Published:Updated:

ஒன் பை டூ

சினேகன், பா.வளர்மதி
பிரீமியம் ஸ்டோரி
சினேகன், பா.வளர்மதி

ஜனநாயகத்தை, நேர்மையான ஆட்சியை விரும்பக்கூடிய எவரும் சொந்தம் கொண்டாடக்கூடிய மனிதர்தான் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.

ஒன் பை டூ

ஜனநாயகத்தை, நேர்மையான ஆட்சியை விரும்பக்கூடிய எவரும் சொந்தம் கொண்டாடக்கூடிய மனிதர்தான் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.

Published:Updated:
சினேகன், பா.வளர்மதி
பிரீமியம் ஸ்டோரி
சினேகன், பா.வளர்மதி

எம்.ஜி.ஆர் யாருக்குச் சொந்தம்?

சினேகன், மாநில இளைஞரணிச் செயலாளர், மக்கள் நீதி மய்யம்

சினேகன்
சினேகன்

‘‘ஜனநாயகத்தை, நேர்மையான ஆட்சியை விரும்பக்கூடிய எவரும் சொந்தம் கொண்டாடக்கூடிய மனிதர்தான் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ‘மற்றவர்கள் எம்.ஜி.ஆரைக் கொண்டாடக் கூடாது’ என்று சொல்ல அ.தி.மு.க-வினருக்கு எந்த அருகதையும் கிடையாது. இன்றைக்கு இருக்கிற அமைச்சர்கள் பலர் எம்.ஜி.ஆரை நேரில்கூட பார்த்திருக்க மாட்டார்கள். நல்ல குணமுள்ள எவரையும், எவரும் கொண்டாடலாம் என்பதுதான் தமிழர்களின் பண்பாடு. எப்படி, திராவிட இயக்கங்களில் இருந்துகொண்டு, காமராஜரை எம்.ஜி.ஆர் கொண்டாடினாரோ அப்படி, எம்.ஜி.ஆரையும் அனைவரும் கொண்டாடலாம். தமிழகத்தில் மட்டுமல்ல, 176 நாடுகளில் வசிக்கிற ஈழத்தமிழர்களும் எம்.ஜி.ஆரைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அதைத் தடுக்க, தட்டிக் கேட்க யாருக்கும் உரிமை கிடையாது. எம்.ஜி.ஆர் எப்படி எளிய மக்களின் குரலாக ஒலித்தாரோ, எளிய மக்களுக்கான ஆட்சியைக் கொடுத்தாரோ, அப்படித்தான் எங்களது ஆட்சியும் இருக்கும். இந்த நம்பிக்கையை மக்களிடம் விதைக்கத் தான் எம்.ஜி.ஆரின் நீட்சி என்று எங்கள் தலைவர் கமல்ஹாசன் சொல்கிறார்.’’

பா.வளர்மதி, இலக்கிய அணிச் செயலாளர், அ.தி.மு.க

பா.வளர்மதி
பா.வளர்மதி

‘‘எம்.ஜி.ஆர் என்ற பெயரே அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்குச் சொந்தமானது. எம்.ஜி.ஆரால் கண்டெடுக்கப்பட்ட கட்சி இது. அவருக்குப் பிறகு அம்மா வளர்த்த கட்சி. அவர்களால் உருவாக்கப்பட்ட தொண்டர்கள் நாங்கள். எம்.ஜி.ஆர் பெயரை கமல் உச்சரிக்கலாமே தவிர, சொந்தம் கொண்டாட முடியாது. கோயிலுக்குச் சென்று சாமியைக் கும்பிடுகிறோம். அதற்காக ‘கோயில் எனக்குத்தான்; சாமியும் எனக்குத்தான்’ என்று சொந்தம் கொண்டாட முடியுமா... இதற்கு முன் கமல் எத்தனை முறை எம்.ஜி.ஆரைச் சுட்டிக்காட்டிப் பேசியிருப்பார்? இவர்களைப் போன்ற அரசியல்வாதிகளுக்குத் தேர்தல் நேரம் வந்தால்தான் எம்.ஜி.ஆரின் பெயரே ஞாபகம் வரும். தேர்தல் முடிந்ததும் மறந்துவிடுவார்கள். ஆனால், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் அதன் தொண்டர்களுக்கும் உயிர், பொருள், மூச்சு, ஆன்மா எல்லாமே எம்.ஜி.ஆர்... எம்.ஜி.ஆர்... எம்.ஜி.ஆர்தான். அம்மா... அம்மா... அம்மாதான்!’’