Published:Updated:

``சுயநலத்தின் மொத்த உருவம் ஓ.பன்னீர்செல்வம்” - சீறும் அதிமுக முன்னாள் எம்.பி ப.குமார்

ப.குமார்

``நிர்வாகிகளும் தொண்டர்களும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவராக எடப்பாடியார் உருவெடுத்துவிட்டார். அவர் தலைமையேற்பதை இப்போதைக்குக் காலம் தாழ்த்தலாமே தவிர, இவர்களால் தடுக்க முடியாது." - ப.குமார்

``சுயநலத்தின் மொத்த உருவம் ஓ.பன்னீர்செல்வம்” - சீறும் அதிமுக முன்னாள் எம்.பி ப.குமார்

``நிர்வாகிகளும் தொண்டர்களும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவராக எடப்பாடியார் உருவெடுத்துவிட்டார். அவர் தலைமையேற்பதை இப்போதைக்குக் காலம் தாழ்த்தலாமே தவிர, இவர்களால் தடுக்க முடியாது." - ப.குமார்

Published:Updated:
ப.குமார்

அதிமுக பொதுக்குழுக் களேபரங்களுக்குப் பிறகு சொந்த ஊர் திரும்பிய அதிமுக நிர்வாகிகள் கூட்டங்கள் நடத்தியும், பத்திரிகையாளர்களைச் சந்தித்தும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான தங்களுடைய கருத்துகளைத் தெரித்துவருகின்றனர்.

அந்த வகையில், அதிமுக முன்னாள் எம்.பி-யும், திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான ப.குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``அம்மாவின் மறைவுக்குப் பிறகு ஆட்சியைத் தக்கவைக்க, இயக்கத்தை வழிநடத்த அன்றைய சூழலில் கட்சி இரட்டைத் தலைமையை நோக்கிப் போனது. அண்ணன் எடப்பாடி பழனிசாமி நான்கரை ஆண்டுக்காலம் தமிழ்நாடு அரசை செம்மையாக வழிநடத்தினார்.

இயக்கத்தையும், இயக்கத் தோழர்களையும் ஒரு நம்பிக்கையான தலைவராக வழிநடத்தினார். ஆக, கடந்த நான்கரை ஆண்டுகளில் இரட்டைத் தலைமையில் வலிமையான தலைவர் யார் என்பதை எடப்பாடி பழனிசாமி நிரூபித்திருக்கிறார். 2,190 பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிதான் ஒற்றைத் தலைமையாக வர வேண்டுமென விரும்புகின்றனர். நிர்வாகிகளும் தொண்டர்களும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவராக எடப்பாடி உருவெடுத்துவிட்டார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அவர் தலைமையேற்பதை இப்போதைக்குக் காலம் தாழ்த்தலாமே தவிர, இவர்களால் தடுக்க முடியாது. அதேவேளையில் ஓ.பி.எஸ்., கட்சிக்காரர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் தன்னுடைய செல்வாக்கை முற்றிலுமாக இழந்து நிற்கிறார். அதனால்தான் குறுக்குவழியில் காவல் நிலையத்துக்கும், நீதிமன்றத்துக்கும் சென்று எப்படியாவது பொதுக்குழுவை நிறுத்திட வேண்டுமென முயன்றார். இந்தக் கட்சிமீதும் தொண்டர்கள்மீதும் அக்கறையில்லாத ஓ.பி.எஸ்., அ.தி.மு.க எனும் இந்த மாபெரும் இயக்கத்தை எப்படியாவது அழித்துவிட வேண்டுமென்று நினைக்கிறார். சுயநலத்தின் மொத்த உருவமாக ஓ.பி.எஸ் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்” எனக் கடுமையாக விளாசினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தொடர்ந்து பேசியவர், ``ஓ.பி.எஸ் அவர்கள் சார்ந்த சமுதாயத்தைச் சேர்ந்தவன்தான் நானும். முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த 19 மாவட்டச் செயலாளர்கள் அ.தி.மு.க-வில் இருக்கின்றனர். அவர்களில் இரண்டு பேரைத் தவிர மற்ற 17 பேரும் இயக்கம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக எடப்பாடி பக்கம் இருக்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமியுடன் ப.குமார்
எடப்பாடி பழனிசாமியுடன் ப.குமார்

கடந்தகாலங்களில் ஓ.பி.எஸ்., தான் சார்ந்த சமுதாயத்தின் வளர்ச்சிக்காக என்ன பாடுபட்டிருக்கிறார்... அம்மாவின் மறைவுக்குப் பிறகு முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த சசிகலா முதலமைச்சராகத் தன்னை முன்னிலைப்படுத்தும்போது, அதை எதிர்த்து எதற்காக ஓ.பி.எஸ் தர்மயுத்தம் செய்தார்... தன்னுடைய சுயநலத்துக்காக ஓ.பி.எஸ் சாதியை மட்டுமல்ல, எதை வேண்டுமானாலும் ஆயுதமாக எடுத்துக்கொள்வார். அதையெல்லாம் தொண்டர்கள் நன்றாகப் புரிந்துகொண்டிருக்கின்றனர்.

 ஓபிஎஸ்
ஓபிஎஸ்

அம்மா மறைவுக்குப் பிறகு ஆறு ஆண்டுக்காலத்தில் சிலபேர் புதிதாகக் கட்சி ஆரம்பித்தார்கள். சிலபேர் கட்சி ஆரம்பிக்கிறேன் என்றார்கள். சிலர் மக்கள் மன்றத்தை அணுகிப் பார்த்தார்கள். ஆனால், எடப்பாடி பழனிசாமியைத் தவிர எல்லோருமே தோல்வியைத்தான் சந்தித்தார்கள். சசிகலாவும் தினகரனும் தொண்டர்களால் ஒதுக்கப்பட்டவர்கள். தொண்டர்கள் மத்தியில் அவர்களுக்கு எந்தச் செல்வாக்கும் கிடையாது. அதேபோல, `நான் கருணாநிதியின் பக்தன்’ என்று ஓ.பி.எஸ் சட்டமன்றத்தில் பேசியதும், ஓ.பி.எஸ்-ஸின் மகன் ‘இந்த ஆட்சி சிறப்பாக நடைபெறுகிறது’ என தலைமைச் செயலகத்துக்குச் சென்று முதலமைச்சர் ஸ்டாலினைச் சந்தித்துப் பேசியதும் அ.தி.மு.க-வினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு வெளிப்படைத்தன்மை இல்லாத, அடுத்தவர் சொல்பேச்சு கேட்கின்ற ஒருவரான ஓ.பி.எஸ் எப்படி ஒரு தலைவராக வர முடியும்... விரைவில் எடப்பாடி தலைமையில் அ.தி.மு.க மீண்டெழுந்து, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றிபெறும். அதேபோல அடுத்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையைப் பெற்று ஆட்சி அமைக்கும். பொறுத்திருந்து பாருங்கள்” என்றார்.