Published:Updated:

``எதிர்க்கட்சி மாநில ஆளுநர்கள்... ஆர்.எஸ்.எஸ்-ஸின் முழு நேர ஊழியர்கள்” - சொல்கிறார் கே.எஸ்.அழகிரி

கே.எஸ்.அழகிரி

"ஆர்.எஸ்.எஸ்-ஸின் முழு நேர ஊழியர்களாக இருக்கக்கூடியவர்கள்தான் இந்தியாவில் எதிர்க்கட்சிகள் ஆளுகின்ற மாநிலங்களில் ஆளுநர்களாகப் பணியாற்றுகிறார்கள்" என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

``எதிர்க்கட்சி மாநில ஆளுநர்கள்... ஆர்.எஸ்.எஸ்-ஸின் முழு நேர ஊழியர்கள்” - சொல்கிறார் கே.எஸ்.அழகிரி

"ஆர்.எஸ்.எஸ்-ஸின் முழு நேர ஊழியர்களாக இருக்கக்கூடியவர்கள்தான் இந்தியாவில் எதிர்க்கட்சிகள் ஆளுகின்ற மாநிலங்களில் ஆளுநர்களாகப் பணியாற்றுகிறார்கள்" என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

Published:Updated:
கே.எஸ்.அழகிரி

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிண்டியிலுள்ள அவரின் திருவுருவச் சிலைக்குக் கீழ் அலங்கரித்துவைக்கப்பட்டிருந்த புகைப்படத்துக்கும், சத்தியமூர்த்தி பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டிருத்த புகைப்படத்துக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மரியாதை செலுத்தினார். இதில் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் கிண்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ்.அழகிரி, ``ஜவஹர்லால் நேரு பிறந்தநாள் பெருமைப்படவேண்டிய நாள். இந்தியாவை உருவாக்கிய மாபெரும் சக்தி அவர். விவசாயம், பொருளாதார வளர்ச்சிக்கு நேரு நிறுவிய கொள்கைதான் காரணம். நேரு இந்தியாவின் தலைமைப் பொறுப்பை ஏற்காமல் இருந்திருந்தால் இந்தியா பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் போன்ற மோசமான நிலைக்கு வந்திருக்கும்.

சத்தியமூர்த்தி பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டிருத்த நேருவின் புகைப்படத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மரியாதை செலுத்தினார்.
சத்தியமூர்த்தி பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டிருத்த நேருவின் புகைப்படத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மரியாதை செலுத்தினார்.

நேரு அன்று பொதுத்துறை என்ற அற்புதத்தை உருவாக்கினார். இன்று தனியார்மயம் செய்கிறார்கள். இந்தியாவின் பொருளாதாரத்தைச் சிதைக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி மீண்டும் இந்தியாவைக் கட்டமைக்கும். மீண்டும் இந்தியாவை மேம்படுத்துவோம். இந்தியாவை இந்திய மக்களின் நாடாக மாற்றுவோம்.

கொலைகாரர்களை வெளியே உலாவவிடுவது தவறு. 25 ஆண்டுகளாக ஏராளமான தமிழகக் கைதிகள் சிறையில் இருக்கிறார்கள், அவர்களை விடுதலை செய்யாதது ஏன்... ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் விடுதலை நாட்டுக்கு நல்லது அல்ல. கூட்டணி வேறு, கொள்கை வேறு. காங்கிரஸ் - திமுக இடையே கொள்கையில் கருத்து வேறுபாடு இருக்கும். மதச்சார்பின்மை என்ற நேர்கோட்டில் பயணிக்கிறோம்" என்றார்.

நேரு
நேரு

தொடர்ந்து சத்தியமூர்த்தி பவனில் பேட்டியளித்த கே.எஸ்.அழகிரி, "இந்தியர்களின் அரசாங்கம் என்பது மன்னர்களின் அரசாங்கமா, நிலவுடைமையாளர்களின் அரசாங்கமா அல்லது முதலாளிகளின் அரசாங்கமாக இருக்க வேண்டுமா... என்கிற கேள்விகளுக்கு பதிலாக அது மக்களின் அரசாங்கமாக இருக்க வேண்டும் என மக்களாட்சியை இந்தியாவில் உருவாக்கியவர் நேரு.

மேலும் மகாத்மா காந்தியின் மனசாட்சியாக இருந்தவர். புதிய இந்தியா இன்று அமெரிக்காவிலும், ஆப்பிரிக்காவிலும் வல்லரசாக இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் நேருதான். முதல் ஐந்து ஆண்டுத் திட்டத்தில் விவசாயத்தை வளர்த்தார். பல்வேறு அணைகளைக் கட்டினார். தொழிற்சாலைகள், கல்வியில் முன்னேற்றம், சமூகத்தில் முன்னேற்றம், இட ஒதுக்கீட்டுக்கு ஏற்பாடு செய்தவர்.

மகாத்மா காந்தி
மகாத்மா காந்தி

பொதுவுடைமைச் சமூகத்தைப் படைத்தவர். இந்தியாவிலுள்ள பொதுத்துறை நிறுவனங்கள் அவரால் உருவாக்கப்பட்டவை. ஆனால் இன்று ஒருசிலர் நேரு உருவாக்கியதை விற்றுக்கொண்டிருக்கிறார்கள். பி.எஸ்.என்.எல் என்ற ஒன்றைக் கொலை செய்துவிட்டார்கள். ரயில் நிலையங்கள், ரயில் பெட்டிகள், தண்டவாளங்கள் விற்கப்படுகின்றன.

மின்சார உற்பத்தியைத் தனியாருக்குக் கொடுக்கிறார்கள். இவையெல்லாம் ஒருகாலத்தில் மக்களுக்குப் பயன்படாத, தனிமனிதர்களுக்குப் பயன்படக்கூடிய சொத்தாக மாறிவிடும். ஆர்.எஸ்.எஸ்-ஸின் முழு நேர ஊழியர்களாக இருக்கக்கூடியவர்கள்தான் இந்தியாவில் எதிர்க்கட்சிகள் ஆளுகின்ற மாநிலங்களில் ஆளுநர்களாகப் பணியாற்றுகிறார்கள்.

ஆளுநர் ஆரிஃப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயன்
ஆளுநர் ஆரிஃப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயன்

ஆர்.எஸ்.எஸ்-ஸின் முழு நேர ஊழியர் என்ன செய்வாரோ, அதைத்தான் கேரளா, தமிழக, மேற்கு வங்க ஆளுநர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். இது நம்முடைய ஜனநாயக மரபுகளுக்கே விரோதமானது. வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. சின்னம் இல்லாத கட்சிகள்கூட முதல்வராக வருவோம் என்று சொல்வார்கள். உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஏதோ ஒரு நம்பிக்கையில் சொல்லியிருக்கிறார். சின்னம் இல்லாத கட்சிக்கும் அவர்களுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது" என்றார்.