Published:Updated:

``நாங்கள் அரசியலிலிருந்து விலகத் தயார்; ஆனால்...” - எடப்பாடிக்கு சவால்விட்ட ஓ.பி.எஸ்

ஓபிஎஸ் - அதிமுக

``நேற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தை எனக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டமாக நான் கருதவில்லை'' - ஓபிஎஸ்

``நாங்கள் அரசியலிலிருந்து விலகத் தயார்; ஆனால்...” - எடப்பாடிக்கு சவால்விட்ட ஓ.பி.எஸ்

``நேற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தை எனக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டமாக நான் கருதவில்லை'' - ஓபிஎஸ்

Published:Updated:
ஓபிஎஸ் - அதிமுக

தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க-வில் உட்கட்சிப்பூசல் நாளுக்கு நாள் பூதாகரமாகிவருகிறது. இந்த நிலையில், நேற்று சட்டமன்றக் கூட்டத்தொடரில் அ.தி.மு.க-வினரைப் பேச அனுமதிக்காததைக் கண்டித்து, அ.தி.மு.க சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அப்போது பேசிய தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ``அ.தி.மு.க-வை எதிர்க்கும் தெம்பும் திராணியும் இல்லாத தி.மு.க தலைவர் ஸ்டாலின், ஓபிஎஸ்-ஸைப் பயன்படுத்தி அ.தி.மு.க-வை வீழ்த்த நினைக்கிறார்'' எனக் கடுமையாக விமர்சித்திருந்தார்.

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது இது தொடர்பாக அவர்,``நேற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தை எனக்கு எதிரான போராட்டமாக நான் கருதவில்லை. எடப்பாடி பழனிசாமி, நான் முதலமைச்சரைச் சந்தித்ததை நிரூபித்தால், நான் என்னுடன் இருக்கிற சட்டமன்ற உறுப்பினர்கள் அரசியலிலிருந்து விலகத் தயார், நிருபிக்காவிட்டால் அவர்கள் விலகத் தயாரா?” எனக் கேள்வி எழுப்பினார்.