Published:Updated:

``ஓபிஎஸ் தரப்பு செயல்பாடு எம்ஜிஆர்-ன் நோக்கத்துக்கு எதிராக இருக்கிறது!" - உச்ச நீதிமன்றத்தில் இபிஎஸ்

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

``ஓ.பி.எஸ் தரப்பினருடைய நடவடிக்கைகளானது, அ.தி.மு.க எதற்காகத் தொடங்கப்பட்டதோ அந்த அடிப்படை நோக்கத்துக்கு எதிராக உள்ளது"- உச்ச நீதிமன்ற மனுவில் இ.பி.எஸ் விளக்கம்

``ஓபிஎஸ் தரப்பு செயல்பாடு எம்ஜிஆர்-ன் நோக்கத்துக்கு எதிராக இருக்கிறது!" - உச்ச நீதிமன்றத்தில் இபிஎஸ்

``ஓ.பி.எஸ் தரப்பினருடைய நடவடிக்கைகளானது, அ.தி.மு.க எதற்காகத் தொடங்கப்பட்டதோ அந்த அடிப்படை நோக்கத்துக்கு எதிராக உள்ளது"- உச்ச நீதிமன்ற மனுவில் இ.பி.எஸ் விளக்கம்

Published:Updated:
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

ஒற்றைத் தலைமை விவகாரம் காரணமாக அ.தி.மு.க இரண்டுபட்டு கிடக்கிறது. ஓ.பி.எஸ், இ.பி.ஸ் இருவருக்கிடையேயான தலைமை மோதல் உச்சகட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அண்மையில் வானகரத்தில் கூட்டப்பட்ட கட்சியின் பொதுக்குழு களேபரங்களுக்கு பஞ்சமில்லாமல் சலசலப்புடன் முடிந்தது. கூட்டத்திலிருந்து பாதியில் வெளியேறி ஓ.பி.எஸ் தரப்பு, இந்த விவகாரம் தொடர்பாக சட்ட நடவடிக்கைகளை முடுக்கி விட்டது. பதிலுக்கு எடப்பாடி தரப்பும் தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் ஓ.பி.எஸ் தரப்பினரின் செயல்பாடுகள் கட்சி உருவாக்கப்பட்டதன் அடிப்படை நோக்கத்துக்கு எதிராக இருப்பதாக இ.பி.எஸ் தரப்பு குற்றம்சாட்டியுள்ளது.

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்
OPS

உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமியின் தரப்பில் 378 பக்கங்கள் கொண்ட மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அந்த மனுவில், ``பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பெரும்பாலானோரது ஆதரவு எங்கள் பக்கம் இருக்கிறது. அதனடிப்படையில்தான் கட்சியில் ஒற்றைத் தலைமை குறித்த விவாதம் நடத்தப்பட்டது. இதில் ஓ.பி.எஸ் தரப்பினருடைய நடவடிக்கைகள், அ.தி.மு.க எதற்காகத் தொடங்கப்பட்டதோ அந்த அடிப்படை நோக்கத்துக்கு எதிராக இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் அவர்களின் செயல்பாடுகள், கட்சியின் நிறுவனரான எம்.ஜி.ஆர்-ன் நோக்கத்துக்கும் எதிராக இருக்கின்றன" என ஓ.பி.எஸ்-மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

மேலும் அந்த மனுவில், ``கட்சியின் தலைமை குறித்து விவாதிக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கூறியிருப்பது, ஓ.பி.எஸ் தரப்பினருக்குத் தனிப்பட்ட வீட்டோ அதிகாரத்தை வழங்குவது போல இருக்கிறது. இது கட்சியின் அடிப்படை விதிகளை மீறி ஒரு தனி நபருக்கு அதிக அதிகாரங்களை வழங்குவது போல இருக்கிறது. அ.தி.மு.க-வை பொறுத்தவரை பொதுக்குழு மற்றும் செயற்குழுவுக்குத்தான் உட்சபட்ச அதிகாரம் உள்ளது. அதனைச் செயல்படுத்தக்கூடிய இடத்தில்தான் முக்கியமான நபர்கள் இருக்கிறார்கள். எனவே சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.