Published:Updated:

`கூடங்குளம் அணுக்கழிவு மையத்துக்கு திமுக பச்சைக்கொடி காட்டிவிட்டதா என சந்தேகம்' - ஓ.பி.எஸ் அறிக்கை

ஓபிஎஸ்

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பது மிகவும் ஆபத்தானது என ஓ.பி.எஸ் தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளார்.

`கூடங்குளம் அணுக்கழிவு மையத்துக்கு திமுக பச்சைக்கொடி காட்டிவிட்டதா என சந்தேகம்' - ஓ.பி.எஸ் அறிக்கை

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பது மிகவும் ஆபத்தானது என ஓ.பி.எஸ் தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளார்.

Published:Updated:
ஓபிஎஸ்

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பது தொடர்பாக அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ``திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் 1,000 மெகாவாட் உற்பத்தித்திறன் கொண்ட இரண்டு அணு அலகுகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில், மூன்று மற்றும் நான்காவது அணு அலகுகள் அமைக்கவும் இந்திய அணுசக்திக் கழகம் அனுமதி அளித்துள்ளது. அணு உலைகளில் இருந்து உற்பத்தியாகும் கழிவுகளை உலைக்கு வெளியே சேமித்து வைப்பதற்கான `Away From Reactor' மையத்தை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டபோது இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

இந்தச் சூழ்நிலையில், மூன்றாவது மற்றும் நான்காவது அணு அலகுகள் நடைமுறைக்கு வந்தபிறகு, அதிலிருந்து வெளியேறும் அணுக்கழிவுகளை உலைக்கு வெளியே சேமித்து வைப்பதற்கான Away From Reactor மையத்தை அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி விளம்பரம் இணையதளம் வழியாக இந்திய அணுசக்திக் கழகம் வெளியிட்டது. அதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் 24-02-2022 அன்று திறக்கப்படவுள்ளன. இது மிகுந்த கவலை அளிக்கக்கூடியது. மேலும் உள்ளூர் மக்களை மிகுந்த பாதிப்புக்கு உள்ளாக்கும் செயலாகும்.

மு.க.ஸ்டாலின் கடிதம்
மு.க.ஸ்டாலின் கடிதம்

தற்போது, அணுமின் நிலைய வளாகத்திற்குள்ளேயே கழிவுகளை சேமித்து வைப்பதற்கான இடத்தை தேர்வு செய்ய இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் அனுமதி வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக கதிர்வீச்சு தண்ணீரிலும், காற்றிலும் பரவி பல விதமான நோய்களுக்கு அப்பகுதி மக்கள் ஆளாவார்கள் என்றும், மிகுந்த ஆபத்தானது என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

அணுக்கழிவு மையம் அமைக்கப்படுவதை தொடக்கத்திலேயே எதிர்க்காமல் தி.மு.க அரசு மவுனமாக காத்து வருவதைப் பார்த்தால், இத்திட்டத்திற்கு பச்சைக்கொடி காட்டிவிட்டதோ என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளது. மக்களுக்காகத்தான் திட்டங்களே தவிர, திட்டங்களுக்காக மக்கள் அல்ல. கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைவதை தமிழ்நாடு முதலமைச்சர் தடுத்து நிறுத்த வேண்டும் கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.