Published:Updated:

அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம்: ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் தனித்தனியே ஆலோசனை - பரபரக்கும் காட்சிகள்!

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

அதிமுக-வின் பொதுக்குழு, செயற்குழுக்கூட்டம் வரும் 23-ம் தேதி கூடவிருக்கும் நிலையில், ஒற்றைத் தலைமை விவகாரம் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது.

சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. வரும் 23-ம் தேதி பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டங்கள் நடைபெறவிருக்கும் நிலையில், இந்த ஆலோசனை நடைபெற்றது. அந்த ஆலோசனைக் கூட்டத்தில், கட்சிக்கு ஒற்றைத் தலைமை தேவை என எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும் , ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும் முழக்கமிட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம்: ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் தனித்தனியே ஆலோசனை - பரபரக்கும் காட்சிகள்!

மேலும் இது தொடர்பாக நேற்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், `காலத்தின் கட்டாயத்தால் அதிமுக-வுக்கு ஒற்றைத் தலைமை தேவை என்பது குறித்து கூட்டத்தில் விவாதம் செய்யப்பட்டது’ என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதிமுக-வுக்கு ஓ.பன்னீர்செல்வம் தலைமையேற்க வலியுறுத்தி, சென்னையின் முக்கிய இடங்களில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அதிமுக-வில் மீண்டும் ஒற்றைத் தலைமை கோரிக்கை வலுவாக எழுந்திருக்கும் நிலையில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அவருடைய ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்திவருகின்றனர்.

அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம்: ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் தனித்தனியே ஆலோசனை - பரபரக்கும் காட்சிகள்!

எடப்பாடி பழனிசாமி நடத்தும் ஆலோசனையில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும், ஓபிஎஸ் நடத்தும் ஆலோசனையில் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரும் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே எடப்பாடியுடன் ஆலோசனை நடத்திய நிர்வாகிகள் சிலர் ஓ.பிஎஸ்-ஸுடன் ஆலோசனை நடத்த அவர் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். இந்த விவகாரங்கள் காரணமாக அதிமுக-வில் மீண்டும் பரபர காட்சிகள் அரங்கேறத் தொடங்கியுள்ளன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism