Published:Updated:

ஜோடோ யாத்திரை: ``வெறுப்பெனும் சந்தையில் அன்பு என்ற கடையைத் திறக்கிறேன்" - ராகுல் காந்தி

பாரத் ஜோடோ யாத்திரை

``இந்த யாத்திரை என்னிடம் பல பாசிட்டிவான மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது.” - ராகுல் காந்தி

ஜோடோ யாத்திரை: ``வெறுப்பெனும் சந்தையில் அன்பு என்ற கடையைத் திறக்கிறேன்" - ராகுல் காந்தி

``இந்த யாத்திரை என்னிடம் பல பாசிட்டிவான மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது.” - ராகுல் காந்தி

Published:Updated:
பாரத் ஜோடோ யாத்திரை

ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்றுவரும் பாரத் ஜோடோ யாத்திரை கடந்த செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது. கேரளா, கர்நாடகா, தெலங்கானா உட்பட பல மாநிலங்கள் வழியாக 3,500 கிலோமீட்டர் பயணத்தில், இந்த யாத்திரை ராஜஸ்தானைக் கடந்து தற்போது 105-வது நாளில் ஹரியானாவில் நுழைந்திருக்கிறது. ராஜஸ்தானிலிருந்து முண்டஹா எல்லை வழியாக ஹரியானாவுக்குள் நுழைந்த பாதயாத்திரைக்கு காங்கிரஸ் கட்சியினர், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய ராகுல் காந்தி," பாரத் ஜோடோ யாத்திரை மூலம் வெறுப்பு எனும் சந்தையில் அன்பு என்ற கடையைத் திறக்கிறேன். இந்தியாவில் வெறுப்பைப் பரப்புவதற்கு இவர்கள் (பாஜக) புறப்படும்போது, ​​எங்கள் சித்தாந்தத்தைக்கொண்ட மக்கள் அன்பையும் பாசத்தையும் பரப்புகிறார்கள். தற்போது காங்கிரஸ், பா.ஜ.க., சமாஜ்வாடி கட்சி தலைவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே இடைவெளி இருக்கிறது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இந்தப் பயணத்தில் நாங்கள் அதை மாற்ற நினைக்கிறோம். இந்த யாத்திரை என்னிடம் பல பாசிட்டிவான மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. அதிகமான பொறுமையையும், மற்றவர்களின் கருத்துகளை நிதானத்துடன் கேட்கக்கூடிய பக்குவத்தையும் இந்த யாத்திரை எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது" எனத் தெரிவித்திருக்கிறார்.