Published:Updated:

``உ.பி-யில் மார்ச் 10-ம் தேதி பாஜக ஆட்சியமைக்கும்!" - யோகி ஆரூடம்

யோகி ஆதித்யநாத்

``மார்ச் 10-ம் தேதி தேர்தல் முடிவுகள் வரும்போது மாநிலம் முழுவதும் பாஜக மட்டுமே தெரியும். சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர்கள் இப்போதே வெளிநாடுகளுக்கு டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டனர்." - யோகி ஆதித்யநாத்.

``உ.பி-யில் மார்ச் 10-ம் தேதி பாஜக ஆட்சியமைக்கும்!" - யோகி ஆரூடம்

``மார்ச் 10-ம் தேதி தேர்தல் முடிவுகள் வரும்போது மாநிலம் முழுவதும் பாஜக மட்டுமே தெரியும். சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர்கள் இப்போதே வெளிநாடுகளுக்கு டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டனர்." - யோகி ஆதித்யநாத்.

Published:Updated:
யோகி ஆதித்யநாத்

உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தல், கடந்த பிப்ரவரி 10-ம் தேதி முதல் நடைபெற்றுவருகிறது. மொத்தமுள்ள 403 தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக நடைபெற்றுவரும் இந்தத் தேர்தலில், இதுவரை ஆறு கட்ட வாக்குப்பதிவு நடந்துமுடிந்துள்ளது. 7-ம் கட்ட வாக்குப்பதிவு, வருகின்ற 7-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த நிலையில், இறுதிக்கட்டத் தேர்தல் பிரசாரத்தில் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. அந்த வகையில், அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரப்பிரதேச மாநிலம், சந்தோலியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

அகிலேஷ் - மாயாவதி
அகிலேஷ் - மாயாவதி

அப்போது பேசிய யோகி, ``ஆறு கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த நிலையில், இப்போதே பா.ஜ.க-வின் வெற்றி 300 தொகுதிகளைத் தாண்டிவிட்டதாகக் கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன. மார்ச் 10-ம் தேதி தேர்தல் முடிவுகள் வரும்போது மாநிலம் முழுவதும் பா.ஜ.க மட்டுமே தெரியும். இதற்கு பயந்து சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர்கள் இப்போதே வெளிநாடுகளுக்கு டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டனர். மாநிலத்தில் திறமையான ஆட்சி அமைந்தால், வளர்ச்சி ஏற்படும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

மார்ச் 10-ம் தேதி உ.பி-யில் பா.ஜ.க ஆட்சி அமையும்போது, ​​பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் மக்களுக்கு ஹோலி மற்றும் தீபாவளியன்று இலவச எல்பிஜி காஸ் சிலிண்டர்களை விநியோகிக்க முடிவு செய்திருக்கிறோம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism