Published:Updated:

சிகாகோவிலிருந்து ஓ.பி.எஸ். தாத்தா! - ஜாலி மொமெண்ட்ஸ்

சிகாகோவில் நடைபெற்ற விழாவில், துணை முதல்வர் ஓ.பி.எஸ்ஸுக்கு 'ரைசிங் ஸ்டார்' விருதும் தங்கத் தமிழ்மகன் விருதும் வழங்கப்பட்டுள்ளன.

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்

சிகாகோ நகரில் பத்தாவது உலகத் தமிழ் மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இதையொட்டி நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்துகொண்ட துணை முதல்வர் ஓ.பி.எஸ்ஸுக்கு ‘இன்டர்நேஷனல் ரைசிங் ஸ்டார் ஆஃப் தி இயர்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்

சிகாகோ நகரிலுள்ள இந்தியத் துணைத் தூதர் சுதாகர் தலேலா, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் டேனி டெவிஸ் உட்பட பலரும் கலந்து கொண்ட இவ்விழாவில், தேனி எம்.பி-யும் ஓ.பி.எஸ் மகனுமான ஓ.பி.ரவீந்திரநாத் பேசுகையில், "தமிழ்நாட்டுல இருந்து அமெரிக்காவுக்குக் கிளம்பினப்போ, இன்னொரு ஊருக்கு போறோமே எப்படி இருக்குமோனு ஒரு சின்ன பதற்றம் இருந்தது. ஆனா, நம்ம ஊருல உறவுக்காரங்க மத்தியில இருக்குற உணர்வைத்தான் இங்க உணர்கிறேன். சொந்த ஊர்ல, சொந்த வீட்டுல இருக்குற மாதிரிதான் இருக்கு.

வாழ்க்கையில முன்னேறிய நிலைமையில உங்களையெல்லாம் பார்க்கிறது சந்தோஷமா இருக்கு. நான் இப்பதான் என்னுடைய முதல் தேர்தலைச் சந்திச்சு வெற்றி பெற்றிருகிறேன். அதுவும் ஆளும்கட்சியிலிருந்து ஒரே ஒரு ஆளாகத்தான் நாடாளுமன்றத்துக்குள் நுழைஞ்சிருக்கேன். நடந்து முடிஞ்ச கூட்டத்தொடர்'ல அறிமுகப்படுத்தப்பட்ட 33 மசோதாக்களில், 28 மசோதாக்களில் 90 நிமிடங்களுக்கு மேலே நான் பேசியிருக்கேன். இன்றைக்கு தமிழ்நாட்டுல முதல்வர், துணை முதல்வர் தலைமையில் அம்மாவோட அரசு நடக்குது. நீங்க எல்லோரும் தமிழ்நாட்டுல வந்து முதலீடு பண்ணணும். இதற்கு, இந்திய அரசு மூலமாகத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்றதுக்கு நான் தயாராக இருக்கிறேன்” என்று பேசி முடிக்க, அரங்கில் கைதட்டல் அதிர்ந்தது.

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்
`சர்வாதிகாரியாக நான் செயல்படுவேன்!' - மு.க.ஸ்டாலின் சொன்னது குறித்து கனிமொழி விளக்கம்

`ரைசிங் ஸ்டார்’ விருதைப் பெற்றுக்கொண்ட ஓ.பி.எஸ், "தமிழ்நாட்டுல வளமும் வாய்ப்பும் குவிந்துள்ளது. நீங்க எல்லோரும் அங்க முதலீடு செய்ய முன்வரணும். உங்களுக்குத் தேவையான அத்தனை உதவிகளையும் செய்வதற்கு நான் தயார இருக்கிறேன். தமிழக அரசும் தயாரா இருக்கு. தமிழக அரசின் சார்பாகவும் தமிழக மக்களின் சார்பாகவும் எனக்கு வழங்கப்பட்டுள்ள ரைசிங் ஸ்டார் விருதைப் பெற்றுக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.

ஓ.பி.எஸ் உடன் போட்டோ எடுத்துக்கொள்ள குடும்பம் குடும்பமாக சிகாகோ நகர்வாழ் தமிழர்கள் முந்தியுள்ளனர். தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த செந்தமிழ்ச்செல்வன் கூறுகையில், "மைனஸ் இரண்டு டிகிரி குளிரடிப்பதால், தடிமனான பேன்ட், ஷர்ட், கோட் போட்டுக்கொள்ளும்படி நாங்கள் கூறினோம். ‘அதெல்லாம் வேணாம்ப்பா, எனக்கு வேட்டி சட்டை கட்டுற மாதிரி வராது’ என்று மறுத்த ஓ.பி.எஸ், ஓவர் கோட்டை மட்டும் போட்டுக் கொண்டார். சிகாகோ தொழிலதிபர்களைச் சந்தித்தபோது மட்டும் கோட் சூட் போட்டுக்கொண்டார்.

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்

ஓ.பி.எஸ்ஸிடம் பேசிக்கொண்டிருந்த பெண் ஒருவர் ஜெயலலிதாவின் மறைவு பற்றி விசாரிக்கவும் அவர் முகம் வாடிவிட்டது. `எவ்வளவோ போராடினோம், கடைசி வரைக்கும் அம்மாவைக் காப்பாற்ற முடியல. அவங்க இருந்திருந்தா இந்நேரம் ரொம்ப நல்லாயிருந்திருக்கும்’ என்று வருத்தப்பட்டார்.

`மைனஸ் டிகிரி குளிர்; வேட்டி, சட்டை!' - சிகாகோவில் ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்

அருகிலிருந்த அமெரிக்கரான சிகாகோ மாநகராட்சி நிர்வாகி, ‘யாரை அம்மாவென்று சொல்கிறீர்கள்?’ எனக் கேட்க, தன் சட்டைப் பையில் இருந்து ஜெயலலிதாவின் போட்டோவை எடுத்துக்காட்டிய ஓ.பி.எஸ், `இவங்கதான் எங்க அம்மா’ என்று கண்கள் கலங்க, சில நிமிடங்களுக்கு நிசப்தம் நிலவியது. அ.தி.மு.க கரைவேட்டியில் நம்ம ஊர்க்காரர் ஒருவரைப் பார்ப்பதற்கு உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஓ.பி.எஸ் உடன் பலரும் குடும்பம் குடும்பமாக செல்ஃபி எடுத்துக் கொண்டனர்” என்றார்.

இந்நிகழ்ச்சியை முடித்துக்கொண்ட ஓ.பி.எஸ், சிகாகோ தமிழ்ச்சங்கம் ஏற்பாடு செய்திருந்த குழந்தைகள் தின விழாவில் கலந்துகொண்டார். அங்கு அவருக்குத் ‘தங்கத் தமிழ்மகன்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. குழந்தைகளைப் பார்த்தவுடன் குஷியான ஓ.பி.எஸ், அவர்களின் குடும்பம் குறித்து கேட்டுள்ளார்.

விருது
விருது
விருது
விருது
ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்

சில குழந்தைகள், ‘நீங்க எங்க தாத்தா மாதிரி நெத்தில விபூதி பொட்டு வச்சிருக்கீங்க’ என சிரித்தபடி கூற, `என்னையும் தாத்தான்னே அழைங்க கண்ணுங்களா’ என்று நெகிழ்ந்துவிட்டாராம். குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகளை கண்டு ரசித்துவிட்டு, இரவு நெடுநேரம் கழித்துதான் அறைக்கு உறங்கச் சென்றுள்ளார்.