Published:Updated:

``கட்சியை காட்டி கொடுக்கும் வேலையை ஓ.பி.எஸ் செய்து கொண்டிருக்கிறார்” - ஜெயக்குமார் காட்டம்

ஜெயக்குமார்

``காவல் துறைக்கு முதலாளியாக இருந்து கொண்டு, முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு செய்தால் கட்சியை அழித்துவிடலாம் என்று பகல் கனவு காண்கிறார் ஸ்டாலின்" - ஜெயக்குமார்

``கட்சியை காட்டி கொடுக்கும் வேலையை ஓ.பி.எஸ் செய்து கொண்டிருக்கிறார்” - ஜெயக்குமார் காட்டம்

``காவல் துறைக்கு முதலாளியாக இருந்து கொண்டு, முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு செய்தால் கட்சியை அழித்துவிடலாம் என்று பகல் கனவு காண்கிறார் ஸ்டாலின்" - ஜெயக்குமார்

Published:Updated:
ஜெயக்குமார்

அ.தி.மு.க முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி மீது, சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப் பரபரப்பாகக் கிளம்பிக்கொண்டிருந்தார், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார். மழை ஓய அவர் காத்திருந்த பொழுதில், அவரது இல்லத்தில் சந்தித்துச் சில கேள்விகளை முன்வைத்தோம்...

``ஓ.பி.எஸ் மீது அப்படி என்ன கோபம்... எப்போது எல்லோரும் ஒன்று சேர்வீர்கள்?”

``ஒன்றிணைவதற்கு அவர்கள் பெரிய சக்தி கிடையாது. தனி மரமாக இருப்பவர்கள். தனிமரத்தை எப்படி சேர்க்க முடியும். தனிமரம் தோப்பாகாது. அதேநேரத்தில் கட்சியை காட்டி கொடுக்கும் வேலையை ஓ.பி.எஸ் செய்து கொண்டிருக்கிறார். அதெல்லாம் அடையாளம் காண்பதற்கு ஒரு நேரம் வந்திருக்கிறது. இல்லையென்றால் அவர்கள் சுயரூபம் தெரிந்திருக்காது”

ஒபிஎஸ்-சையதுகான்
ஒபிஎஸ்-சையதுகான்

``இத்தனை ஆண்டுகளில் இப்போதுதான் அவர் சுயரூபம் தெரிகிறதா?”

“ஒரு சோதனை வரும் போதுதானே தெரியும். மகன் தி.மு.க அரசு அற்பணிப்போடு செய்கிறது என்று பாராட்டுகிறார். அப்பா கருணாநிதி ரசிகன் என்று சட்டமன்றத்திலேயே சொல்கிறார்”

``நல்ல விஷயம் நடக்கும் போது பாரட்டுவது அல்லது ஒருவரது ரசிகன் என்று சொல்வதில் என்ன தவறு இருக்கிறது?”

``இது போல் அம்மா இருக்கும் போது சொல்லி இருப்பாரா. கருணாநிதியை சிறந்த வசனகர்த்தானு சொல்லிட்டு போங்க. சொற்கள் இருக்கிறதல்லவா. தி.மு.க-வினரது அணுசரானை வேண்டும் என்பதற்காக அவர்களிடம் ஐஸ் வைக்கும் சொற்றொடர்களை கட்சி எப்படி ஏற்று கொள்ளும். இதையெல்லாம் தாண்டி கட்சிக்காக உழைக்க வேண்டுமில்லையா. தானும், தான் மகன் மட்டும் வெற்றி பெற்றால் போதுமா? இது போன்று கட்சிக்கு எதிரான செயல்பாடுகள் எல்லாம் அடையாளம் கண்டு தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்”

முதல்வர் ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி
முதல்வர் ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி

``அடிக்கடி ஸ்டாலின், ‘சர்வாதிகாரியாக மாறுவேன்...’ என்கிறாரே?”

``எதிர்க்கட்சியிடம் தானே அப்படி இருக்கிறார். சொந்த கட்சியின் அமைச்சர்கள், மக்களிடம் நடந்து கொண்டிருக்கும் சமீபத்திய செயல்களின் மீது அப்படி ஏதாவது நடவடிக்கைகள் எடுத்தால் ஒப்பு கொள்ளலாம். ஆனால், காவல்துறைக்கு முதலாளியாக இருந்து கொண்டு, முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு செய்தால் கட்சியை அழித்துவிடலாம் என்று பகல் கனவு காண்கிறார். அது பலிக்காது”

வேலுமணி, எடப்பாடி பழனிசாமி,  தங்கமணி, விஜயபாஸ்கர்
வேலுமணி, எடப்பாடி பழனிசாமி, தங்கமணி, விஜயபாஸ்கர்

``அந்த ரெய்டும் பெயருக்குதானே இருக்கிறது. அதற்கு பின் எந்த நடவடிக்கையும் இல்லையே. அப்படியே ரெய்டு நடந்தாலும் தான் குற்றமற்றவர் என்று நிருப்பிக்கலாமே?”

“நீங்க சொல்வது போல் பெயருக்குதான் இந்த ரெய்டுகள் எல்லாம். திமுக ஆட்சியின் மக்கள் விரோத செயல்கள், திட்டங்களை முன்னெடுக்கும் போதெல்லாம் ரெய்டு என்கிற பெயரில் அதிலிருந்து திசை திருப்பும் வேலைகளை தான் ஒவ்வொருமுறையும் முன்னெடுக்கிறார்கள். எங்கள் கட்சியினர் குற்றமற்றவர்கள் என்பதை நிச்சயம் நிரூபிப்பார்கள். ஆரம்ப காலத்திலிருந்து பல அடக்கு முறைகள், ஆளுங்கட்சியின் எதேச்சதிகாரத்தை சந்தித்து அதன் மூலம் மெருகேற்றிய இயக்கம் அ.தி.மு.க. அதனால் இந்த ரெய்டுக்கோ, அச்சுறுத்தலுக்கோ, அடக்கு முறைக்கோ நாங்கள் பயப்பட மாட்டோம். சர்வாதிகாரம் படைத்தவராக இருந்த அவங்க அப்பாக்கே பயப்படாத இயக்கம். ஜுஜூப்பியாக இருக்க இவருக்கா நாங்க பயப்பட போறோம்”

சேகர்பாபு
சேகர்பாபு

``முன்னாள் அ.தி.மு.க தலைவர்கள், அமைச்சர்கள்தான் தி.மு.க.வில் இன்று செல்வாக்கு செலுத்துகிறார்கள். அவர்களை இழந்துவிட்டோம் என்று வருத்தப்பட்டதுண்டா?”

“தி.மு.க-வை பொறுத்தவரை சுய சிந்தனை இல்லாமல் அ.தி.மு.க-வின் திட்டங்களுக்கு லேபில் ஒட்டுவது போல், இங்கிருந்து சென்றவர்களை வைத்து ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறார்கள். அங்கு போனவர்களை அடையாளம் காட்டியது யார். போகிறவர்கள் பற்றி எங்களுக்குக் கவலை கிடையாது. புரட்சித் தலைவர், அம்மாவின் உண்மையான பக்தன், ரத்தத்தின் ரத்தங்கள் யாருமே கட்சியை விட்டுப் போகவில்லை. இன்று அங்கு அமைச்சர்களாக இருப்பவர்களுக்கு ஒன்றே ஒன்று சொல்லிக் கொள்ளலாம், ‘எங்கிருந்தாலும் வாழ்க’.”

இந்த கேள்வி பதில்களோடு...

“ஆட்சியிலிருந்தபோது செல்வாக்கோடு வலம் வந்தீர்கள். இடையில் கொஞ்ச நாள் அமைதியானீர்கள். நீங்கள் ஓரம் கட்டப்பட்டதாகப் பேச்சுக்கள் அடிபட்டது. இப்போது மெதுவாகத் தலையைக் காட்டுகிறீர்கள் ஏன் இந்த கண்ணாம்பூச்சி ஆட்டம்?”

“அ.தி.மு.க திராவிட கட்சியே இல்லை’ என்கிற காட்டமான விமர்சனங்களை தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் முன் வைக்கிறார்களே?”

“ஆர்.எஸ்.எஸ்.ஊர்வலத்தில் திமுகவின் நிலைபாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“சமீபத்தில், ‘சந்திரபாபு நாயுடு ஆந்திராவில் ஆட்சியை பிடித்த நிலை தமிழ்நாட்டிலும் வரலாம்’ என்று நீங்கள் சொன்னது எதன் அடிப்படையில்?”

“ஒ.பி.எஸ் தனிகட்சி ஆரம்பிக்கப்போவதாக தகவல் வருகிறதே?”

போன்ற கேள்விகளுக்கு, இந்த வார (05.10.2022) ஜூனியர் விகடன் இதழில் காரசாரமாக பதில் அளித்திருக்கிறார் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் டி.செயக்குமார்.