Published:Updated:

ஒற்றைத் தலைமை விவகாரம்: ``தப்பு மேல தப்பு செய்கிறார்; ஓ.பி.எஸ் செல்வது தவறான பாதை" - ஜெயக்குமார்

ஜெயக்குமார்

``பொதுக்குழு எடுக்கின்ற முடிவுக்கு ஓ.பி.எஸ் உட்பட எல்லோருமே கட்டுப்பட்டாக வேண்டும். அதுதான் தொண்டர்களின் எண்ணமும் கூட" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

ஒற்றைத் தலைமை விவகாரம்: ``தப்பு மேல தப்பு செய்கிறார்; ஓ.பி.எஸ் செல்வது தவறான பாதை" - ஜெயக்குமார்

``பொதுக்குழு எடுக்கின்ற முடிவுக்கு ஓ.பி.எஸ் உட்பட எல்லோருமே கட்டுப்பட்டாக வேண்டும். அதுதான் தொண்டர்களின் எண்ணமும் கூட" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Published:Updated:
ஜெயக்குமார்

அ.தி.மு.க-வின் பொதுக்குழுக் கூட்டம் நாளை நடைபெறவுள்ள நிலையில், கட்சிக்குள் ஒற்றைத் தலைமை விவகாரத்தில், ஓ.பி.எஸ்-ன் ஆதரவாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இன்று காலையில் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் உட்பட பலரும் இ.பி.எஸ்-க்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலையில், ``அ.தி.மு.க-விலிருந்து ஓ.பி.எஸ்-ஸை ஓரங்கட்டும் எண்ணம் கிடையாது" எனக் கூறியிருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓ.பி.எஸ் தவறான பாதையை நோக்கி சென்றுகொண்டிருப்பதாக கூறியுள்ளார்.

 ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்

சென்னையில் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமாரிடம், பத்திரிகையாளர் ஒருவர், அ.தி.மு.க-வில் அராஜாகப்போக்கு நிலவுவதாகவும், தர்மம் வெல்லும் என்று ஓ.பி.எஸ் பதிவிட்ட ட்வீட் குறித்து கேள்வியெழுப்பினார். அதற்குப் பதிலளித்த ஜெயக்குமார், ``அ.தி.மு.க என்பது ஜனநாயகம் மலர்ந்த ஒரு மாபெரும் இயக்கம். இங்கு எந்த அராஜகப் போக்கும் கிடையாது. ஓ.பி.எஸ்-ஐ பொறுத்தவரையில் தப்பு மேல தப்பு செய்துகொண்டிருக்கிறார். `பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர் சென்று சேர்வதில்லை'. அந்த வகையில் ஒரு தவறான பாதையை நோக்கி தான் ஓ.பி.எஸ் சென்றுகொண்டிருக்கிறார் என்பதை மனக்கஷ்டத்தோடு சொல்லிக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். பொதுக்குழு எடுக்கின்ற முடிவுக்கு அவர் உட்பட எல்லோருமே கட்டுப்பட்டாகவேண்டும். அதுதான் தொண்டர்களின் எண்ணமும் கூட" என பதிலளித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

மேலும் நாளை பொதுக்குழுவில் ஓ.பி.எஸ் கலந்துகொள்வாரா என்ற எழுப்பிய கேள்விக்கு, ``எனக்கு ஜோதிடம் பார்க்கும் பழக்கமில்லை. இந்த கேள்வியை அவரிடம் தான் கேட்கணும். எங்களைப் பொறுத்தவரையில் எல்லோரும் கலந்துகொள்ள வேண்டும் என்பது எல்லோருடைய விருப்பமும். கலந்துகொள்ள வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஒட்டுமொத்த விருப்பமும் கூட. அதனால் கலந்துகொள்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது" என கூறினார்.

ஜெயக்குமாரின் இந்த பத்திரிகையாளர் சந்திப்புக்குப் பின்னர் ஓ.பி.எஸ், அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்திற்கு யாரும் செல்ல வேண்டாம் என உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism