Published:Updated:

`ஓ.பி.எஸ் ஜல்லிக்கட்டு வில்லன்’ - தேனியில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு!

போஸ்டர்
போஸ்டர்

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை விமர்சித்து அவரது சொந்த மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தேனி மாவட்டம், புதிய பேருந்து நிலையத்தையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் காளை படம் பொறித்த போஸ்டர்களைப் பார்க்க முடிந்தது. `காளை மாடு வளர்ப்புச் சட்டம் - 2019 கொண்டுவந்த ஓ.பி.எஸ் ஜல்லிக்கட்டு நாயகரல்ல, ஜல்லிக்கட்டு வில்லன்’ என்ற வாசகம் இடம்பெற்றிருந்த அந்த போஸ்டர்கள், நாட்டுமாடு நலச்சங்கம் சார்பில் ஒட்டப்பட்டிருந்தது.

போஸ்டர்
போஸ்டர்
தேனி: 58 கிராம பாசன கால்வாயில் தண்ணீர் திறப்பு... மகிழ்ச்சியில் உசிலம்பட்டி மக்கள்!

போஸ்டரில் இருந்த தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு பேசினோம். கலைவாணன் என்பவர் நம்மிடையே பேசினார். ``நாட்டுமாடுகளை அழிக்கும் வேலையைத்தான் தமிழக அரசு செய்துவருகிறது. `தமிழ்நாடு கால்நடை இனப்பெருக்கச் சட்டம் – 2019’ என்பதுதான் அந்தச் சட்டத்தின் பெயர். அந்தச் சட்டத்தை நிறைவேற்ற அனைத்து ஏற்பாடுகளும் நடந்துவருகின்றன. அந்தச் சட்டத்தில் மாடுகளைக் கருவுறவைக்கும் சினை ஊசிகளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. காளை மாடுகள் வளர்க்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

போஸ்டர்
போஸ்டர்
ஜல்லிக்கட்டு மாடு வளர்க்க வாழ்க்கையையே அர்ப்பணித்த மதுரை செல்வராணி!

அந்தச் சட்டம் இயற்றப்பட்டால், ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தக்கூட தமிழகத்தில் காளைகள் இருக்காது. இப்படி ஒரு சூழல் இருக்கும்போது, தமிழகத்தின் துணை முதல்வராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்தை `ஜல்லிக்கட்டு நாயகர்’ என்கிறார்கள். சட்டம் தரும் விளைவுகளை அறிந்த நாங்கள், அவரை `ஜல்லிக்கட்டு வில்லன்’ என்கிறோம். இதில் என்ன தவறு.!” என்றார் அவர்.

போஸ்டர்
போஸ்டர்

போஸ்டர் ஒட்டப்பட்டது தொடர்பாக, தேனி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நாட்டுமாடு நலச்சங்கத்தைச் சேர்ந்த கலைவாணன் என்பவரைக் கைதுசெய்த காவல்துறையினர், அவரை ஜாமீனில் விடுவித்தனர். தமிழ்நாடு கால்நடை இனப்பெருக்கச் சட்டம் – 2019 தொடர்பாக, தமிழகம் முழுவதிலுமுள்ள ஜல்லிக்கட்டுக் காளை வளர்ப்போர், நாட்டுமாடு ஆர்வலர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. அதையடுத்தே, தேனியில் ஓ.பி.எஸ்-ஸுக்கு எதிராக போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு