Published:Updated:

``அதிமுக இப்போதும் என்னிடம்தான் உள்ளது; யாருக்கும் உரிமையில்லை" - தேர்தல் ஆணையத்துக்கு ஓபிஎஸ் கடிதம்

ஓபிஎஸ்

``கட்சியின் பொருளாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில், தற்போதும் அ.தி.மு.க என்னிடம் தான் உள்ளது. எங்களைத் தவிர வேறு யாரும் இதற்கு உரிமை கோர அனுமதிக்கக்கூடாது" - ஓ.பி.எஸ்

``அதிமுக இப்போதும் என்னிடம்தான் உள்ளது; யாருக்கும் உரிமையில்லை" - தேர்தல் ஆணையத்துக்கு ஓபிஎஸ் கடிதம்

``கட்சியின் பொருளாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில், தற்போதும் அ.தி.மு.க என்னிடம் தான் உள்ளது. எங்களைத் தவிர வேறு யாரும் இதற்கு உரிமை கோர அனுமதிக்கக்கூடாது" - ஓ.பி.எஸ்

Published:Updated:
ஓபிஎஸ்

உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் பல்வேறுகட்ட விசாரணைகளுக்குப் பிறகு நேற்றைய தினம் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், கழக பொதுச் செயலாளர் பொறுப்புக்கு இனி யாரும் தேர்ந்தெடுக்கப்படவோ அல்லது நியமிக்கப்படவோ மாட்டார்கள் என்ற பழைய விதி ரத்து செய்யப்பட்டு, கழகத்தின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். மேலும் முக்கியமாக, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பதவிகளிலிருந்தும் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அதுமட்டும் இன்றி ஓ.பி.எஸ்-ஸின் ஆதரவாளர்களான, வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், பி.ஹெச்.மனோஜ் பாண்டியன் ஆகியோரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து ஓ.பி.எஸ் இன்று காலையில், `தனக்கு தெரியாமல் கட்சியின் வரவு செலவு கணக்குகளை யாரிடமும் ஒப்படைக்கக் கூடாது' என்று வங்கிகளுக்குக் கடிதம் எழுதியிருந்த நிலையில், தற்போது தேர்தல் ஆணையத்துக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

அந்த கடிதத்தில், ``நடைபெற்ற கட்சியின் பொதுக்குழு என்பது, விதிமுறைகள் மீறி செயல்பட்டுள்ளது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களைத் தவிர வேறு யாரையும் அ.தி.மு.க-வை உரிமை கோர அனுமதிக்கக் கூடாது. கட்சியின் பொருளாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில், தற்போதும் அ.தி.மு.க என்னிடம் தான் உள்ளது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நான் உட்பட என்னைச் சார்ந்தவர்களை நீக்கியது செல்லாது. மேலும், எங்களைத் தவிர வேறு யாரும் இதற்கு உரிமை கோர அனுமதிக்கக்கூடாது. வேறு யாராவது அப்படி தலையிட்டால், எங்கள் தரப்பு விளக்கம் கேட்காமல் எந்த முடிவும் எடுக்கக்கூடாது" என ஓ.பி.எஸ் குறிப்பிட்டுள்ளார்.