Published:Updated:

``அரசு அதிகாரிகளின் உயிருக்கே உத்தரவாதம் இல்லை; இதுதான் திராவிட மாடலா?” - ஓ.பன்னீர்செல்வம் காட்டம்

ஓ.பன்னீர்செல்வம்

தமிழ்நாட்டில் அரசு அதிகாரிகளின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத அவலநிலையை திமுக உருவாக்கியுள்ளதாக ஓபிஎஸ் குற்றம்சாட்டியிருக்கிறார்.

``அரசு அதிகாரிகளின் உயிருக்கே உத்தரவாதம் இல்லை; இதுதான் திராவிட மாடலா?” - ஓ.பன்னீர்செல்வம் காட்டம்

தமிழ்நாட்டில் அரசு அதிகாரிகளின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத அவலநிலையை திமுக உருவாக்கியுள்ளதாக ஓபிஎஸ் குற்றம்சாட்டியிருக்கிறார்.

Published:Updated:
ஓ.பன்னீர்செல்வம்

தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை மிக மோசமாக இருப்பதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டிவருகின்றனர். இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``சூதாட்டம், சாராயம், போதை, கடத்தல் ஆகியவற்றின் புகலிடமாக தமிழ்நாடு விளங்கிக்கொண்டிருக்கிறது. முதலமைச்சரின் திராவிட ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்று கூறுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் நாள்தோறும் வெட்டு, குத்து, கொலை, தற்கொலை, பாலியல் துன்புறுத்தல் போன்ற சம்பவங்கள்தான் அதிகம் நடைபெற்றுவருகின்றன, ஒருவேளை இதுதான் திராவிட மாடல்போலும்.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேனி சமூக நலத்துறை அதிகாரி ராஜராஜேஸ்வரியை உதவியாளர் ஒருவர் அரிவாளால் வெட்டினார். ரத்த வெள்ளத்தில் இருந்த ராஜேஸ்வரியை சக ஊழியர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். இதற்குக் காரணமான இளநிலை உதவியாளரை காவல் துறையிடம் ஒப்படைத்ததாகவும் ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. பணியிட மாற்றம் செய்ததால் அந்த ஊழியர் ஆத்திரமடைந்தார் எனக் கூறப்படுகிறது. இதிலிருந்து, தி.மு.க ஆட்சியில் ஒழுக்கமின்மை மேலோங்கி நிற்கிறது என்பது தெள்ளத் தெளிவாகிறது.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

ஆட்சி அதிகாரத்தில் திமுக-வினரின் தலையீடு பரவலாக இருப்பதும், அவர்களோடு சில அரசு ஊழியர்கள் கைகோத்து இருப்பதும்தான் இது போன்ற செயலுக்குக் காரணம் என அரசு ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். முதலமைச்சர் மற்ற எல்லா பிரச்னைகளையும் ஒதுக்கிவிட்டு, மாநிலத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கும் சட்டம் - ஒழுங்கை பராமரிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்'' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism