அரை மணி நேர மழைக்கே சென்னை சாலைகள் மிதப்பது ஏன்?

‘‘தட்பவெட்பநிலையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் காரணமாக அண்மைக்காலங்களில் மழைப்பொழிவின் அளவு மிகவும் அதிகரித்துவருகிறது. மழை மட்டுமல்ல, வெயிலும்கூட ஆக்ரோஷமாக தகிக்கிறது.சென்னை போன்ற முக்கிய நகரங்களில், ஏற்கெனவே பாதாளச் சாக்கடைத் திட்டம், மழைநீர் வடிகால் திட்டங்கள் ஆகியவை சிறப்புறச் செய்யப்பட்டிருக்கின்றன. ஆனாலும்கூட, முன்பெல்லாம் மூன்று மணி நேரம் நிதானமாகப் பெய்யக்கூடிய மழையின் அளவு, இப்போது 10 அல்லது 20 நிமிடங்களிலேயே கொட்டித் தீர்த்துவிடுகிறது. எனவே, மழைநீர் தேங்குவதைத் தவிர்க்க முடியவில்லை. இப்படித் தேங்கி நிற்கும் மழைநீர், 24 மணி நேரத்தைத் தாண்டியும் வடியவில்லை என்றால்தான் தவறு.

சென்னையைப் பொறுத்தவரை, கடந்த 2015-ல் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்குப் பிறகு எது மேடான பகுதி, எது தாழ்வான பகுதி என்பதையெல்லாம் தெளிவுறக் கண்டறிந்து, மழைநீர் வடிகால் வசதி மற்றும் கழிவுநீர் வெளியேற்ற வசதிகளை அம்மா சிறப்புறச் செய்து முடித்திருக் கிறார்கள். எனவே, இப்போதெல்லாம் எந்த மழையாக இருந்தாலும் சில மணி நேரங்களில் முழுவதுமாக வடிந்து சென்னை இயல்புநிலைக்குத் திரும்பிவிடும்!’’

“2015-ம் ஆண்டு பெருவெள்ளத்துக்குப் பிறகு, சி.ஏ.ஜி எச்சரித்திருந்த அறிக்கைக்குப் பிறகும்கூட அ.தி.மு.க அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதைத்தான் ‘நிவர் புயல்’ பாதிப்புகள் உணர்த்தியிருக்கின்றன. 2011-ல் அ.தி.மு.க ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடனேயே, 155 வார்டுகளாக இருந்த சென்னை மாநகராட்சியைக் கூடுதல் கடன் பெறும் வசதிக்காக 200 வார்டுகள்கொண்ட ‘பெருநகர மாநகராட்சி’யாக (Greater Chennai) அறிவித்தார்கள். இதற்காக அம்பத்தூர், திருவொற்றியூர், மீனம்பாக்கம் எனப் புறநகர்ப் பகுதிகளையும் சென்னை மாநகராட்சியோடு ஒன்றிணைத்ததோடு, அந்தப் பகுதி மக்களிடம் கூடுதல் வரிவசூலையும் செய்து முடித்தார்கள். ஆனால், மழைநீர் வடிகால் வசதி, குடிநீர் வசதி, பாதாளச் சாக்கடை வசதி எனப் பெருநகர மாநகராட்சிக்கு உண்டான வசதி வாய்ப்புகளை மட்டும் செய்து கொடுக்கவே இல்லை.

2016-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன், உள்ளாட்சித் தேர்தலை நடத்தியாக வேண்டிய கட்டாயத்தின் பேரில், வேறு வழியில்லாமல் ஒன்றிரண்டு இடங்களில் மட்டும் சில வசதிகளை அரைகுறையாகச் செய்து முடித்தனர். இந்தப் பணிகளில் அ.தி.மு.க-வினர் செய்த ஊழலைப் புள்ளிவிவரத்தோடு வெளிப்படுத்தி, கண்டித்தது

தி.மு.க. மேலும் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டிருந்த மழைநீர் வடிகால் கால்வாய்கள் இரண்டாவது மாதத்திலேயே பெயர்ந்து, உடைந்து விழுவதை `அறப்போர் இயக்கம்’ உள்ளிட்ட மக்கள் நல இயக்கங்கள் ஆதாரபூர்வமாக அம்பலப்படுத்தின. இப்போது அரை மணி நேர மழைக்கே சென்னை தத்தளிக்கிறதென்றால், அத்தியாவசியப் பணிகளில் அ.தி.மு.க அரசு செய்த ஊழல்களும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் காட்டிய அலட்சியமும்தான் முழுமுதற் காரணம்!’’