Published:Updated:

ஒன் பை டூ

செந்தில்குமார் - கோகுல இந்திரா,
பிரீமியம் ஸ்டோரி
செந்தில்குமார் - கோகுல இந்திரா,

மீண்டும் அம்மாவின் ஆட்சியைக் கொண்டுவர வேண்டும் என்றுதான் எல்லோரும் உழைக்கிறோம். இதைத்தான் போகும் இடங்களி லெல்லாம் பன்னீர் செல்வமும், எடப்பாடியும் சொல்லிவருகின்றனர்

ஒன் பை டூ

மீண்டும் அம்மாவின் ஆட்சியைக் கொண்டுவர வேண்டும் என்றுதான் எல்லோரும் உழைக்கிறோம். இதைத்தான் போகும் இடங்களி லெல்லாம் பன்னீர் செல்வமும், எடப்பாடியும் சொல்லிவருகின்றனர்

Published:Updated:
செந்தில்குமார் - கோகுல இந்திரா,
பிரீமியம் ஸ்டோரி
செந்தில்குமார் - கோகுல இந்திரா,

இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் இணைந்திருப்பது மனதளவிலா... பெயரளவிலா?

செந்தில்குமார்,  தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்

செந்தில்குமார்
செந்தில்குமார்

``இணைந்திருப்பதுபோல இருவரும் நடிக்கக்கூடச் செய்யவில்லை என்பதுதான் உண்மை. அண்மையில், இருவரும் மாறி மாறிக் கொடுக்கும் முழுப்பக்க விளம்பரங்களே இதற்குச் சிறந்த உதாரணங்கள். ரஜினி கட்சி தொடங்குவார் என்று பா.ஜ.க எதிர்பார்த்தது. அதைவைத்து ஓ.பி.எஸ் தலைமையில் அ.தி.மு.க-வை உடைக்கத் திட்டமிட்டிருந்தது. ஆனால், ரஜினியின் அரசியல் வருகை சாத்தியப்படாததால் குழப்பமான, தெளிவில்லாத சூழ்நிலையில் அவர்கள் இருக்கிறார்கள். ஆடிட்டர் குருமூர்த்தி எடுத்த அனைத்து பிளான்களுமே இதுவரை தோல்விதான். அதனால், அவரை நம்பிப் போகலாமா, வேண்டாமா என்ற குழப்பத்தில் இருக்கிறார் பன்னீர். பா.ஜ.க-வுக்கு ஓ.பி.எஸ்ஸைக் கைக்குள் போட்டுக்கொள்வது என்பது மிகவும் எளிதான விஷயம். ஓ.பி.எஸ் மகனுக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் போதும். அதேதான் பா.ம.க-வுக்கும். அன்புமணிக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் போதும், அவர்களும் பா.ஜ.க-வுடன் சேர்ந்துவிடுவார்கள். சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்தால்தான், இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் இருவரின் உண்மையான அரசியல் ஆட்டம் ஆரம்பமாகும். இருவரும் மனதளவிலும் இணையவில்லை; பெயரளவிலும் இணையவில்லை என்பதே உண்மை!”

கோகுல இந்திரா, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்

கோகுல இந்திரா
கோகுல இந்திரா

``இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் இருவரும் ஒற்றுமை யாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், தி.மு.க போன்ற கட்சிகள்தான் அவர்களுக்குள் தொடர்ந்து சண்டை நடப்பதுபோலச் சித்திரிக்க முயல்கிறார்கள். எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க-வின் நிர்வாகிகள் அனைவரும் சேர்ந்துதான் முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தோம். அதில் எந்த மாற்றமும் இல்லை. மீண்டும் அம்மாவின் ஆட்சியைக் கொண்டுவர வேண்டும் என்றுதான் எல்லோரும் உழைக்கிறோம். இதைத்தான் போகும் இடங்களி லெல்லாம் பன்னீர் செல்வமும், எடப்பாடியும் சொல்லிவருகின்றனர். அண்மையில் இருவரும் ஒரே காரில் பேசிக்கொண்டே போனார்கள், ஒரே விமானத்தில் அருகருகே அமர்ந்து சென்றார்கள், ஒன்றாகப் பிரசாரத்தில் ஈடுபட்டார்கள், ஒரே ஓட்டலுக்குச் சென்று ஒன்றாகச் சாப்பிட்டார்கள், ஒன்றாக தேவர் சிலைக்கு மாலை அணிவித்தார்கள். இப்படி எத்தனையோ ஒன்றாகச் செய்கிறார்கள். இருவரும் மனதளவில் நல்ல நண்பர்களாக இணைந்திருக்காமலிருந்தால், இப்படி ஒன்றாக, ஒற்றுமையாக இருக்க முடியுமா... தனித்தனி விளம்பரங்கள் கொடுத்ததில் என்ன தவறு? மாற்றி மாற்றி அவதூறாக விளம்பரங்கள் கொடுத்தால்தான் தவறு. அவர்கள் செய்த சாதனைகளைத் தனித்தனியாகச் சொல்கிறார்கள். மக்கள் ஆதரவுடன் எடப்பாடி அவர்கள் மீண்டும் முதல்வராவார்!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism