Published:Updated:

`பிரிட்டிஷாரை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் போராடியதேயில்லை' - மோடியின் `போராளி' கருத்தும் எதிர்வினையும்!

``ஒரு மதம் சார்ந்தோ, இனம் சார்ந்தோ இந்தப் போராட்டத்தைச் சுருக்கி பிரிவினையை ஏற்படுத்த முயல வேண்டாம்'' - சுக்பீர் சிங் பதால்.

கடந்த சில நாள்களாக நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதங்களுக்கு நேற்று பதிலளித்தார் பிரதமர் நரேந்திர மோடி. அப்போது ``சீக்கியர்கள் இந்த தேசத்துக்கு அளித்த பங்களிப்பை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்'' எனச் சீக்கிய சமூகத்தைப் புகழ்ந்து பேசிய பிரதமர் மோடி, `விவசாயிகள் தங்கள் போராட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும்' என்றும் கேட்டுக்கொண்டார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி
RSTV
விவசாயிகளுடன் பேசத் தயார்; மன்மோகன் சிங் ரெஃபரென்ஸ்! - பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள்

தொடர்ந்து பேசிய மோடி, ``இப்போதெல்லாம் போராட்டம் நடத்துவதற்காகவே ஒரு தனிக்கூட்டம் உருவாகியிருக்கிறது. அவர்கள் போராட்டம் நடத்தியே உயிர் வாழ்பவர்கள்'' எனப் போராளிகளை விமர்சிக்கும்விதமாகப் பேசியிருந்தார்.

இந்தநிலையில், எதிர்க்கட்சிகள், விவசாயச் சங்கங்கள் ஆகியவை மோடியின் `போராளிகள்' குறித்த கருத்துக்கு எதிர்க் கருத்துகளைப் பதிவு செய்திருக்கின்றனர். அந்தக் கருத்துகள் அனைத்தையும் பின்வருமாறு காணலாம்.

சீதாராம் யெச்சூரி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, ``மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காகவும், சிறந்த வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்காகவும் போராட்டம் நடத்துகின்றனர். போராடுபவர்கள் தேசபக்தர்கள்; ஒட்டுண்ணிகள் அல்ல'' என்று மோடியின் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கருத்து தெரிவித்திருக்கிறார்.

சீதாராம் யெச்சூரி
சீதாராம் யெச்சூரி

சம்யுக்தா கிசான் மோர்ச்சா

வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடிவரும் சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பு, ``பிரதமர் மோடி போராளிகள் குறித்துக் கூறியிருக்கும் கருத்து விவசாயிகளை அவமதிக்கும் வகையில் இருக்கிறது'' என்று கண்டனம் தெரிவித்திருக்கிறது. அந்த அமைப்பின் தலைவர் தர்ஷன் பால், ``இந்தியாவுக்குச் சுதந்திரம் பெற்றுத் தந்ததே இது போன்ற போராளிகள்தாம் என்பதைப் பிரதமருக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம். அந்த வகையில் போராளிகளாக இருப்பதில் பெருமிதம்கொள்கிறோம். பா.ஜ.க-வும் அதன் முன்னோடிகளும், நம்மை அடிமைப்படுத்திய பிரிட்டிஷாரை எதிர்த்து எந்தப் போராட்டத்தையும் செய்யாதவர்கள். அவர்கள் போராளிகளுக்கு எப்போதுமே எதிரிகள்தாம். தற்போது வரையிலும் போராட்டங்களைக் கண்டு அஞ்சுபவர்கள் அவர்கள்'' என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அனைத்திந்திய கிசான் சபை

அனைத்திந்திய கிசான் சபையின் பொதுச்செயலாளர் ஹன்னன் முல்லா பேசுகையில், ``வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரிப் போராடிவரும் விவசாயிகளை அவமானப்படுத்தும்விதமாகப் பேசியிருக்கிறார் பிரதமர் மோடி. இதற்காக அவர் நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். `போராட்டத்தில் உயிர் வாழ்பவர்கள்' என்கிற அவமானம் `கார்ப்பரேட்களால் உயிர் வாழும்' பிரதமரிடமிருந்து எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. பா.ஜ.க கட்சி சார்ந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, இந்தியர்களை அடிமைப்படுத்திய ஆங்கிலேயர்களை எதிர்த்து நடைபெற்ற, `போற்றத்தக்க' சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டதே இல்லை'' என்று பேசியிருக்கிறார்.

சஞ்சய் ராவத்
சஞ்சய் ராவத்
Twitter/@rautsanjay61
விவசாயிகள் போராட்டம்: குடிநீர், மின்சாரம், இன்டர்நெட் துண்டிப்பு... டெல்லி எல்லைகளில் நடப்பது என்ன?

சஞ்சய் ராவத்

விவசாய சங்கங்களின் தலைவர்களுள் ஒருவரான ராகேஷ் டிக்கைடுடன் எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு, ``பெருமையோடு சொல்லுங்கள்... நாம் அனைவரும் போராளிகள். ஜெய் ஜவான்... ஜெய் கிசான்!'' என்று ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார் சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்.

பிரிவினையை உண்டாக்க வேண்டாம்!

சீக்கியர்கள் குறித்துப் பிரதமர் புகழ்ந்து பேசியது குறித்தும் சிலர் விமர்சனங்களை முன்வைத்திருக்கின்றனர். கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் அமைப்பின் (Kisan Mazdoor Sangrash Committee) பொதுச்செயலாளர் சர்வான் சிங், ``அமைதியாகப் போராட்டம் செய்துவந்தோம். ஆனால், எதற்காக நாங்கள் போராட்டம் செய்த இடங்களைச் சுற்றிப் பல அடுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டன என்பது குறித்து பிரதமர் சொல்லவேயில்லை. போராட்டம் நடைபெற்ற பகுதிகளில் இன்டர்நெட் துண்டிக்கப்பட்டது குறித்தும் பேசவேயில்லை. கழிப்பறைகள், குடிநீர் வசதிகள் உள்ளிட்டவை துண்டிக்கப்பட்டது குறித்தும் பிரதமர் எதுவும் சொல்லவில்லை. அதேநேரத்தில், சீக்கியர்கள் குறித்து பிரதமர் புகழ்ந்து பேசியது ஏன் என்பதும் தெரியவில்லை'' என்று கேள்வியெழுப்பியிருக்கிறார்.

சிரோமணி அகாலி தளம் கட்சித் தலைவர் சுக்பீர் சிங் பதால், ``நாங்கள் அனைவரும் நாடு முழுவதுமுள்ள விவசாயிகளின் நலனுக்காகத்தான் போராடிவருகிறோம். ஒரு மதம் சார்ந்தோ இனம் சார்ந்தோ இந்தப் போராட்டத்தைச் சுருக்கி பிரிவினையை ஏற்படுத்த முயல வேண்டாம்'' என்று கூறியிருக்கிறார்.

சுக்பீர் சிங் பாதல்
சுக்பீர் சிங் பாதல்
செங்கோட்டையில் மதக்கொடி; பா.ஜ.க தொடர்பு! - வன்முறையைத் தூண்டியதாகக் கூறப்படும் தீப் சித்து யார்?

பாரதிய கிசான் சங்கம் (உக்ரஹான்) அமைப்பின் பொதுச்செயலாளர் சுக்தேவ் சிங், ``சர்வதேச அளவில் பிரதமரின் புகழ் சரிவைக் கண்டிருப்பதால் இவ்வாறு (சீக்கியர்களைப் புகழ்ந்து) பேசியிருக்கிறார். முதலில், ஜனவரி 26 வன்முறைக்குப் பிறகு அரசு எங்களை இந்த உலகுக்குத் தவறாகக் காட்ட முயன்றது. ஆனால், அதில் தோல்வியடைந்துவிட்டது. இதன் காரணமாக தற்போது எங்களைப் புகழ்ந்து பேசிவருகின்றனர். அரசியல் நிர்பந்தம் காரணமாகவே இப்படிப் பேசியிருக்கிறார் பிரதமர் மோடி'' என்று கூறியிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு