Published:Updated:

ஓபிஎஸ்-ஐ நீக்கிய இபிஎஸ்... இபிஎஸ்-ஐ நீக்கிய ஓபிஎஸ்... அதிமுக பொதுக்குழு களேபரங்கள்!

ஓபிஎஸ் - இபிஎஸ்

`அ.தி.மு.க-வை பலவீனப்படுத்தும் விதமாக ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க-வுடன் நட்பு பாராட்டினார். அவர் அ.தி.மு.க கொள்கை, கோட்பாடுகளுக்கு விரோதமாகச் செயல்பட்டார்.' - நத்தம் விஸ்வநாதன்

ஓபிஎஸ்-ஐ நீக்கிய இபிஎஸ்... இபிஎஸ்-ஐ நீக்கிய ஓபிஎஸ்... அதிமுக பொதுக்குழு களேபரங்கள்!

`அ.தி.மு.க-வை பலவீனப்படுத்தும் விதமாக ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க-வுடன் நட்பு பாராட்டினார். அவர் அ.தி.மு.க கொள்கை, கோட்பாடுகளுக்கு விரோதமாகச் செயல்பட்டார்.' - நத்தம் விஸ்வநாதன்

Published:Updated:
ஓபிஎஸ் - இபிஎஸ்

இன்று காலை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓ.பி.எஸ் தாக்கல்செய்த மனு மீதான வீசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் நடத்த அனுமதி வழங்கினர். அதையடுத்து இன்று பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் நடைபெற்றது.

ஒற்றைத் தலைமை விவகாரம் கட்சிக்குள் பெரும் புகைச்சலை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். கூட்டத்தில் நிரந்தரப் பொதுச்செயலாளர் பதவி மீண்டும் கொண்டுவரப்படுவது தொடர்பான முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பொதுக்குழு
பொதுக்குழு

பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய நத்தம் விஸ்வநாதன், ``அ.தி.மு.க-வை பலவீனப்படுத்தும் விதமாக ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க-வுடன் நட்பு பாராட்டினார். அவர் அ.தி.மு.க கொள்கை, கோட்பாடுகளுக்கு விரோதமாகச் செயல்பட்டார். அதன் காரணமாக கழக பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்க அ.தி.மு.க பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அவருடன் வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் பி.ஹெச்.மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்'' என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதிமுக பொதுக்குழு
அதிமுக பொதுக்குழு

மறுபக்கம் அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடத்தில் பேசிய ஓ.பி.எஸ், ``அ.தி.மு.க-வின் சட்ட விதிகளின்படி ஒன்றரை கோடி தொண்டர்களால் நான் ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன். என்னைக் கட்சியிலிருந்து நீக்குவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கோ, முனுசாமிக்கோ அதிகாரமில்லை. அ.தி.மு.க சட்ட விதிகளுக்கு புறம்பாக தன்னிச்சையாகச் செயல்பட்ட எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி ஆகியோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குகிறேன். தொண்டர்களுடன் இணைந்து உரிய நீதியை பெறுவோம்'' என்றார்.