும் நம்பியிருக்காமல், அமைப்பை மட்டுமே நம்பியிருக்கும் கட்சி. ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால், அவரது வருகையை வரவேற்பதாக மட்டும்தான் நாங்கள் சொல்லியிருந்தோம். ஆனால், ‘ரஜினியை அரசியலுக்குள் வரவைப்பதற்காக பா.ஜ.க அழுத்தம் கொடுக்கிறது’ என்றெல்லாம் பொய்யான செய்திகளைப் பரப்பினார்கள். அப்படி எந்த அழுத்தத்தையும் நாங்கள் கொடுக்கவில்லை. அதனால், அவரது அரசியல் விலகல் எங்களுக்கு ஏமாற்றத்தையும் கொடுக்கவில்லை.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism