Published:Updated:

தனயனுக்காக ஒரு தர்மயுத்தம்!

விஜயலட்சுமியிடம் நலம் விசாரிக்கும் ஜெயலலிதா
பிரீமியம் ஸ்டோரி
விஜயலட்சுமியிடம் நலம் விசாரிக்கும் ஜெயலலிதா

2012 ஏப்ரல் 12-ம் தேதி.அப்போலோவில் சிகிச்சை பெற்று வந்த, அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமியைப் பார்க்கப் போனார், அன்றைய முதல்வர் ஜெயலலிதா.

தனயனுக்காக ஒரு தர்மயுத்தம்!

2012 ஏப்ரல் 12-ம் தேதி.அப்போலோவில் சிகிச்சை பெற்று வந்த, அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமியைப் பார்க்கப் போனார், அன்றைய முதல்வர் ஜெயலலிதா.

Published:Updated:
விஜயலட்சுமியிடம் நலம் விசாரிக்கும் ஜெயலலிதா
பிரீமியம் ஸ்டோரி
விஜயலட்சுமியிடம் நலம் விசாரிக்கும் ஜெயலலிதா

ழ முயன்ற விஜயலட்சுமியை ‘`எழுந்திருக்க வேண்டாம்’’ என்றார் ஜெயலலிதா. அவருக்குப் பின்னால் ஓ.பன்னீர்செல்வம் அவரின் மகன்கள் ரவீந்திரநாத் குமார், ஜெயபிரதீப் மற்றும் பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜா ஆகியோர் நின்றுகொண்டிருந்தார்கள். “விரைவில் குணமடைந்து வருவீர்கள்’’ என ஜெயலலிதா சொன்னபோது, ‘`நீங்க இருக்கும்போது எனக்கு எந்தக் கவலையும் இல்லை. எனக்காகவோ பிள்ளைகளுக்காகவோ அவர் அதிகம் கவலைப்பட்டதில்லை. பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்துதான் எனக்குக் கவலை’’ என்றார் விஜயலட்சுமி.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தச் சம்பவம் நடந்து ஏழாண்டுகள் ஆகிவிட்டன. விஜயலட்சுமியின் கவலை இன்னும் தீரவில்லை. கணவரைப்போலவே மகனை வி.ஐ.பி அரசியல்வாதியாகப் பார்க்க வேண்டும் என்பது விஜயலட்சுமியின் ஆசை. அந்த ஆசையைத்தான் தன்னைப் பார்க்க வந்த ஜெயலலிதாவிடம் பூடகமாக வெளிப்படுத்தினார். அதன்பிறகு நடைபெற்ற 2014 நாடாளுமன்றத் தேர்தலில் ரவீந்திரநாத்துக்கு எம்.பி சீட் வாங்கித் தரச் சொல்லி, குடும்பத்தினர் பன்னீர்செல்வத்துக்கு நெருக்கடி கொடுத்துக்கொண்டிருந்தார்கள். ‘`ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தனுக்கு அம்மா சீட் கொடுத்தார்கள்... உங்க மகனுக்கு ஒரு தொகுதியை வாங்க முடியாதா? சபாநாயகராக இருந்த ஜெயக்குமாரை அந்தப் பதவியிலிருந்து நீக்கிய பிறகும்கூட அவரால் தன் மகனுக்கு சீட் வாங்க முடியும் என்றால், உங்களை முதல்வராக அமர வைத்த அம்மாவிடம் மகனுக்காகச் சீட்டு வாங்கியிருக்க முடியுமே’’ எனக் குடும்பத்தினர் குமுறினார்கள்.

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்

ஜெயலலிதா உயிருடன் இருந்த வரையில் மகனுக்காகத் தேர்தல் சீட்டைப் பன்னீர்செல்வத்தால் வாங்க முடியவில்லை. கட்சியின் ஒருங்கிணைப்பாளராக மாறிய பிறகுதான் தேனித் தொகுதியை எடுத்துக் கொள்ள முடிந்தது. எல்லாத் தொகுதிகளிலும் அ.தி.மு.க கூட்டணி தோற்றாலும் தேனியில் மட்டுமே ஜெயிக்கிறது என்றால், அது பன்னீர்செல்வம் போட்ட சூத்திரம். ஆட்சிக்கு மேல் ‘மெஜாரிட்டி’ என்கிற கத்தி தொங்கிக் கொண்டிருந்த சூழலில், நாடாளுமன்றத் தேர்தலைவிட 22 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் வெல்வதுதான் ஆட்சியாளர்களின் லட்சியமாக இருந்தது. தேனி நாடாளுமன்றத் தொகுதிக்குள் வரும் ஆண்டிபட்டி, பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் கட்சி ஜெயிப்பதைவிட, மகன் ஜெயிப்பது பன்னீர்செல்வத்துக்கு முக்கியமாக இருந்தது. ஆண்டிபட்டியிலும் பெரியகுளத்திலும் அ.தி.மு.க தோற்றது. ஆனால் தேனியில் ஜெயித்தது.

மகன் ‘மக்கள் பிரதிநிதி’ ஆகிவிட்டார். அடுத்து அவரை மந்திரி ஆக்குவதற்காக டெல்லிக்குப் படையெடுப்பு நடத்திக் கொண்டிருக்கிறார் பன்னீர்செல்வம். மகனுக்குப் பட்டாபிஷேகம் சூட்டுவதற்காக அவர் நடத்தும் மூவ் முன்னேற்றம் பெறாத நிலையில், சமீபத்தில் டெல்லி சென்று அமித் ஷாவைச் சந்தித்திருக்கிறார். வழக்கமான சந்திப்பு என இதைக் கடந்து சென்றுவிட முடியாது. வேலூர்த் தொகுதி தேர்தல், முத்தலாக் தடை மசோதா விவகாரங்களோடு இந்தச் சந்திப்பு முடிச்சுப் போடப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மகனை ஜெயிக்க வைத்து, தன் தொகுதிக்குள் செல்வாக்கையும் நிலைநிறுத்தும் பன்னீர்செல்வத்தின் அரசியலுக்குப் பதிலடி கொடுக்க நினைக்கிறார் எடப்பாடி. அதனால்தான், வேலூரில் எப்படியாவது

ஏ.சி.சண்முகம் ஜெயித்துவிட வேண்டும் எனக் களமாடுகிறார் எடப்பாடி. இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் ஜெயித்தால், மக்களவையில் அ.தி.மு.க-வின்

எம்.பி-க்கள் எண்ணிக்கை இரண்டாக உயரும். ரவீந்திரநாத் குமாரைவிட ஏ.சி.சண்முகம் சீனியர். ஒரு மாநிலத்தில் உள்ள கூட்டணிக் கட்சியில் இருக்கும் இரண்டு எம்.பி-க்களுக்கும் மந்திரி பதவியை அளிப்பது சாத்தியமில்லை. எனவே ஏ.சி.சண்முகத்துக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் வாய்ப்பு அதிகம் என்பது எடப்பாடியின் கணக்கு. ஆனால் ‘தன் மகனுக்கு ஏ.சி.சண்முகம் போட்டியாக வந்துவிடக் கூடாது’ என நினைக்கிறார் பன்னீர். அவர் கணக்குப்படி வேலூரில் ஏ.சி.சண்முகம் தோற்க வேண்டும். அப்போதுதான் மகனுக்கு ரூட் கிளியர் ஆகும்.

இரண்டு மகன்களுடன் ஓ.பி.எஸ்.
இரண்டு மகன்களுடன் ஓ.பி.எஸ்.

‘ஏ.சி.சண்முகத்தைவிட என் மகன்தான் பி.ஜே.பி-க்கு பெட்டராக இருப்பான்’ என்பதை முத்தலாக் தடை மசோதாவில் வெளிப்படுத்தியும் விட்டார் பன்னீர்செல்வம். ``முத்தலாக் மசோதா, பெண்களுக்கு சமூகத்தில் சம உரிமைகளையும், நல்வாய்ப்புகளையும் ஈட்டித்தரும். பாலின சமத்துவத்துக்கு, இந்த முத்தலாக் சட்டத் திருத்த மசோதா மேலும் வலுச்சேர்க்கும்’’ என நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறார் ரவீந்திரநாத். முத்தலாக் மசோதாவை ரவீந்திரநாத் ஆதரித்துப் பேசுவதற்கு சரியாக 211 நாள்களுக்கு முன்புதான், அந்தச் சட்டத்தை அதே நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க எம்.பி அன்வர் ராஜா எதிர்த்துப் பேசினார். கடந்த நாடாளுமன்றத்தில் எதிர்த்துவிட்டு இந்த நாடாளுமன்றத்தில் ஆதரித்துப் பேசுவது எவ்வளவு பெரிய முரண்பாடு. கட்சிக்கு ஒரு கோட்பாடு, நாடாளுமன்றத்தில் வேறு நிலைப்பாடு எப்படி இருக்க முடியும்?

வேலூர்த் தொகுதியில் அடங்கியிருக்கும் ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லிம்கள் அதிகம். வேலூரை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்பதற்காக வேலூர்க் கிழக்கு மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு இணைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முஹம்மது ஜானை ராஜ்யசபா எம்.பி ஆக்கினார் எடப்பாடி. முஸ்லிம்களின் ஓட்டுகளைக் குறி வைத்து எடப்பாடி நடத்திய சாணக்கியத்தனத்தை முத்தலாக் மசோதாவுக்கு ஆதரவு அளித்து சுக்கு நூறாக்குகிறார் பன்னீர்செல்வம். வேலூரில் முஸ்லிம் ஓட்டுகளை எடப்பாடி அறுவடை செய்ய நினைத்தார். பன்னீரோ பதம் பார்க்கிறார். ஏ.சி.சண்முகம் ஜெயிக்கக் கூடாது என்பதற்காகப் பன்னீரால் எய்யப்படும் அஸ்திரம் இது.

ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் தன் கட்சியால் எதிர்க்கப்பட்ட முத்தலாக் தடை மசோதாவைப் பன்னீர்செல்வத்தின் மகன் ஆதரிக்கிறார் என்றால் அதற்கு ஆயிரம் அர்த்தங்களைத் தேட வேண்டியதில்லை. அஜென்டா ஒன்றுதான். நாடாளுமன்றத்தில் அன்வர் ராஜா ஆற்றிய உரையை ‘முத்தலாக் உரிமை மீறும் செயல்’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டார்கள். அந்தப் புத்தகத்தின் வெளியிட்டு விழாவில் அப்போதைய மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை, செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், நிலோபர் கபீல் என ஆறு அமைச்சர்கள் கலந்து கொண்டனர். அதாவது, அன்வர் ராஜாவின் நிலைப்பாட்டை அ.தி.மு.க ஆதரிக்கிறது என்பதுதான் அதற்கு அர்த்தம். அந்த விழாவில் பேசிய வேலுமணி, “நாடாளுமன்றத்தில் பேசி, நமது நிலைப்பாட்டை எடுத்துரைக்க வேண்டும் என அன்வர் ராஜாவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் அனுமதி வழங்கினார். அன்வர் ராஜாவின் உரை வீரம் மிக்கது’’ என்றார். இப்போது முத்தலாக் விவகாரத்தில் ரவீந்திரநாத் அப்படியே பல்டி அடிக்கிறார். பழிவாங்கல்கள், துரோகங்கள் அரசியலின் அரிச்சுவடிகள். ஆனால், சொந்தக் கட்சியின் கொள்கைகளுக்கே குழி வெட்டுவதன் மூலம் பதவிக்கான ‘தர்ம யுத்தம்’ தொடர்கிறது.

சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் தொடங்கியபோது பன்னீர்செல்வத்தின் பக்கம் நின்றவர்கள் யாரும் இப்போது அவருடன் இல்லை. தர்மயுத்தத்தின்போது பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக அ.தி.மு.க-வின் அடிமட்டத் தொண்டன் தொடங்கி, கட்சியின் மூத்த நிர்வாகிகள் வரை பல்லா யிரக்கணக்கானோர் திரண்டனர். அப்போது தனக்கு அரணாக நின்றவர்களுக்குப் பன்னீரால் அங்கீகாரத்தைக்கூடப் பெற்றுத் தர முடியவில்லை. மாறாக அவர்களைப் பலி கொடுத்துதான் துணை முதல்வர் நாற்காலியிலும் ஒருங்கிணைப்பாளர் பதவியிலும் வந்து அமர்ந்தார். பன்னீர்செல்வம் தர்மயுத்தம் தொடங்கியபோது முதன்முதலில் ஆதரவு அளித்தவர் மைத்ரேயன். பன்னீர்செல்வத்துக்கு டெல்லியின் கருணையைப் பெற்றுத் தந்து, அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பை வாங்கிக் கொடுத்த மைத்ரேயனின் இன்றைய நிலைமை பரிதாபம். நாடாளுமன்றத் தேர்தலிலும் ராஜ்ய சபா தேர்தலிலும் போட்டியிட வாய்ப்பு தரவில்லை எனத் தனியாகப் புலம்பும் நிலைக்கு அவரைத் தள்ளினார் பன்னீர்செல்வம்.

ஓ.பி.எஸ்ஸுக்காக ஓங்கிக் குரல் கொடுத்த முன்னாள் அமைச்சர்கள் மோகன், நத்தம் விசுவநாதன், ஜெயபால், பொன்னையன் எந்த இடத்தில் இப்போது இருக்கிறார்கள்? தன்னை வாரித் தூற்றிய அ.ம.மு.க-விலிருந்து வந்த சசிரேகாவைச் செய்தித் தொடர்பாளர் ஆக்கினார் எடப்பாடி. பன்னீரின் ஆதரவாளராக இருந்த சீனியரான பொன்னையனுக்கும் அதே செய்தித் தொடர்பாளர் பதவிதான். பன்னீரின் சாதனைக்கு இது ஒன்றே பதம்.

கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்தத் தகுதியானவர் எனச் சொல்லி பன்னீரின் பின்னால் திரண்ட எம்.பி-களும் எம்.எல்.ஏ-களும் கடைசியில் எடப்பாடியிடம்தான் புகலிடம் தேடிப் போனார்கள். தர்மயுத்தத்தின்போது பன்னீர் பக்கம் நின்றவர்கள்... அவருக்காகச் சொத்துகளை விற்று, செலவு செய்தவர்கள்... உழைப்பைச் சிந்தியவர்கள் யாருமே முன்னுக்கு வரவில்லை. அவர்களுக்காகப் பன்னீரும் எதையும் செய்யவில்லை. தன் தம்பி ஓ.ராஜாவை மதுரை மாவட்டப் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத் தேர்தலில் தலைவர் ஆக்கினார். மகனை எம்.பி ஆக்கினார். இப்போது மந்திரி ஆக்க முயன்றுகொண்டிருக்கிறார்.

அ.தி.மு.க-வில் சேர விருப்பம் தெரிவித்த தங்க தமிழ்ச்செல்வனை, தன் மகனுக்காகத் தி.மு.க-வுக்கு விரட்டியடித்தார். தர்மயுத்தத்தால் பன்னீர்செல்வம் சாதித்தது அனைத்தும் சுயநலம்தான்.

பொதுக்குழுவில் சசிகலாவைப் பொதுச் செயலாளராக நியமனம் செய்யும் தீர்மானத்தை வழிமொழிந்துவிட்டு... ‘சசிகலா தலைமையின் கீழ் விசுவாசத்துடன் பணியாற்றுவோம்’ எனப் பொங்கிவிட்டு... தீர்மானத்தைக் கொண்டு போய் சசிகலா கரங்களில் அளித்து, ‘தலைவியே தலைமையேற்க வா’ எனச் சொல்லிவிட்டு... சசிகலா பொதுச்செயலாளராகப் பதவியேற்றபோது காலில் விழுந்து வணங்கிவிட்டு... அவர் முதல்வர் ஆவதற்காகப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு என இத்தனையையும் ‘சின்னம்மாதாசனாக’ மாறி நடத்திவிட்டு, ‘`சசிகலா தலைமையை யாரும் ஏற்கவில்லை’’ என ஜெயலலிதா சமாதியில் பொங்கியது அசல் ‘அமாவாசை’ அரசியல்.

ஜெயலலிதாவுடன் ஓ.பி.எஸ். குடும்பம்
ஜெயலலிதாவுடன் ஓ.பி.எஸ். குடும்பம்

இரட்டை இலையை எதிர்க்கட்சிகள்கூட முடக்க நினைத்ததில்லை. தனி ஆவர்த்தனம் காட்டியபோது பன்னீர்செல்வம், இரட்டை இலையை முடக்கினார். தர்மயுத்தத்துக்கு ஆதரவு திரட்ட பன்னீர் பயணம் கிளம்பியபோது காஞ்சிபுரத்தில், ‘`தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெறும்’’ என்றார். ஆட்சியே போகும் எனச் சொல்லிவிட்டு, அதே ஆட்சியில் துணை முதல்வராக அமர்வது எல்லாம், வேற லெவல்.

2017 மே மாதம் திண்டுக்கல்லில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவில் பேசிய பன்னீர்செல்வம், ‘`தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடக்கிறது. எப்போது எந்தத் தேர்தல் வந்தாலும் எடப்பாடி அணியினர் டெபாசிட் இழப்பார்கள்’’ என்றார். ‘`பன்னீர் - எடப்பாடி அணிகள் இணைவதற்காக நான் வகிக்கும் நிதியமைச்சர் பதவியையும் விட்டுக்கொடுக்கத் தயார்’’ என அமைச்சர் ஜெயக்குமார் சொன்னபோது, ‘`ஜெயக்குமாருக்கு எவ்வளவு ஆணவம்! நிதியமைச்சர் பதவியை விட்டுத் தருவதாகக் கூறுவதற்கு ஜெயக்குமாருக்கு என்ன தகுதி இருக்கிறது?’’ என்றார் பன்னீர். இவ்வளவையும் பேசிவிட்டு அந்தப் பதவியில்தானே இப்போது பன்னீர்செல்வம் உட்கார்ந்தி ருக்கிறார். நாற்காலிக்காக நாக்கு எத்தனை சுழற்று சுழற்றுகிறது.

தனயனுக்காக ஒரு தர்மயுத்தம்!

தன் பதவிக்காகத் தன் ஆதரவாளர்களை விட்டுக்கொடுத்த பன்னீர், இப்போது தன் மகன் பதவிக்காகத் தன் கட்சியையே விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism