Published:Updated:

``முதல்வர் பேருந்தில் பயணம் செய்வதென்பது உலக மகா அதிசயம் இல்லை..!" - ஓ.பி.எஸ்

ஓ.பி.எஸ்

`நிதி நிலை சீரழிந்து வருகிறது. அதை சீராக்கி கட்டுக்குள் கொண்டு வருவதில் ஆளும் கட்சி தோல்வியடைந்து விட்டது. முதலமைச்சர் பொதுமக்களுடன் பேருந்தில் பயணம் செய்வது என்பது உலக மகா அதிசயம் இல்லை.' - ஓ.பி.எஸ்

``முதல்வர் பேருந்தில் பயணம் செய்வதென்பது உலக மகா அதிசயம் இல்லை..!" - ஓ.பி.எஸ்

`நிதி நிலை சீரழிந்து வருகிறது. அதை சீராக்கி கட்டுக்குள் கொண்டு வருவதில் ஆளும் கட்சி தோல்வியடைந்து விட்டது. முதலமைச்சர் பொதுமக்களுடன் பேருந்தில் பயணம் செய்வது என்பது உலக மகா அதிசயம் இல்லை.' - ஓ.பி.எஸ்

Published:Updated:
ஓ.பி.எஸ்

தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் கடந்த 27-ம் தேதி நடைபெற்ற தேர்த் திருவிழாவில், மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதில் பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் களிமேடு கிராமத்துக்குச் சென்று ஊர் மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறிவருகின்றனர்.

தேரை பார்வையிடும் ஓ.பன்னீர்செல்வம்
தேரை பார்வையிடும் ஓ.பன்னீர்செல்வம்
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில், இன்று அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் களிமேடு கிராமத்துக்குச் சென்றார்.

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்

விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்ட பிறகு, ஊர் மக்களிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.25,000 நிவாரண உதவி தொகை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஓ.பி.எஸ், ``களிமேடு தேர் விபத்தில் இறந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களில் வீடு இல்லாமல் யாராவது இருந்தால், அவர்களுக்கு வீடு வழங்க வேண்டும். இறந்த குடும்பத் தலைவர்களுடைய வாரிசுகளின் கல்விச் செலவை அரசு ஏற்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பொதுவாக தேர் செல்லும் பாதையில் சாலை மேடு பள்ளங்களாக இருக்கிறதா என கண்காணிக்க வேண்டும். தேரோட்டம் முடியும் வரை மின் இணைப்பை துண்டித்திருக்க வேண்டும். அப்படி எதுவும் செய்ததாக தெரியவில்லை. விபத்து நடப்பதற்கு காரணமாக, கவனக்குறைவாக இருந்த அரசு அலுவலர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு நபர் குழு பாகுபாடில்லாமல் விசாரணை நடத்த வேண்டும்.

ஓ.பி.எஸ், வைத்திலிங்கம்
ஓ.பி.எஸ், வைத்திலிங்கம்

தி.மு.க அரசு இந்த ஓராண்டு ஆட்சியில் பாஸ் மார்க் வாங்க வில்லை பெயிலாகிவிட்டது. `நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்டவை உடனடியாக நிறைவேற்றப்படும்' என்றனர். ஆனால் இதுவரை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. நீண்ட கால, குறுகிய கால சமூக பாதுகாப்பு திட்டங்கள் எதையும் அறிவிக்கவில்லை. 10 ஆண்டுகள் அ.தி.மு.க ஆட்சி சிறப்பாக இருந்தது.

ஏழை, எளிய கீழ்தட்டு மக்கள் வாழ்வில் உயரும் வகையிலான சமூக பாதுகாப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. தி.மு.க அரசு அதனை படிப்படியாக குறைத்து, ரத்து செய்து கொண்டிருக்கிறது. நிதி நிலை சீரழிந்து வருகிறது. அதை சீராக்கி கட்டுக்குள் கொண்டு வருவதில் ஆளும் கட்சி தோல்வியடைந்து விட்டது. முதலமைச்சர் பொதுமக்களுடன் பேருந்தில் பயணம் செய்வது என்பது உலக மகா அதிசயம் இல்லை. தி.மு.க ஆட்சிக்கு வந்தால் மின்வெட்டும் வரும் என்பது கடந்த கால வரலாறு" எனத் தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism