Published:Updated:

திருச்சி:`ஸ்டாலின் முதல்வரானால்தான் ஏழு பேர் விடுதலை சாத்தியமாகும்!’ - ஆர்.எஸ்.பாரதி

ஆர்.எஸ்.பாரதி
ஆர்.எஸ்.பாரதி

``ஸ்டாலின் முதலமைச்சரானால்தான் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை சாத்தியமாகும். தற்போது ஆட்சியிலுள்ள அ.தி.மு.க-வினருக்கு அவர்களை விடுதலை செய்யும் தைரியம் இல்லை.”

``பிப்ரவரி 28 -ம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கவிருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வந்திருக்கிறது. அதற்கான வேலைகளில் தி.மு.க எப்போதோ தயராகிவிட்டது” என தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறினார்.

தி.மு.க வழக்கறிஞர்கள் அலுவலகம்
தி.மு.க வழக்கறிஞர்கள் அலுவலகம்

திருச்சி மாவட்ட தி.மு.க வழக்கறிஞர்கள் களப்பணி அலுவலகத்தை தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி திறந்துவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, ``தேர்தல் ஆணையம் தொடர்ந்து பல புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறது. தி.மு.க-வுக்கு வரும் தேர்தல் சவாலாக இல்லை. பல தேர்தலைச் சந்தித்தவர்களுக்கும் சட்டபூர்வமான அறிவுரைகள் தேவைப்படுகின்றன. எனவே, வழக்கறிஞர்களைவைத்து பல முன் தயாரிப்புகளில் ஈடுபட்டுவருகிறோம்.

கமல் தி.மு.க கூட்டணியில் இணைவாரா என்பது குறித்து எங்களுக்கு ஜோசியம் தெரியாது. தி.மு.க ஏற்கெனவே ஆட்சியிலிருந்தபோதும் முரண்பட்ட கொள்கைகொண்ட கட்சியினர் மத்தியில் ஆட்சியில் இருந்திருக்கிறது. இருந்தபோதும் நாங்கள் சிறந்த ஆட்சியைத் தந்திருக்கிறோம். வரும் தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்று, மத்தியில் பா.ஜ.க ஆட்சியிலிருந்தாலும் சிறந்த முறையில் ஆட்சி செய்வோம். மத்தியில் இருப்பவர்களோடு கூட்டாட்சி செய்ய அறிவுக்கூர்மை இருந்தால் போதும்.

ஆர்.எஸ்.பாரதி
ஆர்.எஸ்.பாரதி

ஸ்டாலின் முதலமைச்சரானால்தான் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை சாத்தியமாகும். தற்போது ஆட்சியிலுள்ள அ.தி.மு.க-வினருக்கு அவர்களை விடுதலை செய்யும் தைரியம் இல்லை. பிப்ரவரி 28-ம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கவிருக்கிறார்கள்ர்கள். அது குறித்து நம்பத் தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வந்திருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்க இன்னும் 20 நாள்களே இருப்பதால் வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து அ.தி.மு.க-வால் எதுவும் செய்ய இயலாது.

தி.மு.க கூட்டணியில் புதிய கட்சிகளைச் சேர்ப்பது குறித்து தி.மு.க தலைவர் ஸ்டாலின்தான் முடிவெடுப்பார். சசிகலாவின் கணவர் நடராஜன் தி.மு.க-விலிருந்து உருவானவர். தற்போது தி.மு.க-வுக்கும் சசிகலாவுக்கும் எந்த உறவும் இல்லை" என்றார்.

 தி.மு.க முதன்மை செயலாளர் கே.என்.நேரு
தி.மு.க முதன்மை செயலாளர் கே.என்.நேரு

பேட்டியின்போது அருகிலிருந்த தி.மு.க முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவிடம் செய்தியாளர்கள், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த நேரு, ``அவர்கள் ஏமாற்றிவருகிறார்கள்” என்றார். மேலும், ``தி.மு.க-வைத் தோல்வி அடையச் செய்ய வேண்டும் என தினகரன் கூறுகிறார். அவருக்கும் தி.மு.க-வுக்கும் எந்த உறவும் இல்லை" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு