Published:Updated:

`நியாயவிலைக் கடைகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுத்து நிறுத்த வேண்டும்' - ஓபிஎஸ் வலியுறுத்தல்!

ஓ.பி.எஸ்

நியாயவிலைக் கடைகளிலும், சேமிப்புக் கிடங்குகளிலும் நடைபெறும் முறைகேடுகளை தடுத்து நிறுத்துமாறு தமிழக அரசை ஓ.பி.எஸ் வலியுறுத்தியுள்ளார்.

`நியாயவிலைக் கடைகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுத்து நிறுத்த வேண்டும்' - ஓபிஎஸ் வலியுறுத்தல்!

நியாயவிலைக் கடைகளிலும், சேமிப்புக் கிடங்குகளிலும் நடைபெறும் முறைகேடுகளை தடுத்து நிறுத்துமாறு தமிழக அரசை ஓ.பி.எஸ் வலியுறுத்தியுள்ளார்.

Published:Updated:
ஓ.பி.எஸ்

நியாய விலைக் கடைகளிலும், சேமிப்புக் கிடங்குகளிலும் நடைபெறும் முறைகேடுகளை தடுத்து நிறுத்துமாறு தமிழக அரசை ஓ.பி.எஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், `தமிழ்நாட்டில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் நியாய விலைக் கடைகளில் உணவுப் பொருள்களை வாங்கியவுடன் அவர்களுடைய கைப்பேசிகளுக்கு என்னென்ன பொருள்கள் வாங்கப்பட்டன என்ற தகவல் குறுஞ்செய்தியாக அனுப்பப்படுகின்றன. ஆனால், வாங்கப்படாத பொருள்களும் வாங்கப்பட்டதாகக் குறுஞ்செய்திகள் வருவதாக குடும்ப அட்டைதாரர்கள் தெரிவிப்பதாகச் செய்திகள் வருகின்றன. இவ்வாறு ஓரிரு பொருள்களை வாங்கிச் செல்பவர்களின் கைப்பேசிகளுக்கும் அனைத்துப் பொருள்களையும் பெற்றுக் கொண்டதாகக் குறுஞ்செய்திகள் அனுப்பப்படுவதன் மூலம் அந்தப் பொருள்கள் கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாகவும், இதில் அரசியல் தலையீடு இருப்பதாகவும், அரசுக்குக் கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

இதேபோன்று, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சேமிப்புக் கிடங்குகளிலிருந்து நியாய விலைக் கடைகளுக்கு ஒவ்வொரு மாதமும் அரிசி, துவரம் பருப்பு, சர்க்கரை, பாமாயில் போன்ற பொருள்கள் அனுப்பப்படுவதாகவும், அவ்வாறு அனுப்பப்படும் பொருள்களில் ஒவ்வொரு மூட்டையிலும் குறைந்தபட்சம் இரண்டு கிலோ எடை குறைவாக இருப்பதாகவும், அதாவது மாதந்தோறும் பதினைந்தாயிரம் டன் தானியங்கள் குறைவாக விநியோகிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலமும் கோடிக்கணக்கான ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நியாயவிலைக்கடை
நியாயவிலைக்கடை
க. தனசேகரன்

இவற்றைத் தடுத்து நிறுத்தினாலே அரசுக்குக் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் கிடைக்கும் என்றும், குடும்ப அட்டைதாரர்களுக்கும் சரியான எடையில் பொருள்கள் கிடைக்க வழிவகை செய்யவேண்டும் என்றும் பொதுமக்கள் கருதுகிறார்கள். எனவே, முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு, நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்குகளிலும், நியாய விலைக் கடைகளிலும் நடைபெறும் முறைகேடுகளை உடனடியாகத் தடுத்து நிறுத்தி, சரியான எடையில் பொருள்கள் பொதுமக்களுக்குக் கிடைக்க வழிவகை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism