Published:Updated:

`அதிமுக சட்டத்துக்குப் புறம்பான கூட்டம்; முடிவுகள் எடுத்தாலும் கட்டுப்படுத்தாது’ - ஓ.பி.எஸ் காட்டம்

பன்னீர் - எடப்பாடி

``கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் கழகத் தொண்டர்களையும் நிர்வாகிகளையும் எந்தவிதத்திலும் கட்டுப்படுத்தாது” என்று ஓ.பன்னீர்செல்வம் மறுப்பு தெரிவித்திருப்பது அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் மீண்டும் புயலை கிளப்பியிருக்கிறது.

`அதிமுக சட்டத்துக்குப் புறம்பான கூட்டம்; முடிவுகள் எடுத்தாலும் கட்டுப்படுத்தாது’ - ஓ.பி.எஸ் காட்டம்

``கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் கழகத் தொண்டர்களையும் நிர்வாகிகளையும் எந்தவிதத்திலும் கட்டுப்படுத்தாது” என்று ஓ.பன்னீர்செல்வம் மறுப்பு தெரிவித்திருப்பது அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் மீண்டும் புயலை கிளப்பியிருக்கிறது.

Published:Updated:
பன்னீர் - எடப்பாடி

`அதிமுக-வில் ஒற்றைத் தலைமை சர்ச்சை கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக நீடித்துவருகிறது. `அடுத்த பொதுக்குழுக் கூட்டம் ஜூலை மாதம் 11-ம் தேதி நடைபெறும்’ என எடப்பாடி பழனிசாமி தரப்பினரும், `பொதுக்குழு கூட்டப்பட்டது சட்டவிரோதமானது’ என்று பன்னீர்செல்வம் தரப்பினரும் தொடர்ந்து குற்றம்சாட்டிவருகின்றனர். இந்த நிலையில் அதிமுக தலைமைக் கழக அறிவிப்பாக நேற்று ஓர் அறிக்கை வெளியானது.

`அதிமுக சட்டத்துக்குப் புறம்பான கூட்டம்; முடிவுகள் எடுத்தாலும் கட்டுப்படுத்தாது’ - ஓ.பி.எஸ் காட்டம்

அந்த அறிக்கையில், ``அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைக் கழக நிர்வாகிகள் கேட்டுக்கொண்டதற்காக 27-6-2022 திங்கள்கிழமை காலை 10 மணிக்கு தலைமைக் கழக, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகை கூட்டரங்கில் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஓ.பன்னீர்செல்வம் சொந்த ஊரான தேனிக்குச் சென்றிருக்கும் நிலையில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், அவைத்தலைவர் என யாருடைய கையெழுத்தும் இல்லாமல் தலைமைக் கழக அறிவிப்பு என்று இந்த அறிக்கை வெளியாகியிருப்பது அதிமுக அரசியல் களத்தில் சூட்டைக் கிளப்பியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டு ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ``அதிமுக சட்டதிட்ட விதிகளின்படி கழகத்தின் ஒட்டுமொத்த நிர்வாகப் பொறுப்புகள் கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரிடமே உள்ளன. அதன்படி இருவரின் ஒப்புதல் பெற்றுத்தான் எந்தவிதமான கூட்டமும் கூட்டப்பட வேண்டும். ஆனால் இருவருடைய ஒப்புதலும் இன்றி, கையொப்பம் இல்லாமல் `கழகத் தலைமை நிலைய செயலாளர், தலைமை கழகம்’ என்ற பெயரில் கழக சட்டதிட்ட விதிக்கு எதிராக ஓர் அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த அறிவிப்பில் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க 27-ம் தேதி காலை 10 மணிக்கு தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறவுள்ளதாகவும், அந்தக் கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

பன்னீர்செல்வம்
பன்னீர்செல்வம்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நான் எந்தவிதமான ஒப்புதலையும் மேற்படி கூட்டத்துக்கு அளிக்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில் விதியை மீறி கூறப்பட்டிருக்கும் மேற்படி கூட்டம் கழக சட்டம் மற்றும் விதிகளுக்குப் புறம்பானது. கழக சட்டத்துக்கு புறம்பாகப் கூட்டப்பட்டிருக்கும் மேற்படிக் கூட்டத்தில் ஏதேனும் முடிவு எடுக்கப்பட்டால் அது கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் நிர்வாகத்தில் இருக்கும் கழகத்தையும் தொண்டர்களையும் எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது என்பதைக் கழகத் தொண்டர்கள் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் கூறப்பட்டுள்ளது.

`அதிமுக சட்டத்துக்குப் புறம்பான கூட்டம்; முடிவுகள் எடுத்தாலும் கட்டுப்படுத்தாது’ - ஓ.பி.எஸ் காட்டம்

ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இல்லாத நிலையில் சென்னையில் நிர்வாகிகள் கூட்டம் கூட்டப்பட்டது சர்ச்சையானது. `இந்தக் கூட்டம் செல்லத்தக்கது அல்ல. அதில் எடுக்கப்படும் முடிவு கழகத் தொண்டர்களையும் நிர்வாகிகளையும் எந்தவிதத்திலும் கட்டுப்படுத்தாது’ என்றும் ஓ.பன்னீர்செல்வம் மறுப்பு தெரிவித்திருப்பது அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் மீண்டும் பெரும் புயலைக் கிளப்பியிருக்கிறது.