Published:Updated:

``காங்கிரஸ் இல்லாமல் மூன்றாவது அணி அமைவது சாத்தியமில்லை!'' - சரத்பவார் திட்டவட்டம்

சரத்பவார்

``காங்கிரஸ் இல்லாமல் மூன்றாவது அணி அமைவது சாத்தியமில்லை'' என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கருத்து தெரிவித்திருக்கிறார்.

``காங்கிரஸ் இல்லாமல் மூன்றாவது அணி அமைவது சாத்தியமில்லை!'' - சரத்பவார் திட்டவட்டம்

``காங்கிரஸ் இல்லாமல் மூன்றாவது அணி அமைவது சாத்தியமில்லை'' என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கருத்து தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
சரத்பவார்

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வருவதை காங்கிரஸ் கட்சியால் தடுக்க முடியவில்லை. பஞ்சாப்பில் ஆட்சியில் இருந்தும் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. இதனால் 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு பாரதிய ஜனதாவுக்கு எதிராக ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை உருவாக்குவதில் மம்தா பானர்ஜி, சரத் பவார் ஆகியோர் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். இந்த நிலையில், மத்தியில் பா.ஜ.க-வுக்கு மாற்றாக அமையும் எந்த முயற்சியில் இருந்தும் காங்கிரஸை ஒதுக்கிவிட முடியாது என்று சமீபத்தில் சரத்பவார் அழுத்தம் திருத்தமாக கூறியிருந்தார்.

காங்கிரஸ் தலைவர்கள்
காங்கிரஸ் தலைவர்கள்

இந்த நிலையில் இன்று மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய சரத்பவார், ``நாட்டில் பணவீக்கம் மற்றும் வேலையின்மை குறித்து பேச வேண்டிய நேரம் இது... ஆனால், யாரும் இது பற்றி பேசுவதில்லை. காங்கிரஸ் கட்சி இல்லாமல் மூன்றாவது அணி அமைப்பது என்பது சாத்தியமில்லை'' என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism