Published:Updated:

``பாஜக பல மாநிலங்களில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தலாம்; ஆனால் தமிழ்நாட்டில்..!" - யஷ்வந்த் சின்ஹா

யஷ்வந்த் சின்ஹா

ஆளுநர்களின் செயல்பாடு அரசியல் அமைப்புச் சட்டப்படி இருக்க வேண்டும். ஆனால் தற்போது அப்படி இல்லை என யஷ்வந்த் சின்ஹா தெரிவித்திருக்கிறார்.

``பாஜக பல மாநிலங்களில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தலாம்; ஆனால் தமிழ்நாட்டில்..!" - யஷ்வந்த் சின்ஹா

ஆளுநர்களின் செயல்பாடு அரசியல் அமைப்புச் சட்டப்படி இருக்க வேண்டும். ஆனால் தற்போது அப்படி இல்லை என யஷ்வந்த் சின்ஹா தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
யஷ்வந்த் சின்ஹா

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை மாதம் 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸின் முன்னாள் மூத்த தலைவருமான யஷ்வந்த் சின்ஹா தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில், அவர் தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்பதற்காக சென்னை வந்துள்ளார்.

யஷ்வந்த் சின்ஹா
யஷ்வந்த் சின்ஹா

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய யஷ்வந்த் சின்ஹா, ``நாட்டில் தற்போது அசாதாரண சூழல் நிலவி வருகிறது. மகாராஷ்டிராவின் தற்போதைய அரசியல் சூழ்நிலையே அதற்கு சாட்சியாக இருக்கிறது. பல மாநிலங்களில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் பா.ஜ.க-வுக்கு தமிழ்நாட்டில் அது சாத்தியமாகவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

யஷ்வந்த் சின்ஹா - ஸ்டாலின்
யஷ்வந்த் சின்ஹா - ஸ்டாலின்

ஆளுநர்களின் செயல்பாடு அரசியல் அமைப்புச் சட்டப்படி இருக்க வேண்டும், ஆளுநரின் அதிகாரங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஒவ்வொரு பிரிவும் உடைக்கப்படுகிறது. மத்திய பா.ஜ.க அரசு கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிராக செயல்படுகிறது" என்றார்.