Published:Updated:

சசிகலா நீக்கம் செல்லும்; நீதிமன்ற தீர்ப்புக்கு ஓ.பி.எஸ் & இ.பி.எஸ் ரியாக்ஷன் என்ன?!

எடப்பாடி பழனிசாமி - சசிகலா - ஓ.பன்னீர்செல்வம்

பட்டாசு வெடித்துக் கொண்டாடும் அளவுக்கு இப்போது என்ன நடந்துவிட்டது என அங்கேயே சில நிர்வாகிகள் முணுமுணுக்க.... இந்தத் தீர்ப்பு குறித்து அ.தி.மு.க-வுக்குள்ளேயே இருவேறு பார்வைகள் இருப்பது அப்பட்டமாக வெளிப்பட்டது.

சசிகலா நீக்கம் செல்லும்; நீதிமன்ற தீர்ப்புக்கு ஓ.பி.எஸ் & இ.பி.எஸ் ரியாக்ஷன் என்ன?!

பட்டாசு வெடித்துக் கொண்டாடும் அளவுக்கு இப்போது என்ன நடந்துவிட்டது என அங்கேயே சில நிர்வாகிகள் முணுமுணுக்க.... இந்தத் தீர்ப்பு குறித்து அ.தி.மு.க-வுக்குள்ளேயே இருவேறு பார்வைகள் இருப்பது அப்பட்டமாக வெளிப்பட்டது.

Published:Updated:
எடப்பாடி பழனிசாமி - சசிகலா - ஓ.பன்னீர்செல்வம்

`அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்' என சென்னை உரிமையியல் நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது. `சசிகலா மீண்டும் கட்சிக்குள் வரக்கூடாது, அ.தி.மு.க கொடியைப் பயன்படுத்தக்கூடாது, லெட்டர்பேடில் பொதுச்செயலாளர் என்று போட்டுக் கொள்ளக்க்கூடாது' என அவருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி வந்த அ.தி.மு.க-வினர் இந்தத் தீர்ப்பை பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். அதேவேளை, சசிகலா ஆதரவு மனநிலையில் இருந்த ஒருசிலருக்கு இந்தத் தீர்ப்பு கடும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

பட்டாசு வெடித்த தொண்டர்கள்
பட்டாசு வெடித்த தொண்டர்கள்

அ.தி.மு.க பொதுச்செயலாளராகவும், முதலமைச்சராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி உடல்நல குறைவால் மரணமடைந்தார். அதே ஆண்டு டிசம்பர் 29-ம் தேதி நடந்த அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறைச் சென்றார். இந்த நிலையில், அ.தி.மு.க-வுக்குள் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. 2017-ம் ஆண்டு செப்டம்பர் 12-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியிலிருந்தும், கட்சியிலிருந்தும் நீக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அ.தி.மு.க-வின் விதிகள் திருத்தப்பட்டு ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வு செய்யப்பட்டனர். இதுதொடர்பான அறிவிப்பு முறைப்படி இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த முடிவை இந்தியத் தேர்தல் ஆணையமும் ஏற்றுக்கொண்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில், அ.தி.மு.க பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், `அ.தி.மு.க பொதுச்செயலாளராகிய நான்தான் பொதுக்குழுவை கூட்ட முடியும். ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் உருவாக்கிய புதிய பதவி கட்சியின் சட்டத்திட்டத்துக்கு விரோதமானது. எனவே மதுசூதனன், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டிய பொதுக்குழு கூட்டமும், இவர்கள் நிறைவேற்றிய தீர்மானங்களும் செல்லாது என்று அறிவிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். சசிகலாவின் இந்த மனுவை நிராகரிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அதே கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், `சசிகலாவின் மனுவை நிராகரிக்க வேண்டும் என்கிற கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன்மூலம், சசிகலா தன்னைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்தும், கட்சியிலிருந்தும் நீக்கிய அ.தி.மு.க பொதுக்குழு தீர்மானம் செல்லாது என அறிவிக்கக்கோரி தாக்கல் செய்த பிரதான மனு நிலை நிற்கத்தக்கதல்ல. எனவே, சசிகலாவின் பிரதான மனுவும் நிராகரிக்கப்படுகிறது' என்று கூறப்பட்டுள்ளது.

இனிப்பு வழங்கிய எடப்பாடி
இனிப்பு வழங்கிய எடப்பாடி

இந்தத் தீர்ப்பு வெளியான நாளில், அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் முக்கிய நிர்வாகிகள் ஒன்றுகூடி கலந்தாலோசித்தனர். தொடர்ந்து, தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. சென்னை மாவட்ட அ.தி.மு.க செயலாளர்களின் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். அதேவேளை, பட்டாசு வெடித்துக் கொண்டாடும் அளவுக்கு இப்போது என்ன நடந்துவிட்டது என அங்கேயே சில நிர்வாகிகள் முணுமுணுக்க இந்தத் தீர்ப்பு குறித்து அ.தி.மு.க-வுக்குள்ளேயே இருவேறு பார்வைகள் இருப்பதை அப்பட்டமாக வெளிப்படுத்தியது. இதுகுறித்து அ.தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவரிடம் பேசினோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`` சசிகலாவின் கோரிக்கையை 2018-ல் இந்தியத் தேர்தல் ஆணையம், 2019-ல் டெல்லி உயர் நீதிமன்றம், 2020-ல் உச்ச நீதிமன்றம் ஆகியவை நிராகரித்தன. அதே ஆண்டில் அவர்கள் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவும் நிராகரிக்கப்பட்டது. 'கீழமை நீதிமன்றத்தில் சிவில் வழக்கு வேண்டுமானால் தொடுத்துக்கொள்ளலாம்' என உச்ச நீதிமன்றம் சொன்னதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி ஒரு வழக்கைப் போட்டு அதை வைத்தே அறிக்கைகள் விடுவது, கொடியேற்றுவது என அரசியல் செய்து வந்தார். ஆனால் அதற்கும் தற்போது முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது. மேல்முறையீடு, மீண்டும் ஒரு வழக்கு எல்லாம் எந்தளவுக்கு அவருக்குக் கைகொடுக்கும் எனத் தெரியாது. கட்சிக்குள் எடப்பாடி அணியைச் சேர்ந்தவர்கள் இந்தத் தீர்ப்பை கொண்டாடி வருகின்றனர். உட்கட்சித் தேர்தலுக்கு முன்பாக இந்தத் தீர்ப்பு வந்தது தங்களுக்குச் சாதகமாக இருக்கும் என நம்புகின்றனர். அதேபோல, சசிகலா பெயரைப் பயன்படுத்தி ஒருசிலர் செய்யும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது என்றும் நிம்மதியடைகின்றனர்.

இனிப்பு வழங்கிய பன்னீர்
இனிப்பு வழங்கிய பன்னீர்

அதேவேளை, ஓ.பி.எஸ் தரப்பினருக்கு இது கடும் மன உளைச்சலை உண்டாக்கியுள்ளது. சசிகலா பெயரைப் பயன்படுத்தி சமீபமாக செய்த அரசியல் இனி கைகொடுக்காது என்கிற நிலைக்கு வந்துவிட்டனர். எப்படியாவது உட்கட்சி நிர்வாகிகள் நியமனத்தில் சரிக்குப் பாதி மாவட்டச் செயலாளர்களைப் பெற்றுவிட வேண்டும் என காய்நகர்த்தி வந்தார் பன்னீர்செல்வம். ஆனால், அதற்கு தற்போதைக்கு வேலை இல்லை என்றாகிவிட்டது. அதனால்தான், பட்டாசு வெடித்துக் கொண்டாடிய நிர்வாகிகளிடம் ஓ.பி.எஸ் ஆதரவு நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஓ.பி.எஸ்-ஸும் தலைமைக் கழகத்தில் இருந்து முதல் ஆளாகக் காரில் ஏறிச் சென்றுவிட்டார். அதேவேளை, `மேல்முறையீட்டுக்குப் போக வாய்ப்பிருக்கிறது, நடக்குறது நடக்கும்' என ஓ.பி.எஸ் தன் ஆதரவாளர்களிடம் கூறியிருக்கிறார். எடப்பாடி& பன்னீர் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து சசிகலாவின் கோரிக்கையை நிராகரிக்க மனு அளித்திருந்தாலும் தற்போதைய தீர்ப்பு இருவரின் மனங்களிலும் ஒரே விளைவை உண்டாக்கவில்லை. எடப்பாடிக்கு மகிழ்ச்சியாகவும் பன்னீருக்கு சற்று வருத்தமாகவும்தான் இந்தத் தீர்ப்பு அமைந்திருக்கிறது'' என்றார் அவர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism